மருந்துச் சத்துக்களைக் கொண்டு செறிவூட்டிய எண்ணெய்க்குத் தைலம் என்று பெயர்.
தைலம் என்பது உண்மையில் எள்ளின் நெய்யைக் குறித்தாலும் இங்கு ஆகு பெயரால் எள்ளின் நெய்யால் கிரகித்துக் கொள்ளப்பட்ட மருந்துச் சத்துக்கள் செரிந்த மருந்துக்கு தைலம் எனப்படும்.
இம்முறையில் நோய் தீர்க்கும் மருந்துகளின் சாறுகள் கியாழங்கள், சூரணங்கள், கற்கங்கள், பால் ஆகியன எண்ணெயுடன் குறிப்பிட்ட செய்முறைப்படி சேர்க்கப்பட்டு அடுப்பிலேற்றி எரித்துக் காய்ச்சி வடித்து எடுத்துக் கொள்ளப்படுகின்றன. இந்த செய்முறையின் போது மருந்து சரக்குகளின் பிணி நீக்கும் சத்துப் பொருட்கள் எண்ணைய்ப் பொருள்களால் கலந்து கொள்ளப்படுகின்றன.
தைலங்களைத் தயாரிக்க கற்கம், திரவம், நெய்ப் பொருள் என்ற மூன்று பொருட்கள் தேவைப்படுகின்றன.
கற்கம்:
நோய் நீக்கும் மருந்துச் சரக்குகள் நன்கு பொடியாக்கப் பட்டோ அல்லது விழுது போன்று அரைக்கப்பட்டோ இருக்கும் நிலையில் கற்கம் என்று அழைக்கப்படுகின்றன.
திரவம் :
கற்கம் நன்கு கரைந்து மருந்தாகவும், நெய்ப் பொருட்களின் மருந்துச் சத்துக்களை கிரகித்துக் கொள்ளும் தன்மை மேம்படவும் சேர்க்கப்படும் சாறு வகைகள், கஷாயங்கள், மாமிச ரசங்கள், நீர், பால், தயிர், மோர் போன்ற நீர்ம ஊடகங்களுக்கு திரவம் என்று பெயர்.
நெய்ப் பொருட்கள் :
தைலம் காய்ச்சும் போது மருந்து சரக்குகளில் இருந்து நோய் தீர்க்கும் சத்துப் பொருட்களை கிரகித்து வைத்துக் கொள்வதற்காகச் சேர்க்கப்படும் பலவிதமான தாவர எண்ணெய்கள், நெய், விலங்கின் கொழுப்புகள் ஆகியவற்றுக்கு நெய்ப்பொருள் என்று பெயர்.
மேற்கூறிய மூன்று பொருட்களையும் ஒன்று சேர்த்து அடுப்பிலேற்றி முறைப்படி காய்ச்சும் போது அவற்றிலுள்ள நீர்ச்சத்து முழுவதும் சுண்டி விடுவதுடன் மருந்துச் சரக்குகளின் பிணி நீக்கும் சத்துக்களும் எண்ணெய்களால் கிரகித்துக் கொள்ளப்படவும் ஏதுவாகிறது. பின்னர் இவற்றை வடிகட்டிப் பயன்படுத்த வேண்டும்.
பொதுவாகத் தைலம் காய்ச்ச நல்லெண்ணையே பயன்படுத்தப்பட்டாலும் தேங்காய் எண்ணெய், விளக் கெண்ணெய், கடுகெண்ணெய், வேப்பெண்ணெய் போன்றவைகளும் தேன், மெழுகு, முட்டையின் மஞ்சட்கரு, வாலுளுவையரிசி ஆகியனவற்றிலிருந்து சிதைத்து வடித்தெடுக்கப்படும் எண்ணெய்களும் தைலம் காய்ச்சப் பயன்படுத்தப்படுகின்றன.
செய்முறை :
தைலங்கள் செய்யப் பலவிதமான செயல்முறைகள் உள்ளன.
கொதி நெய் தயாரிக்கும் முறை :
மருந்துச் சரக்குகளை திரவ பதார்த்தங்களுடன் சேர்த்துக் கொதிக்க வைத்து கொதி நெய் தயாரிக்கப்படுகிறது. பெரும்பாலான தைலங்கள் செய்யப்படுகின்றன. இம்முறைப்படிதான். இம்முறையில் எண்ணெய், கியாழம், பால், சாறு, வகைகள் சூரணித்த சரக்குகள், கற்கம் ஆகியன ஒரு பாத்திரத்திலிடப்பட்டு கொதிக்க வைக்கப்படுகின்றன. நீர்ப்பொருள் மற்றும் வற்றிய நிலையில் உரிய பதத்தில் இறக்கி வடிகட்டி எடுத்துக் கொள்ளப் படுகின்றன.
நன்கு பாகமடைந்த நிலைக்கு அறிகுறியாக அக்கலவைகளில் சிறு மாறுதல்கள் தோன்றுகின்றன. தைலத்தின் மேல் பாகத்தில் நுரை கிளம்பும் போது கற்கத்தில் சிறிது எடுத்து விரல்களால் உருட்ட அது திரி போன்று ஆவதுடன் விரல்களையும் பற்றாது. மேலும் அந்த கற்கத்தை சிறிதளவு நெருப்பிலிட்டால் சிடு சிடுப்பு போன்ற சப்தம் உண்டாகாமல் தீவிரமாகப் பற்றியெரியும். பொதுவான அறிகுறிகள் இவ்விதமிருப்பின் சில குறிப்பிட்ட மருந்து உபயோகங்களைக் கருத்தில் கொண்டும் கற்கத்தின் பாகத்திற்கு ஏற்பவும் மிருதுபாகம், மயனபாகம் என்கிற மத்திய பாகம், கரபாகம் என்கிறகரகரப்புப் பாகம் என்ற 3 விதமான பாகங்களில் தைலங்கள் தயாரிக்கப் படுகின்றன.
பொதுவாக மிருது பாகத்தில் தயாரித்த தைலங்களை வாத நோய்களில் உட்கொள்வதற்கும் மயனபாகம் எனும் மத்திய பாகத்தில் தயாரித்த தைலங்களை பித்த நோய்களுக்கான வெளியே உபயோகத்திற்காக கரபாகம் என்கிற கரகரப்புப் பாகத்தில் தயாரித்த தைலம், தலைக்குத் தேய்த்துக் கொள்ளவும், கப நோய்களுக்குப் பயன்படுத்து வதும் நடைமுறையில் உள்ளது. பாகத்தை நிர்ணயித்த கல்கத்தை விரல்களால் அழுத்திப் பார்ப்பது வழக்கம்.
