Contact Us

அம்மணிபூர்ண கொழுக்கட்டை

தேவையான பொருட்கள்:

  • சாமைமாவு -1 கப் 
  • துவரம்பருப்பு -14கப் 
  • சிவப்புமிளகாய்-1 
  • எண்ணெய் -1மேஜைக்கரண்டி 
  • கடுகு -1/4 தேக்கரண்டி 
  • பெருங்காயம்ஒரு சிட்டிகை 
  • கறிவேப்பிலைசிறியது 
  • உப்பு - தேவையான அளவு 
  • எண்ணெய்தே. அளவு

செய்முறை:

            துவரம் பருப்பை அரைமணிநேரம் ஊற 'வைத்து, தண்ணீரைவடித்து மிளகாய், உப்பு மற்றும் பெருங்காயம் சேர்த்து தண்ணீர் விடாமல் அரைத்துக் கொள்ளவும். பூரணத்தில் ஒரு பாத்திரத்தில் தண்ணீரைகொதிக்க வைக்கவும். அதில் 2 சொட்டு எண்ணெய் மற்றும் உப்பு சேர்க்கவும். தண்ணீர் கொதித்தவுடன் அதை சாமை மாவில்சேர்க்கவும், நன்கு கட்டி இல்லாமல் கிளறவும். கையில் எண்ணெய் தடவி மாவை சிறுசிறுஉருண்டைகளாக உருட்டவும். இட்லி பானையில் 10 நிமிடம் வேகவிடவும். வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்தவுடன் கடுகு மற்றும் கருவேப்பிலை தாளித்து அரைத்த துவரம் பருப்பு பூரணத்தை சேர்த்து 10 நிமிடம் மிதமான தீயில் வைத்து நன்கு வதக்கவும், வெந்த உருண்டைகளை அதனுடன் சேர்க்கவும், மெதுவாக கிளறவும் தேங்காய் எண்ணெயை விடவும். மிகவும் வாசனையாக இருக்கும். சுவையான அம்மணிபூர்ண கொழுக்கட்டை தயார்.

பலன்கள்:

          சாமையுடன் புரதம் நிறைந்த துவரம் பருப்பு சேர்த்து சமைப்பதால் உடல் வலிமையை கொடுக்கிறது. கறிவேப்பிலை,தேங்காய் எண்ணெய் சேர்ப்பதால் வைட்டமின் ஏ.பி.சிகாம்ப்ளக்ஸ் கிடைக்கிறது. காலை. இரவு உணவாக செய்துசாப்பிடலாம் எளிதில் ஜீரணமாகும்.

சாமைஇட்லி

தேவையான பொருட்கள்:

  • சாமைஅரிசி -1/2கப்
  • இட்லிஅரிசி - 11/2கப்
  • உளுந்து -1கப்
  • மிளகு - 1/2தேக்கரண்டி
  • சீரகம் - 1/2தேக்கரண்டி
  • நல்லெண்ணெய் - தே.அளவு
  • நெய் - தேவையான அளவு
  • உப்பு - தேவையான அளவு
  • இஞ்சி - சிறிதளவு

செய்முறை:

        அரிசி சாமை அரிசி மற்றும்உளுந்தை சேர்த்து 5-6 மணிநேரம் ஊற வைக்கவும். கிரைண்டரில்சிறிது கொரகொரப்பாக அரைத்துக்கொள்ளவும். 8 மணிநேரம் புளிக்க வைக்கவும். மாவில் துருவிய இஞ்சி, பொடிய செய்த சீரகம்,மிளகு மற்றும் உப்பு சேர்க்கவும்.நல்லெண்ணெய் மற்றும் நெய் சேர்க்கவும் (2 டீஸ்பூன்தலா) மாவை நன்கு கலக்கிகுழியான கிண்ணத்தில் எண்ணெய் தடவி மாவை அதில்விட்டு 15 நிமிடம் இட்லி தட்டில் வைத்து ஆவியில் வேக வைத்து எடுத்துக்கொள்ளவும். 5 நிமிடம் கழித்து ஈர ஸ்பூனால் கிண்ணத்தில்இருந்து இட்லியை எடுக்கவும். சட்னி அல்லது சாம்பாருடன் பரிமாறவும்.

