தேவையான பொருட்கள்:
செய்முறை:
குதிரைவாலி அரிசி, துவரம் பருப்பு, பாசி பருப்பு, புழுங்கல்அரிசி ஆகியவற்றை இரண்டு மணிநேரம் ஊறவைக்கவும். பின் மிக்ஸியில் நன்றாகஅரைத்து மாவு செய்து கொள்ளவும். இத்துடன் மிளகாய்த்தூள் சீரகம், கருவேப்பிலை, உப்பு,பெருங்காயத் தூள்ஆகியவற்றை சேர்த்து நன்றாக பிசைந்து கொள்ளவும். பின் தோசைக் கல்லில்எண்ணெய் தடவி அடைமாவை மெல்லியதாகஊற்றி இருபுறமும் பொன்னிறமாக வேகவைக்கவும். பின் சூடாக பரிமாறவும்.
பலன்கள்:
பொட்டாசியம், தாமிரம், மக்னீசியம், துத்தநாகம், சோடியம், பாஸ்பரஸ், செலினியம், பொட்டாசியம் ஆகியன துவரம் பருப்பு மற்றும் பாசிபருப்பில் அடங்கியுள்ளன. புழுங்கல் அரிசி செரிமானத்தை எளிதாக்குகிறது. கறிவேப்பிலை சீரகத்தில் உள்ள ஆன்டி ஆக்ஸிடென்ட்கள்நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்துகின்றன.
தேவையான பொருட்கள்:
செய்முறை:
குதிரைவாலி, உளுந்து இரண்டையும் 3 மணிநேரம் ஊறவைத்து நன்றாக அரைத்துக் கொள்ளவும். வெல்லம், தேங்காய், ஏலக்காய் பொடியுடன் உப்பு சேர்த்து 8 மணிநேரம் மாவை புளிக்க வைக்கவும். பிறகு குழிப்பணியாரம் சட்டியில் எண்ணெய் தடவி ஊற்றி திருப்பிப்போட்டுஇருபுறமும் நன்றாக வெந்தவுடன் எடுத்துப் பரிமாறவும்.
பலன்கள்:
உளுந்து, பனைவெல்லம், சேர்க்கப்படுவதால் பெண்களுக்கு மாதவிடாய் பிரச்சனை ஏற்படுவதை தடுக்கவும். இடுப்பு எலும்பு வலிமை பெறவும் உதவுகிறது. பி காம்ப்ளக்ஸ் வைட்டமின்கள்நிறைந்திருப்பதால் உடலுக்கு உடனடி ஆற்றல் தருகிறது. வயிற்றுப்புண்ணை ஆற்றும் குணமுடையத.
தேவையான பொருட்கள்:
செய்முறை:
குதிரைவாலிஅரிசி, துவரம் பருப்பு, அவுல் மற்றும் உளுத்தம்பருப்பை ஒன்றாக 34 மணிநேரம் வரை ஊறவைக்கவும். மிளகாய், தக்காளி மற்றும் உப்பு சேர்த்து நன்கு அரைக்கவும். வெங்காயத்தை பொடியாக நறுக்கி நன்கு கலக்கி லேசான தோசைகளாக வார்க்கவும். இரண்டு புறமும் வேகவைத்து எண்ணெய் சேர்த்து கல்லில் இருந்து எடுக்கவும். தேங்காய் சட்னி சேர்த்து சூடாக பரிமாறவும்.
பலன்கள்:
கால்சியம், பாஸ்பரஸ் போன்றவற்றுடன் நார்ச்சத்து நிறைந்த உணவாக இது இருக்கிறது. வைட்டமின்ஏ, சி, கே. இரும்பு, பொட்டசியம் ஆகியன தக்காளியில் நிறைவாக உள்ளன. இது ரத்தத்தை சுத்திரிக்கும். பித்தப்பை கற்கள் உருவாவதை தடுக்கும் நோய் எதிர்ப்பு சக்தியைஅதிகரிக்கும் உணவு.
தேவையான பொருட்கள்:
செய்முறை:
குதிரைவாலி அரிசியை ½ கப் தண்ணீர் சேர்த்துகுக்கரில் 3 விசில் விட்டு வேகவிட்டுக் கொள்ளவும். வெந்த சாதத்தை நன்கு மசித்துக் கொள்ளவும். அதில் துருவிய காரட், குடைமிளகாய், பொடியாக நறுக்கிய வெங்காயம், மிளகாய்பொடி,கடலைமாவு,கரம் மசாலா,உப்புசேர்த்து நன்கு பிசைந்து கொள்ளவும். வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடானவுடன் பிசைந்த கலவையை சிறுசிறு உருண்டைகளாக உருட்டி எண்ணெயில் போடவும், பொன்நிறம் ஆனவுடன் எடுக்கவும். சூடாக சாப்பிட்டால் சுவையாக இருக்கும்.
பலன்கள்:
காரட்,கரம் மசாலா மிளகாய்சேர்த்த இந்த பக்கோடா நுரையீரல், வயிறு தொடர்பான கோளாறுகளை கட்டுப்படுத்துகிறது. கல்லீரல் நோயை கட்டுப்படுத்தவும். நோய் எதிர்ப்புசக்தியை அதிகரிக்கவும் செய்கிறது. பல்வேறு சத்துக்கள் நிறைந்த சிற்றுண்டி.
தேவையான பொருட்கள்:
செய்முறை:
குதிரைவாலி மற்றும் அவுலை ஒன்றாக ஊறவைக்கவும். துவரம் பருப்பு மற்றும் கடலைப்பருப்பை ஊறவைக்கவும். 2 மணிநேரம் கழித்து அரிசி மற்றும் அவுலை நன்கு மையாக அரைத்துக் கொள்ளவும். பருப்பு வகைகளை மிளகாய் மற்றும் பெருங்காயம் சேர்த்து கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளவும். அரைத்த அரிசி, பருப்பை ஒன்றாக நன்கு கலக்கவும். உப்பு வெங்காயம் மற்றும் முருங்கைக்கீரை சேர்க்கவும். நன்கு கலக்கிக் கொள்ளவும். மாவு தயார். புளிக்கவைக்கத் தேவையில்லை. அடுப்பில் தோசைக் கல்லை வைத்து ஒருகரண்டி மாவு சேர்த்து கொஞ்சம்கனமான அடைகளாக இருபுறமும் வேகவிட்டு எடுக்கவும்.அடுப்பை மிதமான தீயில் வைக்கவும். வேகும் போது இரண்டு பக்கமும்எண்ணெய் சேர்க்கவும்.
பலன்கள்:
இரத்த சோகையை குணப்படுத்தும் ஆற்றல் முருங்கை கீரையில் உள்ளது. உடல் வெப்பத்தை தணிக்கும். தலைவலியைப் போக்கும். கை,கால்,மூட்டுவலிகளைக் குணமாக்கும். பார்வைத்திறனை மேம்படுத்தும். நோய் எதிர்ப்பு சக்தியைமேம்படுத்தும் சிறந்த உணவு இது.