தேவையான பொருட்கள்:
செய்முறை:
வரகு அரிசியை அரை மணிநேரம் ஊறவைக்கவும். ஊற வைத்த கொண்டைக்கடலையை தனியாக வேகவைத்து எடுத்துக் கொள்ளவும். குக்கரில் எண்ணெயை ஊற்றி நறுக்கிய வெங்காயம் நறுக்கிய பூண்டு சேர்த்து வதக்கவும். பின்பு காய்கறிகளை சேர்த்து வதக்கவும். பிரியாணி மசாலா மற்றும் உப்பு சேர்த்து வதக்கவும். பின்பு வேகவைத்த கொண்டைகடலை மற்றும் ஊறவைத்த வரகு சேர்த்து 1 கப்தண்ணீர் சேர்த்து விசில் போடாமல் வேகவைக்கவும்.வரகுஅரிசி வெந்ததும் கொத்தமல்லி இலை தூவிப் பரிமாறவும்.
பலன்கள்:
இரத்த நாளங்களில் கொழுப்புப் படிவதை கொண்டைக்கடலை தடுக்கும் ஆற்றல் கொண்டது. புரதம், மாவுச்சத்து, போலிக் அமிலம், பாஸ்பரஸ், கால்சியம் போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளன. இதயநோளிகள் சாப்பிட ஏற்றது. வயிற்றுப் புற்றுநோயைத் தடுக்கும் ஆற்றல் உணவிற்கு உள்ளது.
தேவையான பொருட்கள்:
செய்முறை:
வரகு அரிசி, உளுந்துமற்றும் அவுலை நன்கு அலம்பி 4 மணிநேரம் ஊற வைக்கவும். 4 மணிநேரம்கழித்து கிரைண்டரில் போட்டு அரைக்கவும் உப்பு கலந்து 8 மணிநேரம் புளிக்க வைக்கவும். மாவு பொங்கியுடன் இட்லிதட்டில் சிறிது எண்ணெய் தடவி மாவை ஊற்றி 10 நிமிடம் ஆவியில் வேகவிடவும். மிருதுவான இட்லி தார். சாம்பார் மற்றும் சட்னிய பரிமாரவும்.
பலன்கள்:
எலும்பு மற்றும் பற்களின் வளர்ச்சிக்கும், உறுதித்தன்மைக்கும் வரகு உதவுகிறது. மக்னீசியம், பொட்டாசியம், தாமிரம், துத்தநாகம் குரோமியம் ஆகிய தாது உப்புகள் இதில்நிறைந்துள்ளன. வரகு உளுந்துசேர்த்து இட்லியை செய்து சாப்பிடுவது ஜீரணசக்தியை எளிதாக்குகிறது.
தேவையான பொருட்கள்
செய்முறை:
கடாயில் வெண்ணெய் சேர்த்துபூண்டை வதக்கி, காய்கறிகளை சேர்த்து இரண்டு நிமிடம் வதக்கவும். வரகு அரிசி சேர்த்து 2 கப் தண்ணீர் சேர்க்கவும். 10 நிமிடம் கொதிக்க விடவும். வரகு அரிசி வெந்தவுடன்ஆற வைத்து எல்லாவற்றையும் அரைத்துக் கொள்ளவும். உப்பு மிளகுபொடி சேர்த்துக் கொதிக்க விட்டு சூடாக பரிமாறவும்.
பலன்கள்:
புரதமும், கார்போஹைட்ரேட்டும் நிறைந்த வரகு அரிசியுடன் கால்சியம், வைட்டமின் கே, சல்ஃபோராபேன் ஆகியசத்துக்கள் நிறைந்த காலிபிளவர். பட்டாணி காரம் ஆகியன உடலை வலுவாக்குகின்றன. ஆன்டிஆக்ஸிடன்ட் நிறைந்த சூப் என்பதால் நாள்பட்டநோய்களை விரைவில் குணம் ஆகும் .
தேவையான பொருட்கள்:
செய்முறை:
வரகு அரிசியை நன்குஅலம்பி 1கப் தண்ணீர் விட்டுவேகவிடவும். குக்கரில் 3 விசில் விடலாம். நன்கு ஆறியவுடன் கரண்டியால் குழைத்து பால் சேர்க்கவும். உப்புமற்றும் தயிர் சேர்த்து கட்டி இல்லாமல் கைகளால் நன்கு பிசையவும். எண்ணெயில் கடுகு, பெருங்காயம், பச்சை மிளகாய், துருவிய இஞ்சி மற்றும் கொத்தமல்லி கருவேப்பிலை இவற்றை சேர்த்து தாளிக்கவும். இதை சாதத்தில் சேர்த்துநன்கு கிளறி பச்சை மிளகாயை எடுத்துவிடவும். ஜில்லென்று தயிர் சாதம் தயார்.
பலன்கள்:
பசியின்மை உள்ளவர்கள் இஞ்சி, பெருங்காயம் சேர்ந்த வரகு தயிர்ச்சாதம் உண்பதால்ஜீரண மண்டலம் தூண்டப்படுகிறது. கறிவேப்பிலை. கொத்தமல்லி ஆகியன சேர்க்கப்படுவதால் இரத்த சோகையை தடுக்கிறது.இரும்புச்சத்தும், கால்சியமும் நிறைந்த வரகு உணவுகள் எலும்புமற்றும் பற்களின் வளர்ச்சிக்கு உதவுகிறது.