பலன்கள்:

          சீரகம் நெய் சேர்த்து சமைப்பதால்நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது. இஞ்சி உடலில் சேர்ந்திருக்கும் அதிகப்படியான கொழுப்பைக் கரைக்கும். இதய நோய்,புற்றுநோய்வராமல் தடுக்கும் ஆற்றல் இந்த உணவிற்கு உண்டு.

சாமை உப்புமா

தேவையான பொருட்கள்:

  • சாமைஅரிசி -1/2கப் 
  • சின்னவெங்காயம்பொடியாகநறுக்கியது -8
  • பச்சைமிளகாய் -1
  • பச்சைபட்டாணி -2 கரண்டி
  • கடுகு - 1/4 தேக்கரண்டி
  • உளுத்தம்பருப்பு -1/4கரண்டி
  • உப்பு - தேவையான அளவு 
  • எண்ணெய் - சிறிதளவு

செய்முறை:

        சாமை அரிசியை 15 நிமிடங்கள்ஊற வைக்கவும்.ஒரு கடாயில் எண்ணெய்சேர்த்து கடுகு.உளுத்தம் பருப்பு மற்றும் பச்சைமிளகாய் வெங்காயம் சேர்த்து வதக்கவும். 1/2கப் தண்ணீர் சேர்க்கவும். தண்ணீர் நன்கு கொதித்தவுடன் சாமை அரிசி ஊறவைத்துள்ள நீரை வடித்து விட்டுசேர்க்கவும். தீயை மிதமாக வைத்துகடாயை மூடி வைத்து வேகவிடவும். 7-6 நிமிடங்கள் கழித்து நன்கு கிளறிவிட்டு அடுப்பை அணைக்கவும். சூடான சாமை உப்புமா தயார்.

பலன்கள்:

        அரிசிக்குமாற்றான உணவில் சாமையும் சிறந்த பலன் தருகிறது. இதில்உப்புமா பட்டாணி, உளுந்து பருப்பு உள்ளதால் வயதானவர்களுக்கு எளிதில் ஜீரணமாகிறது. பச்சை பட்டாணியில் வைட்டமின் சி. பி.கேமற்றும் புரதம்,நார்ச்சத்து,கால்சியம் உள்ளிட்டவை அடங்கியிருக்கின்றன. அயோடின் சத்து இருப்பதால் கண்கள் ஆரோக்கியம் மேம்படும்.

சாமை கீரைபுலவு

தேவையான பொருட்கள்:

  • சாமைஅரிசி - 1 கப்
  • கீரை - 2 கப்
  • பொடியாகநறுக்கியபெரிய வெங்காயம் – 1
  • இஞ்சி - 1/2துண்டு (அரைக்க)பச்சைமிளகாய் - 2 (அரைக்க)
  • கரம்மசாலா பொடி - 1/2ஸ்பூன்
  • மஞ்சள்தூள் - 1 சிட்டிகை
  • வெண்ணெய் - 2 டீஸ்பூன்
  • எண்ணெய், கடுகு,க.பருப்புஉப்பு - தேவையானஅளவு

செய்முறை:

        ஒரு பாத்திரத்தில் இரண்டுகப் தண்ணீரையும் ஒரு டீஸ்பூன் எண்ணெயையும்ஊற்றி அதில் சாமை அரிசியை சேர்த்துவேக வைக்கவும். அரிசி உதிரியாக இருக்க வேண்டும்.குழைய கூடாது. பின் நன்கு ஆறவைக்கவும். கடாயில் வெண்ணெயை ஊற்றி கடுகு, கடலைப்பருப்பு, இஞ்சிவிழுது. மிளகாய்விழுது, நறுக்கிய வெங்காயம் இவற்றைச் சேர்த்து வதக்கவும். பின் உப்பு, மஞ்சள்தூள், கரம் மசாலா பொடியுடன்ஏதேனும் கீரையை சேர்த்து தண்ணீர் சுண்ட வதக்கவும். பின் ஆறவைத்த சாதத்தைச்சேர்த்துக் கலக்கவும். 5-7 நிமிடம் அடுப்பிலேயே இருக்க விடவும். சூடாக உண்ண சுவையாக இருக்கும்.

