Contact Us

Tips Category View

நன்னாரி சர்பத்

(ஆத்மரட்சாமிருதம்)

தேவையான சரக்குகள் :
1. நன்னாரி                -100 கி
2. சர்க்கரை               -200 கி

செய்முறை :
நன்னாரி வேரைப் பொடித்து தண்ணீரில் கலந்து கஷாயமாக எடுத்து சீனி கலந்து காய்ச்சி பாகுபதத்தில் சீசாவில் அடைத்து பத்திரப்படுத்தவும்.

அளவு: 
20 மி.லி. சர்பத்தில் 60 மி.லி. தண்ணீர் கலந்து அருந்தவும்.

தீரும் நோய்கள் :
மேக காங்கை, பிரமேகம், நீர்ச்சுருக்கு, நீர்க்கட்டு, கைகால் காந்தல், கண்ணெரிவு, நாவறட்சி  தீரும், தேகம் குளிரும்.