தேவையானபொருட்கள்:
உருளை மசாலாகிழங்கு:
செய்முறை:
மாவுக்குத் தேவையான பொருட்களை (அரிசி, வெந்தயம் மற்றும் பருப்பு வகைகள்) இவற்றை 4 மணிநேரம் தண்ணீரில் ஊறவைக்கவும். பிறகு நன்கு மையாக கிரைண்டரில் அரைக்கவும். உப்பு சேர்த்து கலந்து 8 மணிநேரம் புளிக்க வைக்கவும். உருளைக்கிழங்கை வேகவைத்து தோல் நீக்கிக் கொள்ளவும். வெங்காயத்தை நீளவாக்கில் நறுக்கிக் கொள்ளவும். ஒரு கடாயில் எண்ணெய்சேர்த்து கடுகு, கருவேப்பிலை மற்றும் பச்சை மிளகாய் தாளித்து வெங்காயத்தை சேர்க்கவும். வெங்காயம் வதங்கியதும். உருளைக்கிழங்கை மசித்து போடவும். உப்பு மஞ்சள் தூள் சேர்த்துக் கொள்ளவும். 2 நிமிடம் வதக்கி அடுப்பை அணைக்கவும். அடுப்பில் தோசைக் கல்லை வைத்து சூடானவுடன் ஒரு கரண்டி மாவுஊற்றி வட்டமாக மெல்லிய தோசையாக வார்க்கவும். எண்ணெய் சேர்க்கவும். ஒருபுறம் வெந்து மொறுமொறுப்பானவுடன் மசாலாவை உள்ளே வைத்து அப்படியே மூடிவிடவும். சிறிது எண்ணெய் சோக்கவும். திருப்பிப் போட்டு, சூடான சாம்பார் மற்றும் சட்னியுடன் பரிமாறவும்.
பலன்கள்:
துவரம் பருப்பு மற்றும் கடலைப் பருப்பில் நார்ச்சத்து நிறைந்துள்ளன. இது மலச்சிக்கலை அகற்றுகிறது. சிறுகுடல் உறிஞ்சிகளுக்கு பலம் சேர்க்கிறது. இதனுடன் இரும்புச்சத்து நிறைந்த வெந்தயம் சேர்த்து சமைக்கப்படுவதால் இரத்தக் கழிச்சல் மற்றும் பெண்களுக்கு மாதவிடாய் காலத்தில் ஏற்படும் வயிற்று வலி போன்றவற்றைக் குணப்படுத்தும்ஆற்றல் கொண்டது.உருளைக்கிழங்கில் வைட்டமின் சி.பி காம்ப்ளக்ஸ்நிறைந்துள்ளது. இவை உடல் சருமத்திற்குஏற்றது,கால்சியம், மெக்னீசியம் ஆகியவற்றுடன் செரட்டோன். டோபமைன் ஹார்மோன்களை சீராக தூண்டி ஆரோக்கியமடைய செய்கிறது. அரிசி, பருப்பு,வெந்தயம் சேர்த்து சமைக்கப்படுவதால் எலும்பு வளர்ச்சிக்கு உதவும்.
தேவையான பொருட்கள்:
செய்முறை:
கடலைப்பருப்பு மற்றும் துவரம் பருப்பு ஆகியவற்றை 2 மணிநேரம் ஊற வைக்கவும். தண்ணீரைவடித்து மிளகாய், சோம்பு சேர்த்து கொரகொரப்பாக அரைக்கவும் உப்பு, புதினா மற்றும் கருவேப்பிலை சேர்க்கவும். பொடியாக நறுக்கிய வெங்காயம் சேர்க்கவும். வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெயை சூடுபடுத்தவும். மாவை சிறிது சிறிதாகஎடுத்து வடைகளாக தட்டி மிதமான தீயில் பொன்னிறமாக பொரித்து எடுக்கவும். சூடான வரகு வடை தயார்.
பலன்கள்
நரம்பு மண்டலக் கோளாறுகளை வரகு உணவுகள் நிவர்த்திசெய்கின்றன.சிறுநீரைப் பெருக்கி,உடல் நச்சுக்களை நீக்கும்ஆற்றல் சோம்பிற்கு உண்டு. புதினாவில் வைட்டமின் ஏ,டி, தயமின், பாஸ்பரஸ், கால்சியம், இரும்பு ஆகிய சத்துக்கள் அடங்கியுள்ளன. வரகு மசாலா வடை சிற்றுண்டியாக தயாரித்துஉண்ணலாம். மருத்துவ குணம் நிறைந்தது.
தேவையான பொருட்கள்:
செய்முறை:
எண்ணெயில் கடுகு,கடலைப்பருப்பு,உளுத்தம் பருப்பு சோத்து பொன்னிறமானதும் மாவில் சோக்கவும். காரட் துருவல் மற்றும் மிளகாய் பொடியையும் சேர்க்கவும். கறிவேப்பிலை, கொத்தமல்லி இலையை பொடியாக நறுக்கி சேர்க்கவும். உப்பு சிறிது சேர்த்து நல்லெண்ணெய் சிறிது சோக்கவும். மாவை நன்கு கலக்கவும். அடுப்பில் தோசைக் கல்லை வைத்து சிறிய ஊத்தாப்பங்களாக வார்க்கவும்.இரண்டு பக்கம் வேகவிட்டு திருப்பி போட்டு எடுக்கவும். சட்னி அல்லது சாம்பாருடன் சூடாக பரிமாறவும்.
பலன்கள்:
காரட்டில்வைட்டமின் ஏ.சி. கே. பி8. ஃபோலேட், இரும்பு, தாமிரம், பீட்டா கரோட்டின் நிறைந்துள்ளன. கடலைப்பருப்பில் புரதம், இரும்புச்சத்துக்கள் நிறைந்திருப்பதால் உடலுக்கு வலு தருகிறது. வாதநோய் உள்ளவர்கள் வரகு மாவை தொடர்ந்துஎடுத்துக் கொள்வதன் மூலம் விரைவில் குணம் பெறலாம்.