புடநெய் அல்லது குழிப்புட நெய் தயாரிக்கும் முறை :
மருந்துச் சரக்குகளை குழிப்புடப் பொறியில் இட்டு ட்டமிடும் செய்கைக்கு உட்படுத்தி பெறப்படுவது புட நெய் அல்லது குழிப்புட நெய். இம்முறையில் மருந்துச் சரக்குகள் சிதைத்து வடித்தல் என்ற செய்முறைக்கு உட்படுத்தப்படு கின்றன. சில தைல வகைகளை குழித்தைல முறைப்படி தயாரித்துக் கொள்வதே மிகவும் நல்லது என்ற அடிப்படையில் நீண்ட நாட்களாகவே இம்முறை நடைமுறையில் இருந்து வருகிறது. செய்முறையில் கூறப்பட்டுள்ள மருந்துச் சரக்குகளை முதலில் நன்கு பொடித்துக் கொள்ள வேண்டும். ஒரு பெரிய மண்பானையின் அடிப்பாகத்தில் சிறு சிறு துவாரங்கள் இட்டு அத்துவாரங்களின் வழியே கம்பிகளைப் பொருத்திக் கட்டி அவைகள் குடத்திற்கு வெளியே ஒன்று கூடும்படி அமைத்துக் கொள்ள வேண்டும். பொடித்து வைத்துள்ள மருந்துச் சரக்குகளை மேற்படி மண்குடத்திலிட்டு குடத்தின் அளவுக்கு ஏற்ப வெட்டப் பட்டிருக்கும் ஒரு குழியில் வைத்து குடத்தின் அடிப்புறத்தின் கீழ் மற்றொரு சிறு மண்பானையும் வைக்க வேண்டும். செய்முறையில் குறிப்பிட்டுள்ள அளவு வரட்டிகளைக் கொண்டு குடத்தின் பக்கங்களையும் மேற்பாகத்தையும் பரப்பி மூடி, நான்கு பக்கங்களிலும் நெருப்பு வைக்கவும். வரட்டிகள் எரிந்து ஆறிய பின்னர் எடுத்துப் பார்க்க அடியிலுள்ள மண்பாண்டத்தில் குழித் தைலம் இறங்கி இருக்கும். தைலங்கள் பயன்படுத்தும் முறை : சில தைல வகைகள் உள்ளுபயோகத்திற்கு மட்டும் கொடுக்கப்படுகின்றன. சில தைலங்கள் வெளிப்புற உபயோகத்திற்கு மட்டுமே கொடுக்கப்படும். சில தைலங்கள், உள்ளுபயோகம், வெளியுபயோகம் என்ற இரண்டுக்குமே பயனாகிறது. தைலங்களைப் பிடித் தைலமாகப் பயன்படுத்தும் போது உடலின் மயிர்க் கால்கள் எனப்படும் கேச பூமியில் பக்கமாகவே தடவிப் பிடிக்க வேண்டும். மயிர்க் கால்களுக்கு எதிர்த் திசையில் தடவக் கூடாது. தைலம் தடவிப் பிடித்தவுடன் ஒத்தடம் கொடுப்பது மிகவும் நல்லது.
தூய்மையான ஈரப்பதமற்ற குறுகிய வாயை உடைய கண்ணாடி கொள்கலன்களிலோ அல்லது பாலிதீன் கொள்கலன்களிலோ இவற்றைப் பாதுகாத்து வைக்க வேண்டும். கொள்கலன்களின் மீதே இவற்றைப் பயன்படுத்த வேண்டிய குறிப்புகள் குறிப்பிட வேண்டும். முறைப்படி பாதுகாத்து வந்தால் தைலங்கள் ஓராண்டு வரை தமது நோய் தீர்க்கும் திறனை இழக்காமல் இருக்கும்.
குறிப்பு :
இப்போது சில ஆராய்ச்சியாளர்கள் தைலம் எனப்படும் மருந்து எண்ணெய் உடலில் தேய்க்கும் போது அது தோலில் உள்ள துவாரங்கள் வழியே செல்ல வாய்ப்பில்லை எனவும் தைலம் என்பது நிவாரணம் தரக்கூடிய மருந்து அல்ல எனவும் கூறுகின்றனர். ஆனால் இக்கருத்து உண்மையல்ல. ஏனெனில் மருந்துப் பொருட்களை எண்ணெயில் போட்டு காய்ச்சும் போது மருந்துப் பொருட்களில் உள்ள மிக நுண்ணிய நோய் நீக்கும் மருத்துவ குணம் கொண்ட அணுக்கள் மருந்துப் பொருட்களில் இருந்து எண்ணெயில் கிரகிக்கப்படுகின்றன. ஏனெனில் எல்லாப் பொருட்களும் மிக நுண்ணிய அணுக்களின் கூட்டமாகும். ஒரு அணு தமது தோலில் உள்ள துவாரத்தை விட 100 மடங்கு சிறியது. எனவே மருந்தணுக்கள் கிரகிக்கப்பட்ட எண்ணெய் என்று சொல்லப் படுகின்ற தைலங்களை உடலில் தேய்க்கும் போது மருந்து அணுக்கள் தோலில் உள்ள துவாரங்கள் வழியே உட்சென்று நோயை நிவர்த்தி செய்கிறது.
தேவையான பொருட்கள் :
1. செம்பருத்தி பூ சாறு -200 மி.லி.
2. அவுரி இலைச்சாறு -200 மி.லி.
3. துளசிச்சாறு -100 மி.லி.
4. அருகம்புல்சாறு -100 மி.லி.
5. மருதாணி இலைச்சாறு -100 மி.லி.
6. கருவேப்பிலைச்சாறு -200 மி.லி.
7. அகத்திப் பூ சாறு -200 மி.லி.
8. வெள்ளை மிளகு -10 கி
9. அதிமதுரம் -10 கி
10. தேங்காய் எண்ணெய் - 100 மி.லி.
11. வல்லாரை சாறு -200 மி.லி.
தயாரிக்கும் விதம் :
மேற்கண்ட சாறுகளையும் வெள்ளை மிளகு மற்றும் அதிமதுரம் தூளையும் தேங்காய் எண்ணெயில் இட்டுக் காய்ச்சிப் பதத்தில் வடித்து வைக்கவும்.
உபயோகம் :
தினமும் தலைக்கு நன்றாக மயிர்க் கால்களில் படும்படி தேய்த்து வரவும்.
தீரும் நோய்கள்:
முடி உதிர்வதைத் தடுக்கிறது. இளநரையைப் போக்குகிறது.
தேவையான பொருட்கள் :
1. புங்க எண்ணெய் -200 மி.லி.
2. வேப்ப எண்ணெய் -200 மி.லி.
3. இலுப்பை எண்ணெய் -200 மி.லி.
4. நல்லெண்ணெய் -200 மி.லி.
5. வெள்ளைப்பூண்டு -100 கி
6. வசம்பு -100 கி
7. சுக்கு -100 கி
8. பெருங்காயம் -100 கி
9. மிளகு -100 கி
10. திப்பிலி -100 கி
11. ஓமம் -100 கி
12. சதகுப்பை -100 கி
13. கிராம்பு -100 கி
14. சித்திரமூலம் -200 கி
15. தழுதாழைச்சாறு -100 மி.லி.
16. கற்பூரம் -100 மி.லி.
17. மெந்தால் -40 மி.கி.
18. தைமால் -20 மி.கி.
19. நீலகிரித் தைலம் -100 மி.லி.
செய்முறை :
எண்ணெய் மற்றும் சாறுகளைத் தவிர மற்ற சரக்குகளைப் பொடித்து சலித்து பின் எண்ணெய் மற்றும் சாறுகளுடன் கலந்து காய்ச்சித் தைலம் பதத்தில் வடித்து வைக்கவும்.
உபயோகம் :
வெளி உபயோகத்திற்கு மட்டும்.
தீரும் நோய்கள்:
மூட்டு வலி, வீக்கம், நரம்பு வலி, சுளுக்கு, தசைப் பிடிப்பு மற்றும் வாத வலிகள் போன்றவைகளை நீக்க ஏற்றது.