பலன்கள்:

       ஏதேனும் ஒரு கீரையைப்பயன்படுத்தி சமைப்பது குழந்தைகள் முதல்,பெரியவர்கள் வரை ஆரோக்கியம் தரும். இரத்த அணுக்கள் உற்பத்திக் குறைபாட்டை இது சரி செய்யும். மஞ்சள், இஞ்சி போன்றவை கிருமி நாசினியாகவும் சத்துப் பொருளாகவும் இருக்கின்றது.

சாமை தக்காளிசாதம்

தேவையான பொருட்கள்:

  • கல்நீக்கிய சாமை அரிசி - 1/2கிலோ
  • தக்காளி -150 கிராம் 
  • இஞ்சி, பூண்டு விழுது -10 கி 
  • நறுக்கியபச்சைமிளகாய் - 5 
  • எண்ணெய் -100 கிராம் 
  • மஞ்சள்தூள்,உப்பு -தேவைக்கேற்ப 
  • தண்ணீர் - தேவைக்கேற்ப 
  • பட்டை, கிராம்பு, பிரியாணி இலை, ஏலக்காய், சோம்புஅனைத்தும் பொன்னிறமாக வறுத்து பொடி செய்யவும்.

செய்முறை:

      அரிசியை தண்ணீரில் கொட்டி சுத்தம் செய்து வைத்துக் கொள்ளவும். அகலமான பாத்திரத்தில் எண்ணெய் விட்டு அரிசியை தவிர மேற்கண்ட அனைத்துப்பொருட்களையும் பொன்னிறமாக வதக்கவும். பிறகு பொன்னிறமாக வதக்கிய பேஸ்டில் அரிசியை விட்டு கிளறவும். 1 1/2பங்கு தண்ணீர் சேர்த்து குக்கரில் வைத்து கிளறிக் கொண்டே இருக்கவும். கெட்டிப் பதம் வந்தவுடன் அடுப்பைசிம்மில் வைத்து 10 நிமிடம் வைத்து இறக்கவும்.

பலன்கள்:

        உடலுக்குத் தேவையான அடிப்படைச் சத்துக்கள் உள்ளன. இஞ்சி, பூண்டில் ஆன்டி ஆக்ஸிடன்ட் நிறைந்துள்ளன. அத்துடன் செரிமானத்தை சீராக்கி உடலை ஆரோக்கியமாக்க உதவுகிறது.

 

சாமை தயிர் வடை

தேவையான பொருட்கள்:

  • சாமை -1/4கப்
  • உளுத்தம்பருப்பு -1/4கப்
  • தயிர் -3/4கப்
  • பச்சைமிளகாய் 1
  • இஞ்சி -ஒரு சிறியதுண்டு
  • எண்ணெய்பொரிப்பதற்கு
  • புதினாசட்னி -2 தேக்கரண்டி
  • ஸ்வீட்சட்னி -2தேக்கரண்டி
  • மிளகாய்த்தூள் -1/4தேக்கரண்டி
  • சீரகத்தூள் – சிறிதளவு
  • உப்பு - தேவையான அளவு 
  • கொத்தமல்லிஇலை
  • காரபூந்தி,மாதுளை மூன்று சிறிது அலங்கரிக்க

செய்முறை:

