Contact Us

ராகி பாதாம் கஞ்சி

தேவையான பொருட்கள்:

  • ராகிமாவு-200கிராம் 
  • வெல்லம் - 100கிராம் 
  • பாதாம் - 15 
  • உப்பு, தண்ணீர் - தே. அளவு 
  • நெய்,பசும்பால் - தே.அளவு

செய்முறை:

 ராகி மாவைச் சிறிதளவு நெய்யில் வறுத்துக் கொள்ளவும். பாதாமை நன்றாக ஊறவைத்து வேக வைத்துத் தோல் நீக்கி மிக்ஸியில் சிறிது தண்ணீர் விட்டு அடித்து பால் எடுத்துக் கொள்லவும். தன்னீரை கொய்வைத்து அதில் வெல்லத்தைப் பொடித்துப் போட்டு கெட்டியாகாமல் இறக்கி வைக்கவும். இரண்டு கப் தண்ணீரை கொதிக்க வைத்து அதில் ராகி மாவை சிறிது சிறிதாகச் சேர்க்கவும்.நன்றாக கலக்கி வடிகட்டிய பாதாம் மாவை அதில் சேர்த்துக் கிளறவும். 2 அல்லது 3 நிமிடம் கழித்து வெல்லப் பாகைச் சேர்த்து நன்றாக கிளறவும். கூழ் பதம் வரும் வரை கொதிக்க வைத்து இறக்கவும், மிதமான சூட்டில் அருந்தவும். தேவைப்பட்டால் பசும்பால் சேர்க்கலாம்.

பலன்கள்:

  ராகியில் புரதச்சத்து நிறைந்துள்ளது. இதில் உள்ள வைட்டமின் சி உடலை ஆரோக்கியப்படுத்துகிறது. பாதாமில் உள்ள ஃபிளேவனாய்ட்ஸ் மார்பகம். நுரையீரல், புரோஸ்டேட் புற்றுநோயைத் தடுக்கும். இரத்தத் குழாய்களில் ஏற்படும் பாதிப்பை நீக்குகிறது.

ராகி தோசை

தேவையான பொருட்கள்:

  • ராகி -1 1/2கப்
  • உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு தலா-1/2கப்
  • வெந்தயம் - 1 டீஸ்பூன்
  • கேரட் & வெங்காயம் – 1
  • தக்காளி-1
  • குடமிளகாய் – 1
  • பச்சைமிளகாய் – 2
  • கொத்தமல்லிதழை,உப்பு - தேவையான அளவு
  • எண்ணெய் - தே. அளவு
  • மிளகு,சீரகத்தூள்தலா - 1 டீஸ்பூன்

செய்முறை:

        உளுத்தம்பருப்பு, கடலைபருப்பு,வெந்தயம் ஆகியவற்றைத் தண்ணீரில் அலசி 6 முதல் 8 மணிநேரம் ஊறவைக்கவும். பின் தேவையான அளவுதண்ணீர் விட்டு அரைத்துக் கொள்ளவும்.அரைத்த மாவில் உப்பு சேர்த்து இரவு முழுவதும் புளிக்கவிடவும். அடுத்த நாள் மாவைக் கலக்கிதோசைக் கல்லில் சிறிது எண்ணெய் ஊற்றி மாவை ஊற்றி நறுக்கியகாய்கறிகள்,மிளகு, சீரகத்தூள் தூவி திருப்பிப் போட்டுமுறுகலாக எடுக்கவும்.

பலன்கள்:

      ராகியில் இரும்புச்சத்து, புரதமும் அரிசி மாவில் ஹார்போஹைட்ரேட்டும் உள்ளதால் உடலுக்கு உடனடி ஆற்றல் தருகிறது. வெங்காயத்தில் ஆன்டி மைக்ரோபயல் தன்மை இருப்பதால் நோய் தொற்றுகள் வராமல்தடுக்கும். இதில் உள்ள குரோமியம் இரத்தத்தைசுத்திகரிக்கவும், தசைகளுக்கு புத்துணர்வு ஊட்டவும் உதவுகிறது. நோய் எதிர்ப்பாற்றல் வளர்க்கும்உணவு இது.