தேவையான பொருட்கள்:
1. அருகன் வேர்ச்சாறு -400 மி.லி.
2. நல்லெண்ணெய் -1000 மி.லி.
3. கோரைக் கிழங்கு -35 கி
4. பால் -400 மி.லி.
5. அமுக்கரா -35 கி
6. பூமி சர்க்கரைக் கிழங்கு -35 கி
செய்முறை :
அருகன் வேர்ச்சாறு, கோரைக்கிழங்கு, பால், அமுக்கரா இவற்றை நல்லெண்ணெயில் விட்டு காய்ச்சி பதத்தில் எடுத்து பத்திரப்படுத்தவும்.
உபயோகம் :
வெளி உபயோகம்.
தீரும் நோய்கள் :
எல்லாவிதமான சர்ம வியாதிகள், காயங்கள் மற்றும் விஷக் கடிகள்.
தேவையான பொருட்கள்:
1. கொம்பரக்கு -1.12 கி. கி
2. சந்தனம் -35 கி
3. கஸ்தூரி மஞ்சள் -35 கி
4. கோஷ்டம் -35 கி
5. இலவங்கப்பட்டை -35 கி
6. இலவங்கப்பத்திரி -35 கி
7. பச்சிலை -35 கி
8. அதிமதுரம் -35 கி
9. சடாமஞ்சில் -35 கி
10. பூலாங் கிழங்கு -35 கி
11. கடுகு ரோகிணி -35 கி
12. ஏலம் -35 கி
13. சதகுப்பை -35 கி
14. கிளியூரல்பட்டை -35 கி
15. பூச்சாந்திரப்பட்டை -35 கி
16. சீரகம் -35 கி
17. கருஞ்சீரகம் -35 கி
18. மெருகன் கிழங்கு -35 கி
19. பசுவின் பால் -6.4 லி.
20. நல்லெண்ணெய் -6.4 லி.
21. தயிர் தெளிவு - தேவையான அளவு
22. செவ்வல்லிக் கொடி -35 கி
செய்முறை:
கொம்பரக்கைத் துணியில் முடிந்து கட்டி தண்ணீரில் மூழ்க வைத்து எரித்து சுண்ட வைத்துக் கியாழத்தை வடித்து வைக்கவும். 2-17 வரையுள்ள சரக்குகளைப் பாலில் அரைத்து நல்லெண்ணெய் மற்றும் தயிர் தெளிவுடன் கலந்து காய்ச்சித் தைல பதத்தில் இறக்கி வடித்து வைக்கவும். முப்பது நாட்கள் வரை உபயோகிக்கவும். நெற்புடத்தில் வைத்தெடுத்து
உபயோகிக்கும் முறை :
தலைக்கும், உடலுக்கும் தேய்க்கவும்.
தீரும் நோய்கள் :
சுரம், உடல் கடுப்பு, சந்திராவர்த்தம், சூர்யா வர்த்தம், மண்டை சூலை, இரைப்பிருமல், கற்றாழை நாற்றம், பல்வேர் வீக்கம், குரல் கம்மல், நாட்பட்ட காய்ச்சல் ஆகியன குணமாகும்.
தேவையான பொருட்கள்:
1. வெட்பாலை இலை -200 கி
2. வில்வ இலை -200 கி
3. தேங்காய் எண்ணெய் -1 லி.
செய்முறை :
வில்வ இலை மற்றும் வெட்பாலை இலையை தேங்காய் எண்ணெயிலிட்டு சூரிய புடத்தில் வைத்து எடுக்கவும்.
உபயோக முறை :
வெளி உபயோகம்.
தீரும் நோய்கள் :
எல்லா விதமான தோல் வியாதிகள், அரிப்பு, காளாஞ்சகப்படை முதலியன.
தேவையான பொருட்கள் :
1. ஆலம்பால் சாறு -40 மி.லி.
2. நத்தைச்சூரிச்சாறு -40 மி.லி.
3. குறுந்தொட்டி வேர் -10 மி.லி.
4. நன்னாரி வேர் -10 மி.லி.
5. சிவதை வேர் -10 மி.லி.
6. குங்கிலியம் -20 மி.லி.
7. நல்லெண்ணெய் -1லி
செய்முறை :
மேற்கண்ட சரக்குகளை நல்லெண்ணெயில் இட்டுக் காய்ச்சி பதத்தில் இறக்கி வடிகட்டி பத்திரப்படுத்தவும்.
உபயோக முறை :
வெளி உபயோகத்திற்கு மட்டும்.
தீரும் வியாதிகள் :
வர்மப் பிடிப்பு மற்றும் எல்லாவித எலும்பு முறிவுகளுக்கும் எலும்புகளின் பலத்திற்கும் சிறந்தது.
செய்முறை :
கீழ்புறம் சிறு துவாரங்களிலிட்டு கம்பிகள் சொருகிய ஒரு பானையில் முக்கால் பாகம் அளவுக்கு முற்றிய தேங்காய் சிரட்டைகளைச் சிறு சிறு துண்டுகளாக உடைத்துப் போட்டு மூடி குழித் தைல விதிப்படி புடமிட்டுத் தைலம் தயாரிக்கவும்.
உபயோகிக்கும் முறை :
வெளி உபயோகம். சம அளவு தேங்காய் எண்ணெயுடன் கலந்து பாதிக்கப்பட்ட இடங்களில் மட்டும் உபயோகிக்கலாம். மற்ற இடத்தில் பட்டால் எரிச்சலைத் தரும்.
தீரும் நோய்கள்:
சொரி, படை, சரும வியாதிகள் குணமாகும்.
தேவையான பொருட்கள்:
1. விலாமிச்சம் வேர் -350 கி
2. சந்தனம் -350 கி
3. ஆவாரம்பட்டை -350 கி
4. நல்லெண்ணெய் -800 கி
5. நன்னாரி வேர் -35 கி
செய்முறை:
சந்தனம், விலாமிச்சம் வேர், ஆவாரம்பட்டை முதலிய வற்றை இடித்து 1 லி நீரில் போட்டு எட்டிலொன்றாய் வழிய வைத்து வடித்து அத்துடன் நல்லெண்ணெய் விட்டு அதில் நன்னாரி வேர்ப்பட்டையை அரைத்துப் போட்டு காய்ச்சி வடிக்கவும்.
உபயோகிக்கும் அளவு :
வெளி உபயோகத்திற்கு மட்டும். ஆண்மைக் குறைவிற்கு ஆண் குறியில் தடவவும்.
தீரும் வியாதிகள்:
ஆண்மைக் குறைவு, மலட்டுத் தன்மை, துர்நாற்றம் அதிக வியர்வை, தலைவலி, கண்காந்தல் ஆகியவை நீங்கும்.
தேவையானவை பொருட்கள்:
1. சுக்கு -2.800 கி.கி
2. பசும்பால் -3லி
3. நல்லெண்ணெய் -3 கி.கி.
