தேவையான பொருட்கள்:
செய்முறை:
சோளம், உளுந்து, வெந்தயம் மூன்றையும்சுத்தம் செய்து கழுவி 8 மணிநேரம் ஊறவைக்கவும். ஊறவைத்த தண்ணீரைவிட்டே மிக்ஸியில் நன்கு அரைக்கவும். அத்துடன் உப்பு, நறுக்கிய கொத்தமல்லி, கருவேப்பிலை சேர்த்து கலக்கி ஆப்பச்சட்டியில் ஊற்றவும். அதனுடன் பொடியாக நறுக்கிய சின்னவெங்காயம் ,மிளகு,தூவி,மூடி போட்டுமிதமான சூட்டில் வேகவைத்து எடுத்து சாப்பிடவும். சட்னி சாம்பார், இட்லி பொடியுடன் கலந்து சாப்பிடலாம்.ஊத்தாப்பம் மாவில் தண்ணீர் கலந்து சோள தோசையாகவும் சுடலாம்.
பலன்கள்:
தயமின் மற்றும் பி காம்ப்ளக்ஸ் வைட்டமின்கள் அதிக அளவில் உள்ளன. வயிற்றுப்புண்,வாய் துர்நாற்றம் நீங்கும். உளுந்தில் உள்ள புரதச்சத்து உடலுக்குத்தேவையான ஆற்றலை வழங்குகிறது.வெந்தயம் பித்த நீர் சுரப்பை மேம்படுத்துவதால் செரிமானம் எளிதாகிறது. மிளகு தொண்டை கரகரப்பை போக்கும்.
தேவையான பொருட்கள்:
செய்முறை:
சோளம்,உளுந்து,இட்லி,அரிசி ஆகியவற்றை 3 மணிநேரம் ஊறவைத்து கரகரவென்று அரைக்கவும். ஒருநாள் புளிக்க வைத்து,வாணலியில் ஒரு பெரிய கரண்டிஎண்ணெய் விட்டு கடுகு, சீரகம், கடலைப்பருப்பு, கறிவேப்பிலை,வெங்காயம்,மிளகாய் வற்றல் போட்டு நன்கு வதக்கி புளித்த மாவில் கொட்டி 10 நிமிடம் கலந்து வைக்கவும். பிறகு பனியார சட்டியில் ஊற்றி எடுத்து தேங்காய் சட்னியுடன் பரிமாறினால் மிகவும் சுவையாக இருக்கும்.
பலன்கள்:
சோள மாவும்,இட்லிமாவும் சேர்த்து உள்ளதால் எளிமையாக ஜீரணிக்கப்பட்டு உடலுக்கு ஆற்றலை வழங்குகிறது. சீரகம் புண்களை குணப்படுத்தும். கறிவேப்பிலை நோய் எதிர்ப்பு சக்தியைஅதிகரிக்கும்.
தேவையான பொருட்கள்:
செய்முறை:
சோள மாவை, உப்பு, நாட்டுச் சர்க்கரை, எண்ணெய் சேர்த்து வெந்நீர் தெளித்து சப்பாத்தி மாவு பதத்துக்குப் பிசையவும். அதை சிறு உருண்டைகளாகச் செய்துஎண்ணெய் தடவி சப்பாத்தியாக தேய்த்து. சூடான கல்லில் பொன்னிறமாக சுட்டு எடுக்கவும். சுட்டபின் சிறிது நெய் தடவி பரிமாறலாம்.சோள ரொட்டி சூடாக இருக்கும் போது மிருதுவாகவும், ஆறியதும் சிறிது மொறுமொறுப்பாகவும் இருக்கும்.
பலன்கள்:
சோளம் உடலை உறுதியாக்கும். புரதம்,இரும்புச்சத்து,கால்சியம் நிறைந்திருப்பதால் வளரும் குழந்தைகளுக்கு ஏற்றது. நாட்டுச்சர்க்கரை சேர்த்து செய்யப்படுவதால் உடலுக்கு உடனடி ஆற்றல் தருகிறது.
தேவையான பொருட்கள்:
செய்முறை:
சோளம்,பச்சைபயிறு, கடலைப்பருப்பு ஆகிய மூன்றையும் ஒருமணிநேரம் ஊறவைக்கவும், பச்சைமிளகாய், சீரகம் சேர்த்து குருணை போல் அரைத்துக் கொள்ளவும். அதனுடன் பொடியாக நறுக்கிய வெங்காயம், கொத்தமல்லி, கருவேப்பிலை, நசுக்கிய பூண்டு ஆகியவற்றை அரிசி மாவுடன் சேர்த்து நன்கு கலந்து பதினைந்து நிமிடம் ஆவியில் வேகவிடவும். ஆறிய பின்னர் தேவையானஉப்பு தேங்காய் சேர்த்து பிசைந்து எண்ணெய் காய்ந்ததும் வடைகள் தட்டி பொரித்து எடுத்து சூடாக பரிமாறவும்.
பலன்கள்:
சோளத்தில் புரதச்சத்து நிறைந்துள்ளது. இது உடலை வலுவாக்குகிறது. பச்சைப்பயிறில் நார்ச்சத்தும் ஓரளவு கொழுப்புச் சத்தும் உள்ளதால் ஜீரணம் எளிதாகிறது. வைட்டமின் A, E, C, K மற்றும் பி காம்பளக்ஸ் ஆகியனஇதில் அடங்கியுள்ளன. சீரகத்தில் உள்ள ஆன்டி ஆக்ஸிடன்ட்நோய் எதிர்ப்பு ஆற்றலை மேம்படுத்தும்.