தேவையானபொருட்கள்:
செய்முறை:
திணை அரிசியை நிறம் மாறாமல்மூன்று நிமிடங்களுக்கு வறுக்கவும். ஒரு பாத்திரத்தினை அடுப்பில்ஏற்றி எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் தாளிக்க பொருட்களை சேர்த்து தாளித்துக் கொள்ளவும். அதனுடன் நறுக்கிய வெங்காயத்தை சேர்த்துப் பொன்னிறமாக வதக்கவும். அதில் தண்ணீர் சேர்த்து ஒரு கொதி வந்தவுடன்திணை அரிசியைச் சிறிது சிறிதாகச் சேர்த்துக் கிளறவும். பிறகு அந்தப் பாத்திரத்தை மூடி நன்றாக வேகவிடவும், கறிவேப்பிலைச் சேர்த்து சூடாகப் பரிமாறவும். கொத்தமல்லிச் சட்னி அல்லது குடமிளகாய்ச் சட்னியுடன் சேர்த்துச் சாப்பிட சுவையாக இருக்கும்.
பலன்கள்:
எளிதில் செரிமானம் ஆகக் கூடிய உணவு, உளுந்து , கறிவேப்பிலையில் உள்ள ஆன்டி ஆக்ஸிடன்ட்உடல் சூட்டைத் தணிக்கின்றன. சளி காய்ச்சலில் இருந்துவிரைவில் விடுபடச் செய்து ஆரோக்கியம் தரும்.
தேவையான பொருட்கள்:
செய்முறை:
உளுத்தம்பருப்பு வெந்தயத்தை நன்றாக அலசி 4 மணிநேரம் ஊறவைக்கவும். திணை அரிசியை 3 முறைநன்றாக அலசி 4 மணிநேரம் ஊறவைக்கவும். இரண்டையும் தனித்தனியாக மைய அரைத்துக் கொள்ளவும், பிறகு இரண்டையும் ஒன்று சேர்த்து, உப்பைச் சேர்த்து 6 முதல் 8 மணிநேரம் மூடிவைக்கவும்.மாவு நன்றாக புளித்தவுடன்நன்றாக கலக்கி உப்பு சேர்த்து தோசைகளாக வார்க்கவும், இதை வெங்காயச் சட்னியுடன்பரிமாற சுவையாக இருக்கும்.
பலன்கள்:
புரதச்சத்தும், மாவுச்சத்தும் நிறைந்து உள்ளதால் உடலுக்கு உடனடி ஆற்றல் கிடைக்கும். வெந்தயம் உடலை வலுவாக்கவும், செரிமானத்திறனைஅதிகரிக்கவும் உதவுகிறது. நோய் எதிர்ப்பு ஆற்றல்மேம்படும்.
தேவையான பொருட்கள்:
செய்முறை:
திணை அரிசி பாசிபயிறுஇரண்டையும். தனித்தனியாக பொன்னிறமாக வறுக்கவும். இரண்டையும் நைசாக மாவாக்கி கொள்ளவும், ஏலக்காயை வறுத்து பொடித்து மாவுடன் வெல்லம் சேர்த்து மிக்ஸியில் அரைக்கவும். (நீர் சேர்க்காமல்) பிறகுநெய்யை மிதமாக சூடு செய்து முந்திரி, திராட்சை பொரித்து அரைத்த மாவை நெய்யில் விட்டுஉருண்டை பிடிக்கவும்.
பலன்கள்:
இதில் நிறைந்துள்ள புரதச்சத்தும், இரும்பு சத்தும் குழந்தைகளின் தசை மற்றும் எலும்புவளர்ச்சிக்கு உதவி செய்கிறது. நார்ச்சத்துமிகுந்திருப்பதால் மலச்சிக்கலை அகற்றுகிறது. முந்திரியில் உள்ள நல்ல கொழுப்புஉடல் எடையை அதிகரிக்க உதவுகிறது. திராட்சையில் உள்ள வைட்டமின் சிநோய் எதிர்ப்பு சக்தியை அளிக்கிறது. நரம்பு சம்பந்தப்பட்ட கோளாறுகளை நீக்குகிறது.
தேவையான பொருட்கள்:
செய்முறை:
உளுந்து மற்றும் கடலைப்பருப்பைத் தனித்தனியாகக் கழுவி ஊறவைக்க வேண்டும். திணையைச் சுத்தம் செய்து சிறிதளவு வெந்தயம் சேர்த்து 4 மணிநேரம் ஊறவிடவும்,ஊற வைத்த அனைத்தையும், ஒன்றாகச் சேர்த்துக் குருணையாக அரைத்துக் கொள்ளவும், தேவையான சோம்பு உப்பை சேர்த்து இரவு முழுவதும் புளிக்கவைக்கவும், மறுநாள் தோசை மாவு பதத்துக்குத்தண்ணீர் ஊற்றி நன்றாகக் கலக்கவேண்டும்,நறுக்கி வைத்த காய்கறிகளை கலந்து பின்பு தோசைக் கல்லில் அடையாகத் தட்டி சுட்டு எடுக்கவும்.