4. சிற்றரத்தை -8.75 கி
5. மிளகு -8.75 கி
6. திப்பிலி -8.75 கி
7. கோரைக்கிழங்கு -8.75 கி
8. மஞ்சிட்டி வேர் -8.75 கி
9. கடுக்காய் -8.75 கி
10. நெல்லி வற்றல் -8.75 கி
11. தான்றிக்காய் -8.75 கி
12. தண்ணீர்விட்டான் கிழங்கு -8.75 கி
13. அகில் கட்டை -8.75 கி
14. எருக்கன் வேர்ப்பட்டை -8.75 கி
15. கடுகுரோகிணி -8.75 கி
16. கோஷ்டம் -8.75 கி
17. கொடிவேலி வேர் -8.75 கி
18. தேவதாரு கட்டை -8.75 கி
19. சந்தனக்கட்டை -8.75 கி
20. வெள்ளை குங்கிலியம் -8.75 கி
21. செவ்வியம் -8.75 கி
22. ஆமணக்கு வேர் -8.75 கி
23. வெள்ளை லோத்திரப்பட்டை -8.75 கி
24. பேரீச்சங்காய் -8.75 கி
25. உலர் திராட்சை -8.75 கி
26. இந்துப்பு -2 கிராம்
27. குங்குமப்பூ -2 கிராம்
28. கஸ்தூரி -2 கிராம்
29. சுத்தமான நீர் -24 லி.
செய்முறை :
தோல் நீக்கி சுக்கை தண்ணீரிலிட்டு காய்ச்சி 6 லிட்டராக சுண்ட வைத்து, வடித்து அத்துடன் பசுவின் பால் நல்லெண்ணெய் சேர்த்து இத்துடன் எஞ்சியுள்ள சரக்கினை பொடித்துக் கலந்து, காய்ச்சி பதத்தில் வடிக்கவும். வடிகலத்தில் கஸ்தூரி, குங்குமப்பூ, தூள் செய்து கலந்து வைக்கவும். இத்தைலத்தை ஒரு மாதம் வரை நெற்புடத்தில் வைக்கவும்.
உபயோகிக்கும் முறை:
வெளிப்பூச்சு மற்றும் தேய்த்தும் குளிக்கலாம்.
தீரும் நோய்கள்:
• உடம்பில் தேய்க்க ஆமவாதமும் ஆவர்த்த வாதமும் தீரும்.
• மூக்கில் விட தலை நோயும் பீனிசமும் தீரும்.
• கொப்பளிக்க பல்லரணை தீரும்.
• காதிலிட செவிக்குத்தல் தீரும்.
• தினமும் காலையில் தேய்க்க தலைவலி, தலை நோய்கள் தீரும்.
தேவையான பொருட்கள்:
1.சீரகம் -1500 கி
2.நல்லெண்ணெய் -1.6 லி
செய்முறை :
சீரகத்தை இடித்து நீரிற் போட்டு எட்டுக்கு ஒன்றாய் கியாழம் செய்து நல்லெண்ணெயில் சேர்த்து காய்ச்சி வடித்து வைக்கவும்.
உபயோக முறை :
வெளி உபயோகத்திற்கு தலைக்குத் தேய்த்துக் குளிக்கவும்.
தைலங்கள் தயாரிக்கும் முறைகள்
தீரும் வியாதிகள் :
பித்த மயக்கம், கண் நோய், வாந்தி, தலை வலி, மாந்தம் தீரும்.
தேவையான பொருட்கள் :
1. மஞ்சட்டி வேர் -74.1 கி
2. நன்னாரி வேர் -74.1 கி
3. சாம்பிராணி -74.1 கி
4. தேன் மெழுகு -74.1 கி
5. நல்லெண்ணெய் -925.90 மி.லி.
6. நீர் -3703.7 மி.லி.
செய்முறை :
மேற்கண்ட சரக்குகளை நல்லெண்ணெய் மற்றும் நீருடன் சேர்த்துக் காய்ச்சிப் பதத்தில் வடித்து வைக்கவும்.
உபயோக முறை :
வெளி உபயோகத்திற்கு மட்டும்.
தீரும் வியாதிகள் :
அடிபட்ட இரத்தக்கட்டு, அடிபட்ட வீக்கம், நரம்பு வலி, எரிச்சல் முதலியவைகளுக்குப் பயன்படுத்தலாம்.
தேவையானவை:
1. கரிசாலைச் சாறு -2 லி.
2. நல்லெண்ணெய் -2 லி.
செய்முறை :
கரிசாலைச்சாறு, நல்லெண்ணெய் இரண்டையும் ஒன்று சேர்த்து காய்ச்சி பதத்தில் வடித்து வைக்கவும்.
உபயோக முறை:
அரை முதல் 1 தேக்கரண்டி வீதம் உள்ளுக்கு இரு வேளைகள் உபயோகிக்கலாம். கொடுக்கலாம். ஸ்நானத்திற்கும்
தீரும் வியாதிகள் :
காசம், சுவாசம், சளியுடன் கூடிய இருமல், மூச்சுத் திணறல் ஆகியன குணமாகும்.
தேவையான பொருட்கள்:
1. இரச கற்பூரம் -4 கி
2. ஏலம் -4 கி
3. மயில் துத்தம் -4 கி
4. பால் துத்தம் -4 கி
5. கற்பூரம் -4 கி
6. சுத்தி செய்த ரசம் -4 கி
7. கார்போக அரிசி -4 கி
8. மிருதார் சிங்கி -4 கி
9. கஸ்தூரி மஞ்சள் -4 கி
10. நீரடி முத்துப்பருப்பு -4 கி
11. காட்டுசீரகம் -4 கி
12. சுத்தி செய்த கந்தகம் -4 கி
13. தேங்காய்ப் பால் -தேவையான அளவு
செய்முறை:
1 முதல் 12 வரையுள்ள சரக்குகளை நன்கு பொடித்து தேங்காய்ப் பாலில் சேர்த்து காய்ச்சி பதத்தில் வடித்து வைக்கவும்.
உபயோகிக்கும் முறை:
2-5 துளிகள் காலையில் மட்டும் பாலுடன் உள்ளுக்குள் கொடுக்கவும். மேலுக்கும் தடவலாம். கரப்பானுள்ள இடத்தில் மூன்று நாட்கள் வரை தைலத்தைத் தொடர்ந்து கோழியிறகால் தடவி வந்து நான்காம் நாள் உசிலையை அரைத்து தேய்த்து இள வெந்நீரில் குளிக்கவும்.
தீரும் வியாதிகள்:
கரப்பான், சிரங்கு, சொரி,படை,கொப்பளம் மற்றும் தோல் நோய்கள்.
தேவையான பொருட்கள்:
1. குப்பைமேனிச்சாறு - 250 மி.லி
2. தைவேளைச் சாறு - 250 மி.லி
3. கரிசாலைச் சாறு - 250 மி.லி
4. மருள் சாறு - 250 மி.லி
5. சங்கன்குப்பிச் சாறு - 250 மி.லி
6. நத்தைச்சூரிச் சாறு - 250 மி.லி
7. கோவை இலைச் சாறு - 250 மி.லி
8. கருடக் கொடிச்சாறு - 250 மி.லி
9. நன்னாசி இலைச்சாறு - 250 மி.லி
10. குருந்தொட்டி இலைச்சாறு - 250 மி.லி
11. முடக்கற்றான் சாறு - 250 மி.லி
12. வெற்றிலைச்சாறு - 250 மி.லி
13. கருஞ்சீரகம் - 5 கி
14. கார்கோல் - 5 கி
15. துத்தம் - 5 கி
16. பவளப்புற்று - 5 கி
17. கோஷ்டம் - 5 கி
18. சந்தனம் - 5 கி
19. தேசாவரம் - 5 கி
20. துருசு - 5 கி
21. ஜாதிக்காய் - 5 கி
22. சீரகம் - 5 கி
23. வெள்ளை குங்கிலியம் - 5 கி
24. ஜாதிப்பத்திரி - 5 கி
25. நல்லெண்ணெய் - 1 லி.