ராகி மசாலா ஊத்தாப்பம்

தேவையான பொருட்கள்:

  • ராகி - 1 1/2 கப்
  • உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு -1/2கப் 
  • வெந்தயம் - 1 டீஸ்பூன் 
  • கேரட், வெங்காயம், தக்காளி, குடமிளகாய் தலா பச்சைமிளகாய்-1
  • கொத்தமல்லி -சிறிதளவு 
  • உப்பு - தேவையான அளவு 
  • மிளகுதூள்,சீரகத்தூள் – ஸ்பூன்
  • எண்ணெய் - சிறிதளவு

செய்முறை:

       ராகி,உளுத்தம் பருப்பு, கடலைப்பருப்பு,வெந்தயம் ஆகியவற்றை தண்ணீரில் அலசி 6 முதல் 8 மணிநேரம் ஊறவைக்கவும். பின் தேவையான அளவுதண்ணீர் விட்டு அரைத்துக் கொள்ளவும். அரைத்த மாவில் உப்பு சேர்த்து இரவு முழுவதும் புளிக்கவிடவும். அடுத்த நாள் மாவை கலக்கிதோசைக்கல்லில் சிறிது எண்ணெய் ஊற்றி மாவை ஊற்றி நறுக்கியகாய்கறிகள், மிளகுதூள், சீரகத்தூள், கொத்தமல்லி தூவி திருப்பிப் போட்டுமுறுகலாக எடுக்கவும்.

பலன்கள்:

 உளுந்தில் புரதச்சத்து நிறைந்திருப்பதால் பெண்களின் மாதவிலக்கு பிரச்சனைகளை சரி செய்யும். வெந்தயத்தில் உள்ள சத்துக்கள் வயிற்றுப்புண் குடலிறக்கம்,வாய்ப்புண் ஆகியவை நீங்க உதவுகிறது, செரிமானத்தை எளிதாக்குகிறது

ராகி லட்டு

தேவையான பொருட்கள்:

  • ராகிமாவு - 200 கிராம்
  • வறுத்தவேர்க்கடலை - 50கி
  • வெல்லம் - 100 கிராம்
  • வறுத்தத்தேங்காய் துருவல் - 50 கிராம்
  • பால் - 5 டீஸ்பூன்
  • நசுக்கியஏலக்காய் – 5
  • முந்திரிப்பருப்பு -15 கிராம்
  • நெய் - 5 டீஸ்பூன்

செய்முறை:

        வாணலியில் நெய்யைச் சேர்த்து மிதமான சூட்டில் ராகிமாவை வதக்கவும். அதனுடன் பொடித்த வேர்க்கடலையை சேர்த்துப்பின் வெல்லத்தைச் சிறிது சிறிதாகச் சேர்க்கவும். ஈரப்பதம் தேவைப்பட்டால் பாலைச் சேர்த்துக் கிளறி இறக்கி வைக்கவும். பின் தேங்காய்த் துருவல், முந்திரிப் பருப்பு, ஏலக்காயைச் சேர்த்து இளம் சூட்டிலேயே சிறுசிறுஉருண்டைகளாகப் பிடிக்கவும்.

பலன்கள்:

          வேர்க்கடலையில் பொட்டாசியம். நார்ச்சத்து அதிக அளவில் உள்ளன. நல்ல கொழுப்பு நிறைந்தது என்பதனால் குழந்தைகளின் வளர்ச்சிக்கு உதவுகிறது. முந்திரியில் தாமிரம் உள்ளிட்ட தாது உப்புகள் நிறைந்திருப்பதால்இரத்த நாளங்கள் எலும்பு மூட்டுகளுக்கு நல்லது. ஏலக்காய் செரிமானத்தை தூண்டுகிறது.

தே

ராகி வடை

தேவையான பொருட்கள்:

  • ராகி -1கப்
  • கடலைப்பருப்பு -1/2கப்
  • பொடியாகநறுக்கியசின்னவெங்காயம் – 10
  • சோம்பு - 1 டீஸ்பூன்
  • பொடியாகநறுக்கியபச்சைமிளகாய் – 2
  • பொடியாகநறுக்கியஇஞ்சி – சிறிதளவு
  • பொடியாகநறுக்கிய பூண்டு – 3
  • பொடியாகநறுக்கியகருவேப்பிலை,கொத்தமல்லி – சிறிதளவு
  • உப்பு - தேவையான அளவு
  • எண்ணெய் - பொரிப்பதற்கு

செய்முறை:

             ரகியையும்,கடலைபருப்பையும் தனித்தனியாக அலசித் தனிதனித்தனியாக தண்ணீரில் 3 மணிநேரம் ஊறவைக்கவும் பின் இரண்டையும் தனித்தனியாககுருணைகளாக மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும். அரைத்தவற்றை ஒன்றாகக் கலந்து நறுக்கி வைத்தவற்றை இதனுடன் சேர்த்துக் கலந்து கொள்ளவும். உப்பு. சோம்பை சேர்த்து வடைகளாகத் தட்டி எண்ணெயில் முறுகலாகப் பொரிக்கவும்.