               சாமை மற்றும் உளுத்தம்பருப்பைநன்றாக அலம்பி 2 மணிநேரம் ஊற வைக்கவும்.இஞ்சி,பச்சைமிளகாய் சேர்த்து தண்ணீர் தெளித்து மாவாக அரைத்து உப்பு சேர்த்துக் கொள்ளவும்.அடுப்பில் எண்ணெயை சூடாக்கி மாவை சிறு சிறுவடைகளாக உருட்டிப் போடவும். பொன்னிறமானவுடன் எண்ணெயில் இருந்து எடுத்து சூடான வெந்நீரில் 1 மணிநேரம் போட்டு ஊற வைக்கவும். தயிரைநன்கு கடைந்து அதில் சீரகத்தூள் மிளகாய்த் தூள் மற்றும் உப்புசேர்க்கவும். இந்த கலவையை சிறிதுநேரம் வைத்திருக்கவும். தண்ணீரில் போட்ட வடைகளை மெதுவாக பிழிந்து தயிர் கலவையில் போடவும், அதன்மேல் புதினா சட்னி, ஸ்வீட் சட்னி சேர்த்து பொடியாக நறுக்கிய மல்லி இலையை சேர்க்கவும். பூந்தி சேர்த்து பரிமாறவும்.மாதுளை சேர்க்கலாம்.

பலன்கள்:

           சாமையில் இரும்பு மற்றும் கொழுப்பு சத்து நிறைந்துள்ளது. வயிற்றுப்புண்கள் விரைவில் ஆறும் மலச்சிக்கலை தீர்க்கும் ஆற்றல் கொண்டது. உளுந்து,புதினா,சீரகம்,கொத்தமல்லியில் உள்ள சத்துக்கள் உடலுக்குமேலும் ஆரோக்கியம் தருகின்றன.

சாமை நெய் உருண்டை

தேவையான பொருட்கள்:

  • சாமை அரிசி - 1/4கிலோ 
  • பாசிபயறு - 50 கிராம் 
  • ஏலக்காய்-10 எண்ணிக்கை 
  • நெய் -100மிலி 
  • வெல்லம் -200 கிராம்

செய்முறை:

          சாமை அரிசி,பாசிபயறு இரண்டையும் தனித்தனியாக பொன்னிறமாக வறுக்கவும். இரண்டையும் நைசாக மாவாக்கி கொள்ளவும் மாவுடன் பொடி செய்த ஏலக்காய். வெல்லம் சேர்த்து மிக்ஸியில் அரைக்கவும.(நீர் விடாமல்) பிறகு நெய்யை மிதமாக சூடு செய்து முந்திரி திராட்சையை பொரித்து அரைத்த மாவுடன் சேர்த்து நெய்விட்டு உருண்டை பிடிக்கவும்.

பலன்கள்:

         புரதச்சத்தும், ஊட்டச்சத்தும் நிறைந்திருப்பதால் உடலை வலுவாக்குகிறது. வளரும் குழந்தைகள் எடை அதிகரிக்க உதவுகிறது. நோய் எதிர்ப்பு ஆற்றல் மேம்படும்

சாமைப் பொங்கல்

 தேவையான பொருட்கள்:

  • சாமைஅரிசி - 1/4கிலோ
  • பாசிபருப்பு-100 கிராம் 
  • நெய் -தேவைக்கேற்ப 
  • முந்திரிதிராட்சை - சிறிதளவு 
  • பனங்கற்கண்டு - 14 கிலோ

செய்முறை:

       பாசிப்பருப்பை சிறிது வறுத்து சாமை அரிசியுடன் சேர்த்து 3 மடங்கு நீர் பனங்கற்கண்டு சோத்துக்கிளறவும். நெய்யில் முந்திரி திராட்சை சேர்த்து, வறுத்து அதையும் சாமைப் பொங்கலில் இட்டுக் கிளறி இறக்கவும்.

பலன்கள்

       முந்திரி பாசிப்பருப்பில்.கொழுப்பும். புரதமும் நிறைந்து உள்ளதால் வளரும் குழந்தைகளுக்கு ஏற்றது. பனங்கற்கண்டு உடனடி ஆற்றலையும், இரும்புச்சத்தையும் உடலுக்கு அளிக்கிறது.