செய்முறை :
எண் 13 முதல் 24 வரையுள்ள சரக்குகளைப் பொடித்தும் 1-12 வரையுள்ள சாறுகளையும் நல்லெண்ணையில் கலந்து காய்ச்சவும். துத்தத்தைப் பொடித்து கலந்து பதத்தில் வடித்து பத்திரப்படுத்தவும்.
உபயோகிக்கும் முறை:
* வெளி மற்றும் உள் உபயோகம்.
* 1-2 மி.லி. வீதம் தினம் 2 வேளைகள் மூன்று நாட்கள் பாலில் அருந்தவும்.
* 3 நாட்களுக்கு பால் சாதம் தேங்காயுடன் மட்டும் உணவு சாப்பிடவும்.
தீரும் வியாதிகள்:
அடிபட்ட காயங்கள், வர்மப் பிடிப்புகள், சுளுக்கு, மண்டையடி தலைவலி முதலியவற்றிற்கு சிறந்தது.
தேவையான பொருட்கள்:
1. குறுந்தொட்டி வேர் -250 கி
2. சுக்கு -35 கி
3. மிளகு -35 கி
4. ஏலம் -35 கி
5. நல்லெண்ணெய் -800 மி.லி
செய்முறை:
குறுந்தொட்டி வேரை இடித்து 1 லிட்டர் நீரில் போட்டு கியாழம் செய்து அதில் சுக்கு, மிளகு, ஏலம் அரைத்துப் போட்டு நல்லெண்ணையுடன் காய்ச்சி வடித்து பத்திரப்படுத்தவும்.
உபயோக முறை:
வெளி உபயோகம்.
தீரும் வியாதிகள்:
வாத ரோகங்கள், கீழ் வாயு, தோள்பட்டை வலி முதலியன.
தேவையான பொருட்கள்:
1. வெள்ளாட்டுப்பால் -500 மி.லி
2. எட்டிக் கொட்டை -87.5 லி.
3. வெள்ளைப் பூண்டு -87.5 லி.
4. ஆயில் பட்டை தோல் -52.5 கி
5. நல்லெண்ணெய் -3.2 லிட்டர்
செய்முறை :
வெள்ளாட்டுப் பாலில் எட்டிக் கொட்டையை 28 மணி நேரம் ஊற வைத்தெடுத்து, சீவலாக நறுக்கிக் கொள்ளவும். பின் அத்துடன் உரித்த வெள்ளைப்பூண்டு, ஆயில் பட்டை தோல் இட்டு காய்ச்சி பதத்தில் வடித்து வைக்கவும்.
உபயோக முறை:
வெளி உபயோகம்.
தீரும் நோய்கள்:
அனைத்து வாத நோய்கள்.
தேவையான பொருட்கள்:
1. ஊமத்தன் இலைச்சாறு -3.5 லிட்டர்
2. தேங்காய் எண்ணெய் - 1.4 லிட்டர்
3. மயில் துத்தம் -350 கி
செய்முறை :
ஊமத்தன் இலைச்சாற்றை தேங்காய் எண்ணெயுடன் கலந்து காய்ச்சி சாறு ஓரளவுக்கு சுண்டியபின் துத்தத்தைப் பொடித்து எண்ணெய்யில் சேர்த்துக் காய்ச்சி பதத்தில் வடித்து வைக்கவும்.
உபயோகிக்கும் முறை:
இதனை மேல் பூச்சாக உபயோகிக்கவும். சீழ்வடியும் காதில் போடலாம். துணியில் தடவி புண்ணுக்குப் போடவும்.
தீரும் நோய்கள் :
படை, சொறி, சிரங்கு, துஷ்விரணம், ஊன் வளருதல், கசியும் படை, பிளவை, காதில் சீழ் வடிதல், ஒழுகும் விரணங்கள் ஆகியன.
தேவையான பொருட்கள்:
1. நொச்சியிலைச் சாறு -2.8 லி.
2. கரிசலாங்கண்ணிச் சாறு -2.8 லி.
3. இந்துப்பு -17.5 கி
4. சிற்றரத்தை -17.5 கி
5. திப்பிலி -17.5 கி
6. ஆமணக்கு வேர் -17.5 கி
7. குடசப்பாலை வேர் -17.5 கி
8. கிரந்திதகரம் -17.5 கி
9. சுக்கு -8.8 கி
10. கோஷ்டம் -17.5 கி
11. தேற்றான்கொட்டை -17.5 கி
12. சதகுப்பைப் -175 கி
13. வாய்விடங்கம் -17.5 கி
14. அதிமதுரம் -17.5 கி
செய்முறை:
மேற்கண்ட சரக்குகளை நன்கு இடித்து தேவையான அளவு வெள்ளாட்டுப் பாலில் அரைத்து மேற்படி சாற்றில் கரைத்து அடுப்பில் ஏற்றி காய்ச்சி, மெழுகு பதத்தில் எடுத்துக் கொள்ளவும்.
அளவு:
வெளி உபயோகம். 8 நாட்களுக்கு ஒருமுறை தலையில் தேய்த்துக் குளிக்கலாம். 4 நாட்களுக்கு ஒருமுறை ஓரிரு துளிகள் மூக்கில் (நசியம் செய்தல்) விடலாம்.
தீரும் வியாதிகள்:
மூக்கில் நீர் வடிதல், மூக்கடைப்பு, தலைக்கனம், தலையில் நீரேற்றம், ஜலதோஷம் மற்றும் அனைத்துவித பீனிச நோய்கள்.
தேவையானவை :
1. பொன்னாங்கண்ணிச் சாறு -2.8 லி.
2. நல்லெண்ணெய -2.8 லி.
3. அதிமதுரம் -70 கி
4. கரிசாலை சமூலச் சாறு -1.4 லி.
5. நெல்லிக்காய் சாறு -1.4 லி.
6. ஆவின் பால் -2.8 லி.
செய்முறை:
அதிமதுரத்தைப் பாலிலரைத்துப் போட்டு அத்துடன் சாறுகள் மற்றும் நல்லெண்ணெய் கலந்து காய்ச்சி பத்திரப்படுத்தவும்.
உபயோக முறை :
வெளி உபயோகத்திற்கும் மற்றும் தலையில் தேய்த்தும் குளிக்கலாம்.
தீரும் நோய்கள் :
எல்லாவிதமான கண் நோய்கள், காச நோய், பித்தம், உஷ்ணம் தீரும்.
தேவையானவை :
1. புங்கன் வேர்ப்பட்டை -700 கி
2. தேங்காய்ப் பால் -700 கி
3. தேங்காய் எண்ணெய் -175 கி
4. இரச கற்பூரம் -7 கி
செய்முறை :
புங்கன் வேர்ப்பட்டை, தேங்காய்ப் பால், தேங்காய் எண்ணெய் போன்ற சரக்குகளை ஒன்று சேர்த்துக் காய்ச்சி பதத்தில் பாத்திரத்தில் சுக்கி செய்த இரசக் கற்பூரத்தை போட்டு தைலத்தை ஊற்றி கலந்து வைக்கவும்.