பலன்கள்:

           ராகி மற்றும் கடலைபருப்பின் கலவை உடலின் புரதத்தைசமன் செய்ய உதவுகிறது. இஞ்சி, பூண்டு இருப்பதால் செரிமான மண்டல செயல்பாட்டை ஊக்குவிக்கிறது. சோம்பில் உள்ள வைட்டமின் மற்றும்தாதுஉப்புகள் வயிற்றுவலி, மூட்டுவலியைப் போக்கும்.

ராகி முறுக்கு

தேவையான பொருட்கள்:

  • கேழ்வரகு- 1 கிலோ
  • அரிசி - சிறிதளவு 
  • உளுந்து -200கிராம் 
  • பொட்டுக்கடலை - 100 கிராம் 
  • வெண்ணெய் - 100 கிராம் 
  • எள் -1/2 டீஸ்பூன் 
  • பெருங்காயம் - 1/4 சிட்டிகை 
  • சீரகம், ஒமம் - சிறிது 
  • எண்ணெய், உப்பு -தே.அளவு

செய்முறை:

       உளுத்தம்பருப்பை சிறிது வறுத்து அரிசி, பொட்டுக் கடலை ஒன்று சேர்த்துநைசாக அரைத்துக் கொள்ளவும். அரைத்தமாவுடன் கேழ்வரகு மாவு, எள், வெண்ணெய், பெருங்காயம், சீரகம், ஓமம் சேர்த்து முறுக்குமாவுபதத்திற்கு பிசைந்து எண்ணெயில் பிழிந்து பொரித்து எடுக்கவும்.

பலன்கள்:

      ராகியில் உள்ள ஆன்டி ஆக்ஸிடன்மற்றும் அமினோ அமிலங்கள். எலும்புகளின் ஆரோக்கியத்திற்கு உதவும். சீரகம், ஓமம் எள் ஆகியனசேர்க்கப்படுவதால் மன அழுத்தம், தூக்கமின்மை, பதற்றம் ஆகியவற்றை சரிசெய்யும். வெண்ணெய் உடல் எடை கூட்டஉதவுகிறது.

 

ராகி பாதாம் கஞ்சி

தேவையான பொருட்கள்:

  • ராகிமாவு -200கிராம்
  • வெல்லம் - 100கிராம்
  • பாதாம் – 15
  • உப்பு, தண்ணீர் - தே. அளவு
  • நெய்,பசும்பால் - தே.அளவு

செய்முறை:

          ராகி மாவைச் சிறிதளவுநெய்யில் வறுத்துக் கொள்ளவும். பாதாமை நன்றாக ஊறவைத்து வேக வைத்துத் தோல்நீக்கி மிக்ஸியில் சிறிது தண்ணீர் விட்டு அடித்து பால் எடுத்துக் கொள்ளவும். அரைக்க தண்ணிரை கொதிக்கவைத்து அதில் வெல்லத்தைப் பொடித்துப் போட்டு கெட்டியாகாமல் இறக்கி வைக்கவும் இரண்டு கப் தண்ணீரை கொதிக்கவைத்து அதில் ராகி மாவை சிறிதுசிறிதாகச் சேர்க்கவும். நன்றாக கலக்கி வடிகட்டிய பாதாம் மாவை அதில் சேர்த்துக்கிளறவும். 2 அல்லது 3நிமிடம் கழித்து வெல்லப் பாகைச் சேர்ந்து நன்றாக கிளறவும். கூழ் பதம் வரும்வரை கொதிக்க வைத்து இறக்கவும். மிதமான சூட்டில் அருந்தவும். தேவைப்பட்டால் பசும்பால் சேர்க்கலாம்.

பலன்கள்:

         ராகியில் புரதச்சத்து நிறைந்துள்ளது. இதில் உள்ள வைட்டமின் Cஉடலை ஆரோக்கியப்படுத்துகிறது. பாதாமில் உள்ள ஃபிளேவனாய்ட்ஸ் மார்பகம், நுரையீரல், புரோஸ்டேட் புற்றுநோயைத் தடுக்கும். இரத்தத் குழாய்களில் ஏற்படும் பாதிப்பை நீக்குகிறது.