பலன்கள்:
திணையில் இரும்பு சத்து இருப்பதனால் இரத்த சோகை வராமல் காக்கும். கடலைப்பருப்பில் உள்ள புரதச்சத்து தசைவளர்ச்சிக்கு உதவும். உளுந்தம் பருப்பு, தேங்காயில் உள்ள சத்துக்கள் ஆரோக்கியமானஉடல் எடை பெற உதவும்.
தேவையான பொருட்கள்:
செய்முறை:
திணை அரிசி,பாசிபருப்பு இரண்டையும் தனித்தனியாகபொன்னிறமாக வறுத்து ரவை பதத்தில் அரைத்துக்கொள்ளவும். இதனுடன் மூன்று மடங்கு நீர் (அல்லது) காய்ச்சிய பாலில் வெல்லத்தை கரைத்து அடுப்பில் வைத்துக் காய்ச்சவும். நெய்யில் முந்திரி திராட்சை ஏலக்காய் வறுத்து பாயாசத்தில் சேர்த்து கிளறி இறக்கவும்.
பலன்கள்:
மாவுச்சத்து நிறைந்த திணையில் செய்யப்படும் திண்பண்டங்களை குழந்தைகள் விரும்பி சாப்பிடுவர். வெல்லம், பாசிப்பயிறு முந்திரி, திராட்சை ஆகியவற்றின் கூட்டுக்கலவையில் ஊட்டச்சத்துக்கள் நிறைய உள்ளது. இந்த பாயசம் உடல்வலு குறைந்திருப்பவர்களுக்கும்,இரும்புச்சத்து பீட்டா கரோட்டின், கால்சியம் சத்து குறைபாடு உள்ளவர்களுக்கும் ஊட்டம் அளிக்கும்.
தேவையான பொருட்கள்:
செய்முறை:
திணை அரிசியை 1 மணிநேரம்தண்ணீரில் ஊறவைக்கவும். தண்ணீரை வடித்து மிக்ஸியில் மிளகாய், உப்பு, பெருங்காயம், சேர்த்து தண்ணீர் சேர்க்காமல் அரைக்கவும். அரைத்த விழுதை இட்லி தட்டில் எண்ணெய் தடவி ஆவியில் 15 நிமிடம் வேகவிடவும். நன்கு கெட்டியாக இருக்கும் இட்லிகளை ஆறவைத்து மிக்ஸியில் ஒரு திருப்பு, திருப்பிஉதிர்த்துக் கொள்ளவும். கடாயில் எண்ணெய் சேர்த்துக் காய்ந்ததும் கடுகு மற்றும் வெங்காயம் சேர்த்து,வதக்கி உதிர்ந்த திணை கலவையை சேர்க்கவும், சிறிது தண்ணீர் தெளித்து அடுப்பை மிதமான தீயில் வைத்து 5 நிமிடம் வதக்கவும். கொத்தமல்லி கருவேப்பிலை சேர்த்து அடுப்பை அணைக்கவும். சுவையான புட்டு தயார். சூடாக பரிமாறவும்.
பலன்கள்:
பித்தம், கபநோய்கள் சரியாகும். பெருங்காயம்,வெங்காயத்தில் உள்ள ஆன்டி ஆக்ஸின்ட்நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்தும். கடுகு தசைகளில் ஏற்படும் வலிகளை நீக்கும்.
தேவையான பொருட்கள்:
செய்முறை:
முந்திரி பருப்பை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். ஒரு அகலமான தட்டில்திணை மாவு மற்றும் பொடிசெய்த நாட்டுச் சர்க்கரை மற்றும் ஏலக்காய் பொடி சேர்த்து நன்குகலக்கவும். நெய்யில் முந்திரி பருப்பை சேர்த்து பொன்னிறம் ஆனவுடன் சூடான நெய் கலவையை தட்டில்சேர்க்கவும், ஸ்பூனால் கலந்து விட்டு சிறு உருண்டைகளாக பிடிக்கவும்.
பலன்கள்:
திணை மற்றும் நெய்யில்புரதம், நல்ல கொழுப்பு அதிகம்உள்ளதால் உடலுக்கு தேவையான ஆற்றலைத் தருகிறது. முந்திரி, ஏலக்காயில் உள்ள வைட்டமின் சத்துக்களும், தாதுஉப்புகளும் குழந்தைகளின் மூளையை சுறுசுறுப்பாக இயங்கச் செய்கின்றன. நினைவாற்றலை அதிகரிக்கும். ஏலக்காய் உடலின் உட்புற புண்களை குணப்படுத்தும்.