உபயோக முறை:
வெளி உபயோகத்திற்கு மட்டும்.
தீரும் வியாதிகள் :
சொறி, சிரங்கு, புண், புரையேறும் ரணம் ஆகியன.
தேவையான பொருட்கள் :
1. அரசம் பட்டை -6 கி.கி.
2. அத்திப்பட்டை -6 கி.கி.
3. வெட்டி வேர்ப்பட்டை -6 கி.கி
4. வெட்பாலை அரிசி -1.800 கி.கி.
5. வேம்பாளம் பட்டை -600 கி
6. வேப்ப எண்ணெய் -30 கி.கி.
செய்முறை :
மேற்குறிப்பிட்ட பட்டைகளை இடித்து, பொடித்து அவற்றை வேப்ப எண்ணெயில் சேர்த்து காய்ச்சி தைலப் பதத்தில் இறக்கி வைக்கவும்.
உபயோக முறை :
வெளி உபயோகம்.
தீரும் வியாதிகள் :
பு மயிர் உதிர்ந்து வழுக்கை விழுவதைப் போக்குகிறது.
தேவையான பொருட்கள் :
1. விளக்கெண்ணெய் -1.6 லி.
2. சோற்றுக் கற்றாழைச் சாறு -1.6 லி.
3. வல்லாரைச் சாறு -800 மி.லி.
4. களிப்பாக்கு -70 கி
5. கடுக்காய் -70 கி
6. கொடிவேலி வேர் -70 கி
7. கடுகு ரோகி -70 கி
8. மிளகு -70 கி
9. வெங்காயம் -70 கி
செயல்முறை :
மேற்கண்ட மருந்துச் சரக்குகளைப் பொடித்து விளக்கெண்ணெயுடன் சேர்த்துக் காய்ச்சி தைல பதத்தில் இறக்கி வடித்து வைக்கவும்.
உபயோக முறை:
குழந்தைகளுக்கு 1.5 மி.லி. வரை பெரியவர்களுக்கு 5-10 மி.லி. வெந்நீருடன் உள்ளுக்குக் கொடுக்கவும்.
தீரும் நோய்கள் :
நீர்க்கட்டு, வாயு வீக்கம், மூலச்சூடு, வாயுத் தொல்லை, பொருமல், பித்தம் முதலிய வியாதிகளைப் போக்கும்.
தேவையான பொருட்கள்:
1. உளுந்து -1.5 கி.கி.
2. தண்ணீர் -6 லி
3. பூனைக்காலி விதைப்பொடி -4 கி
4. சதகுப்பை -4 கி
5. பேரரத்தை -4 கி
6. சுக்கு -4 கி
7. மிளகு -4 கி
8. திப்பிலி -4 கி
9. வெட்பாலைப்பட்டை -4 கி
10. இந்துப்பு -4 கி
11. அதிமதுரம் -4 கி
12. வசம்பு -4 கி
13. நல்லெண்ணெய் -1.5 லிட்டர்
14. பால் -1லிட்டர்
செய்முறை:
உளுந்தைத் தண்ணீரில் சேர்த்துக் காய்ச்சி கியாழமாக சுண்ட வைத்து, வடித்து 3 முதல் 12 வரையில் உள்ள சரக்குகளைப் பொடித்து வெள்ளாட்டுப் பாலில் அரைத்து நல்லெண்ணெய் சேர்த்துக் காய்ச்சி பதத்தில் வடித்து வைக்கவும். இந்தத் தைலத்தை தானிய புடமாக பத்து நாட்கள் வைத்து எடுக்கவும். (அதாவது தைலத்தை மண்பாத்திரத்தில் ஊற்றி நெல்லில் வைக்கவும்)
உபயோக முறை :
வெளி உபயோகத்திற்கு மட்டும்.
தீரும் வியாதிகள்:
பலவித வாத நோய்கள், நடுக்கம் மற்றும் நரம்பு சம்பந்தமான வியாதிகள் தீரும்.
தேவையானவை:
1. ஆலிவ் எண்ணெய் -10.333 மி.லி.
2. சிரட்டைத் தைலம் -20.667 மி.லி.
3. மிளகு -5.617 கி
4. எலுமிச்சம் சாறு -20.667 மி.லி.
செய்முறை:
மேற்கண்ட சரக்குகளை சேர்த்துக் காய்ச்சி தைல பதத்தில் இறக்கி வடித்து வைக்கவும்.
உபயோக முறை:
பாதித்த இடங்களில் தைலத்தைத் தேய்த்து விட்டு சூரிய ஒளியில் படும்படி சிறிது நேரம் வைக்கவும்.
தீரும் நோய்கள் :
தோலில் ஏற்படும் வெண்புள்ளிகளுக்கும் மற்றும் தோல் நோய்களுக்கும் சிறந்தது.
தேவையானவை:
1. சதுரக் கள்ளிச் சாறு -6 லி
2. நொச்சியிலைச் சாறு -6 லி
3. தழுதாழையிலைச் சாறு -6 லி
4. எருக்கம் பால் -6 லி
5. நல்லெண்ணெய் -6 லி
6. ஆமணக்கெண்ணெய் -6 லி
7. வெள்ளைப்பூண்டு -10 கி
8. பெருங்காயம் -10 கி
9. கந்தகம் -10 கி
10. கோஷ்டம் -10 கி
11. சுக்கு -10 கி
12. மிளகு -10 கி
13. திப்பிலி -10 கி
14. கடுகு -10 கி
15. வெள்ளாட்டுப் பால் -6 லி
செய்முறை :
1-6 வரையுள்ள சரக்குகளை கலந்து அத்துடன் 7 - 14 வரையுள்ள சரக்குகளை வெள்ளாட்டுப் பாலில் அரைத்துச் சேர்த்து காய்ச்சி பதத்தில் வடித்து வைக்கவும்.
உபயோக முறை :
வெளி உபயோகத்திற்கு மட்டும்.
தீரும் நோய்கள் :
தீராத வாத ரோகங்கள், ஏழு தாதுக்களில் கலந்த திமிர்வாதம், பாரிச வாயு, முடக்கு வாதம், மூட்டு வாதம், சூலைக் கட்டு, தசைப் பிடிப்பு மற்றும் ஊமைக் காயங்கள் ஆகியன தீரும்.
தேவையானவை:
1. குப்பை மேனி இலை -100 கி
2. ஆமணக்கு எண்ணெய் - 400 கி
தயாரிக்கும் விதம்:
குப்பைமேனி இலையை ஆமணக்கெண்ணையில் சேர்த்து சிறு தீயேற்றி கொதிக்க விட வேண்டும். இலையிலுள்ள நீர் வற்றி இலை முறுகலான நிறத்தில் எண்ணெய் மீது மிதக்கும் வேளையில் இலைகளை அகற்றி அவற்றைக் கல்வத்திலிட்டு நன்கு பசை போல் அரைத்து ஆமணக்கு எண்ணெயுடன் கலந்து பயன்படுத்தவும்.
உபயோக முறை:
5-10 மி.லி. உள்ளுக்கு சாப்பிடவும்.
தீரும் வியாதிகள் :
குடல் பூச்சிகள் மற்றும் பௌத்திரம்.
தேவையான பொருட்கள்:
1. கையாந்தகரை -1.2 கி. கி
2. நெல்லிக்காய் -1.2 கி.கி.
3. ஆலம் விழுது -1.2 கி. கி
4. தழுதாழை -1.2 கி.கி.
5. தண்ணீர் விட்டான் கிழங்கு -1.2 கி.கி.
6. வாழைக்கிழங்கு -1.2 கி.கி.
7. நல்லெண்ணெய் -1.2 கி.கி.
8. பசுவின் பால் -1.2 கி. கி
9. நெய்தற் கிழங்கு -8.75 கி.கி.
10. அல்லிக்கிழங்கு -8.75 கி. கி
11. சந்தனத்தூள் -8.75 கி. கி
12. வெட்டி வேர் -8.75 கி.கி.
13. விலாமிச்சு வேர் -8.75 கி. கி
14. வசம்பு -8.75 கி.கி.
15. அதிமதுரம் -8.75 கி. கி
16. முசுமுசுக்கை -8.75 கி.கி.
17. தாமரைப் பூவிதழ் -8.75 கி.கி.
18. தூதுவளை வேர் -8.75 கி.கி.
19. மஞ்சிட்டு வேர் -8.75 கி.கி.
20. கோரைக் கிழங்கு -8.75 கி.கி.
21. சிறு செண்பகப்பூ -8.75 கி.கி.
22. சடாமஞ்சில் -8.75 கி.கி.
23. தேவதாரு -8.75 கி. கி
24. நன்னாரி வேர் -8.75 கி.கி.
25. வேங்கைவைரம் -8.75 கி.கி.
26. அமுக்கராக்கிழங்கு -8.75 கி. கி
27. கோஷ்டம் -8.75 கி.கி.
28. கற்பூரம் -8.75 கி.கி.
29. பெருங்குரும்பை -8.75 கி. கி
30. சதகுப்பை -8.75 கி.கி.
செய்முறை:
மேற்கண்ட சரக்குகளை பால்விட்டரைத்து கரைத்து நல்லெண்ணெயில் விட்டுக் காய்ச்சி பக்குவத்தில் வைத்துக் கொண்டு பத்திரப்படுத்தவும்.
உபயோக முறை :
வெளி உபயோகம் மட்டும்.
தீரும் நோய்கள்:
இதை ஸ்நானம் செய்தாலும் நசியம் பண்ணினாலும் தலை நோய், கண் நோய்கள், செவிடு முதலிய ரோகங்கள் தீரும்.
தேவையான பொருட்கள்:
1. அருகம்புல் -100 கி
2. பால் -200 கி
3. நல்லெண்ணெய் -100 மி.லி.
தயாரிக்கும் விதம் :
அருகம்புல்லின் கிழங்கினது தோலையும் கணுக் களையும் நீக்கி உரலிலிட்டு இடித்து சாற்றினை வடித்து அச்சாற்றுடன் நல்லெண்ணெயும் பசும்பாலையும் விட்டு நன்கு கலந்து அடுப்பிலேற்றி காய்ச்சவும். தைலப்பதம் வந்தவுடன் இறக்கி வைத்து வடித்து பத்திரப்படுத்தவும்.
உபயோக முறை :
வெளி உபயோகம் மட்டும்.
தீரும் நோய்கள் :
வாதம், மூலச்சூடு, பற்பல மருந்துகளை உண்டதால் உண்டான உஷ்ணம், ஆண்குறி மற்றும் வயிறு எரிவு, துர்வாசனை மிகுந்த புண்கள், பித்த வியாதிகள், சொறிகள், நீர்க்கோவை என்கிற பீனிசம் முதலிய நோய்கள் நீங்கி விடும்.
தேவையான பொருட்கள் :
1. கழற்சி வேர்ப்பட்டை -700 கி
2. தண்ணீர் -8.4 லி
3. கழற்சி பருப்பு -175 கி
4. கழற்சி கொழுந்து -70 கி
5. விளக்கெண்ணை -1.4 லி
6. ஏலம் -17.5 கி
7. பரங்கிப்பட்டை -17.5 கி
8. வால்மிளகு -17.5 கி
9. சன்ன லவங்கப்பட்டை -17.5 கி
10. நேர்வாளம் -17.5 கி
11. ரசகற்பூரம் -17.5 கி
12. சுத்தமான நீர் -17.5 கி
செய்முறை :
கழற்சிப் பட்டையை இடித்து தண்ணீரில் சேர்த்துக் காய்ச்சி 1500 லி ஆக சுண்ட வைத்துக் கொண்டு கழற்சி இலை, கழற்சிப் பருப்பு இவ்விரண்டையும் நன்கரைத்து எல்லாவற்றையும் எண்ணெயில் சேர்த்துக் காய்ச்சவும். ஏலம், இலவங்கப்பட்டை, பறங்கிப்பட்டை, வால்மிளகு போன்ற சரக்குகளைப் பொடித்து எண்ணெயில் சேர்த்துக் காய்ச்சி பதத்தில் வடித்து வைக்கவும். வடிகலத்தில் சுத்தி செய்த நேர்வாளம், இரசக் கற்பூரம் இவ்விரண்டையும் அரைத்து நன்கு கலந்து வைக்கவும்.
உபயோக முறை :
உள் உபயோகம் மட்டும்.
அளவு :
3 - 5 மி.லி. வீதம் சற்று வெதுப்பி காலையில் ஒரு வேளை மட்டும் கொடுக்கலாம்.
நோயின் தன்மைக்கேற்ப 3 முதல் 5 நாட்கள் வரை கொடுக்கலாம்.
தீரும் நோய்கள் :
விரைவாயு, விரைவீக்கம், உடம்பு வீக்கம், அடிக் குடலைப் பற்றி வாயு, மலச்சிக்கல் ஆகியன குணமாகும்.
தேவையான பொருட்கள் :
1. நல்லெண்ணெய் -1.4 கி.கி
2. பசும்பால் -1.4 கி.கி
3. இளநீர் -4 கி
4. தாமரை வளையம் -4 கி
5. வெட்டிவேர் -4 கி
6. சந்தனவேர் -4 கி
7. விலாமிச்சம் வேர் -4 கி
8. கஸ்தூரி மஞ்சள் -4 கி
9. தேற்றான் கொட்டை -4 கி
10. கோரைக் கிழங்கு -4 கி
11. சீரகம் -4 கி
12. 12.ஏலம் -4 கி
13. பூலாங்கிழங்கு -4 கி
14. பச்சிலை -4 கி
15. செங்கழுநீர் கிழங்கு -4 கி
16. தண்ணீர் விட்டான் கிழங்கு -4 கி
17. அதிமதுரம் -4 கி
18. மஞ்சிட்டி வேர் -4 கி
19. செண்பக மொக்கு -4 கி
20. புனுகுச் சட்டம் -4 கி
21. குங்குமப்பூ -4 கி
தயாரிக்கும் விதம் :
நெ.4 முதல் 19 வரையிலான சரக்குகளை பொடித்து வைக்கவும். நெ. 1-3 வரையுள்ள சரக்குகளை சேர்த்து அடுப்பிலேற்றி காய்ச்சவும்.
பொடித்த சரக்குகளை எண்ணெயில் சேர்த்துக் காய்ச்சிப் பதத்தில் வடித்து வைக்கவும். வடிகலத்தில் புனுகுச் சட்டம், குங்குமப்பூ இவ்விரண்டையும் பொடித்துச் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.