தேவையான பொருட்கள்:
செய்முறை:
இரண்டு மாவையும் சேர்த்து நன்கு சலித்துக் கொள்ளவும், அத்துடன் சீரகம்,எள்,மிளகாயத்தூள், உப்பைச்சேர்க்கவும் பின் தேவைக்கு சிறிதளவுஎண்ணெய் ஊற்றி பிசையலாம். வெந்நீரை மாவில் ஊற்றிப் பிசையவும். மாவு சரியான பதத்தில்இருக்கவேண்டும். மிகவும் கெட்டியாக இருக்கக் கூடாது. அதே போல் வடைமாவுபோல நீர் சேர்த்து இருக்கக்கூடாது. பின் அச்சில் மாவைப்போட்டு முறுக்கைச் சூடான எண்ணெயில் பிழிந்து சுட்டு எடுக்கவும்.
பலன்கள்:
பித்தம் மற்றும் செரிமானக் கோளாறை சரி செய்யும். சீரகம் ,எள்ளில் உள்ள இரும்புச்சத்து இரத்தம் சீரமைப்பிற்கும், ஹீமோகுளோபின் அதிகரிக்கவும் உதவி செய்கின்றன.மாவுச்சத்துகள் புரதச்சத்து நிறைந்தது. உள்ளதால் உடலுக்கு ஆற்றலை வழங்குகிறது.
தேவையான பொருட்கள்:
செய்முறை:
திணை அரிசி, உளுந்தை 3/4மணிநேரம் ஊறவைக்கவும், பின் நைசாக அரைக்காமல்ரவை பதத்தில் அரைத்துக் கொள்ளவும், இதனுடன் பொடியாக நறுக்கிய தேங்காய் இஞ்சி, பச்சைமிளகாய், கொத்தமல்லி, கருவேப்பிலை உப்பு, 1கப் ரவையைக் கலக்கவும், இந்தக் கலவையை வடைபோல் தட்டி எண்ணெயில் வறுக்கவும்.இதை சட்னியுடன் பரிமாறவும்.
பலன்கள்:
தேங்காயில் வைட்டமின் சி.பி. காம்ப்ளக்ஸ்இரும்பு சத்து, செலீனியம் ஆகியன நிறைவாக உள்ளது. இது எலும்பு வளர்ச்சிக்குஉதவுகிறது. வயிற்றுப்புண்ணை குணப்படுத்தும். புற்றுநோய் செல்களை அழிக்கும் ஆற்றல் கொண்டது.
தேவையான பொருட்கள்:
செய்முறை:
துவரம் பருப்பை பாதி அளவு வேக வைக்கவும் பிறகு அரிசியையும் வேகவைத்த பருப்பையும் ஒன்றாக தண்ணீர் விட்டு வேகவைக்கவும்.வாணலியில் எண்ணெய் ஊற்றி தும் கடுகு.காயம், வரமிளகாய்.தக்காளி இவற்றையும் மஞ்சள் தூளையும் சேர்த்து பொன்னிறமாக வதக்கி தேவையான உப்பு சேர்த்து பருப்பு சாதத்துடன் கலந்து எடுக்கவும்
பலன்கள்:
திணையில் இரும்புச்சத்து கரோட்டின் ஆகியவை அதிகம் உள்ளது. கால்சியம், பாஸ்பரஸ் சத்துக்கள் நிறைந்துள்ளதால் எலும்பு மற்றும் மூளை செயல் திறனுக்கு உதவுகிறது துவரம் பருப்பில் உள்ள புரதச்சத்து உடல் வளர்ச்சிக்கும். ஆரோக்கியத்திற்கும் உறுதுணையாக இருக்கிறது
தேவையான பொருட்கள்:
செய்முறை:
அடிகனமான பாத்திரத்தில் தண்ணீர் மற்றும் பால் சேர்த்து திணைமாவைசேர்த்து கட்டி இல்லாமல் கரைத்துக் கொள்ளவும். நெய் சேர்த்து மெல்லியதீயில் வைத்து நன்கு கிளறவும். கெட்டியாக வந்தவுடன் அடுப்பை அணைத்து ஆறியவுடன் சிறுசிறு உருண்டைகளாக உருட்டவும். உருண்டைகளை மூடி வைக்கவும். ஒருகடாயில் 1/2கப் தண்ணீர் எடுத்துக்கொள்ளலாம். தேங்காய் பால் சேர்த்து லேசாககொதி வந்தவுடன் உருண்டைகளை சேர்க்கவும்.5நிமிடம் மெல்லிய தீயில் வைத்து வேகவிடவும். நாட்டு சர்க்கரை மற்றும் ஏலக்காய் பொடி சேர்க்கவும்.தேங்காய்பால் சேர்த்து நன்கு கலக்கி உடனடியாக அடுப்பை அணைக்கவும். ஆறியவுடன் கெட்டியாகிவிடும்.
பலன்கள்:
புரதம், கார்போஹைட்ரேட் நிறைந்தஉணவு, தேங்காய் பால் உடல் வளர்ச்சிக்குபோதிய சத்துக்களை அளிக்கிறது. வைட்டமின் சத்துக்கள் பார்வைத்திறன், கூந்தல் வளர்ச்சியை அதிகரிக்கும்.