உபயோக முறை :
வெளி உபயோகம் மற்றும் தலையில் தேய்த்துக் குளிக்கலாம்.
தீரும் நோய்கள் :
சுவாசத்தைத் தடுக்கும் பீனிசம், இரத்த பீனிசம், திரவிழு தல் முதலிய 18 வகை பீசினங்கள் கண் திமிரம் ஆகியன.
தேவையான பொருட்கள்:
1. இஞ்சிச் சாறு -800 மி.லி.
2. முசுமுசுக்கை சாறு -800 மி.லி.
3. கையாந்தகரைச் சாறு -800 மி.லி.
4. நல்லெண்ணெய் -800 மி.லி.
5. பசும்பால் -800 மி.லி.
6. சந்தனம் -87.5 கி
7. மிளகு -87.5 கி
8. குங்குமப்பூ -87.5 கி
9. வெட்டி வேர் -17.5 கி
10. சாம்பிராணி -3.5 கி
தயாரிக்கும் விதம்:
இஞ்சிச்சாறு, முசுமுசுக்கைச் சாறு கையாந்தகரைச் சாறு, நல்லெண்ணெய், பசுவின் பால் இவ்வனைத்தையும் தைலப் பாத்திரலிட்டு சந்தனக் கட்டையும் மிளகும் பசும்பால் விட்டரைத்து அந்த எண்ணெயில் சேர்த்து பதமாகக் காய்ச்சி வடிகலத்தினுள் குங்குமப்பூ வெட்டி வேர் சாம்பிராணி இம்மூன்றையும் பொடித்து தூவி இதில் வடித்தெடுத்து வைத்த தைலத்தை பத்திரப்படுத்தி பயன்படுத்தவும்.
உபயோக முறை :
வெளிஉபயோக முறை.
தீரும் நோய்கள் :
இத்தைலத்தால் ஸ்நானஞ் செய்ய உச்சந்தலை நோய் வாதத்தாலுண்டாகிய தேகக் கடுப்பு, அதிகரித்த காது நோய்கள், முகநோய், கப நோய் போன்ற நோய்கள் குணமாகும்.
தேவையான பொருட்கள்:
1. கரிசாலைச் சாறு -100 கி
2. நல்லெண்ணெய் -900 கி
செய்முறை :
கரிசாலைச் சாறு, நல்லெண்ணெய் இவ்விரண்டையும் தலப் பாத்திரத்திலிட்டுத் தீபாக்கினியால் எரித்து க்குவமாக வடித்து வைக்கவும்.
உபயோக முறை :
வெளி உபயோகம்.
தீரும் நோய்கள்:
காலை, மாலை 1 அவுன்ஸ் வீதம் உட்கொள்ள காச ராகம் குணமாகும்.
தேவையான பொருட்கள்:
1. விளக்கெண்ணெய -500 மி.லி
2. வாழைச்சாறு -500 மி.லி.
3. இளநீர் -500 மி.லி
4. பசும்பால் -500 மி.லி
5. பறங்கிப்பட்டை -185 கி
6. கொத்தமல்லி விதைகள் -105 கி
7. பலப்பத்தூள் -105 கி
8. சீரகத்தூள் -35 கி
தயாரிக்கும் விதம் :
விளக்கெண்ணெய், வாழைச்சாறு, இளநீர் மற்றும் பசும்பாலைப் பாத்திரத்தில் விட்டு மெதுவாக எரித்து, மெழுகு பதத்தில் வடித்து சூடு ஆறுவதற்கு முன்பு நன்கு சலித்து சுத்தம் செய்த பறங்கிப்பட்டைத் தூளை கொத்த மல்லி விதைத் தூள், சீரகத் தூள் மற்றும் பலப்பத்தூள் அதில் தூவி மத்தித்து வைத்து பத்திரப்படுத்தவும்.
உபயோக முறை :
5-8 மி.லி. அதிகாலையில் அல்லது இரவு உணவிற்குப் பின் அருந்தவும். ஒரு மண்டலம் (48 நாள்) வரை குடிக்கவும்.
தீரும் நோய்கள் :
உட்சுரம், தேகச்சூடு, உஷ்ணம் முதலியன தணிந்து குளிர்ச்சி உண்டாக்கும்.
தேவையான பொருட்கள் :
1. துளசிச்சாறு -800 கி
2. திருநீற்றுப் பச்சிலை -800 கி
3. 3.நல்லெண்ணெய் -800 கி
4. பசும்பால் -800 கி
5. விளக்கெண்ணெய் -1.6 கி
6. மஞ்சள் -10.5 கி
7. மரமஞ்சள் -10.5 கி
8. சுக்கு -10.5 கி
9. முத்தக்காசு -10.5 கி
10. வெட்டி வேர் -10.5 கி
11. விலாமிச்சம் வேர் -10.5 கி
12. சீரகம் -10.5 கி
13. அதிமதுரம் -10.5 கி
14. கற்கடக சிருங்கி -10.5 கி
15. லவங்கப்பட்டை -10.5 கி
16. வலம்புரிக்காய் -10.5 கி
17. ஜாதிக்காய் -10.5 கி
18. தக்கோலம் -10.5 கி
19. சடாமஞ்சில் -10.5 கி
20. ஓமம் -10.5 கி
21. பறங்கிப்பட்டை -10.5 கி
22. செண்பகப்பூ -10.5 கி
23. கசகசா -10.5 கி
24. அதிவிடயம் -10.5 கி
25. கடுகு ரோகிணி -10.5 கி
26. தேவதாரம் -10.5 கி
27. சந்தனக்கட்டை -10.5 கி
28. சிறுநாகப்பூ -10.5 கி
தயாரிக்கும் விதம் :
மேற்கண்ட கடைச்சரக்குகளைப் பசும்பாலில் அரைத்து நல்லெண்ணெய், விளக்கெண்ணெய் துளசிச் சாறுடன் காய்ச்சி பதத்தில் வடித்து பத்திரப்படுத்தவும்.
உபயோக முறை :
உள் மற்றும் வெளி உபயோகம்.
தீரும் வியாதி :
கிரந்தி, சூலை, வயிற்றெரிவு, நெஞ்சு நோய், தே
வறட்சி, நீர்க்கடுப்பு குணமாகும். தேகம் குளிரும்.
தேவையான பொருட்கள்:
1. விளக்கெண்ணெய் -500 மி.லி.
2. வாழைச்சாறு -500 மி.லி.
3. இளநீர் -500 மி.லி.
4. சீரகம் -70 கி
5. பால் -தேவையான அளவு.
செய்முறை:
கீழா நெல்லி சமூலத்தை இடித்து சாறு எடுத்து வாழைத் தண்டுச்சாறும், நல்லெண்ணெய், ஆவின் பால் மற்றும் சீரகம் அரைத்துப் போட்டு காய்ச்சி மெழுகு பதமாய் வடித்து பத்திரப்படுத்தவும்.
உபயோக முறை :
தலைக்குத் தேய்த்துக் குளிக்கவும்.
தீரும் நோய்கள்:
பித்த வெட்டை, மஞ்சட்காமாலை, வாந்தி, மயக்கம், வாய் நீரூறல், உட்சுரம், நடுக்கம் தீரும்.