குடிநீர் கஷாயம் அல்லது சாறு வகைகளுடன் சர்க்கரையைச் சேர்த்துக் காய்ச்சிப் பதமும் மணமும் வரும் சமயத்தில் பொடித்து வைத்துள்ள சூரணங்களைச் சேர்த்து நன்றாகக் கிளறி மிதமான சூட்டில் நெய்யையும் ஆறிய பின்னர் தேனையும் விட்டுக் கிண்டி எடுத்து வைத்துக் கொள்வதாகும். இலேகியத்தில் சேர்க்கப்படும் தேன், சர்க்கரை, பனைவெல்லம் போன்ற இனிப்புப் பொருட்கள் இலேகியத்திற்கு சுவையூட்டுவதுடன் இலேகியத்தில் கலந்துள்ள மூலப் பொருட்களின் மருத்துவ சக்தியை ஊக்குவிக்கும் உபகாரமாகவும் செயல்படுகிறது.
இலேகியத்திற்கான பாகு தயாரிக்க மிதமான தீயையே பயன்படுத்த வேண்டும்.
பாகுபதம் அறிய:
1. பாகை துடுப்பால் தொட்டு எடுக்க அதிலிருந்து தொடர்ச்சியாக மெல்லிய நூலால் இணைக்கப் பெற்றது போன்ற தோற்றத்துடன் கீழே விழும்.
2. மேற்படி பாகை விரல்களுக்கிடையில் வைத்து அழுத்தி பின் விரல்களால் பிரிக்க அக்கலவை நூல் போன்று இரு விரல்களையும் பிணைத்து நிற்கும்.
3. சரியான பாகுபதத்தை நிச்சயித்த பிறகு சரக்குகளை சேர்த்து நன்கு கிளற வேண்டும். அந்தச் சமயத்தில் பாத்திரத்தை அடுப்பிலிருந்து எடுத்து விட வேண்டும்.
4. மேலும் கலவையை நீண்ட நேரம் சூடு செய்வதால் பாகுபதம் மாறிவிடுவதுடன் லேகியமும் கல்போல் இறுகிவிடும். சர்க்கரைப் பாகிலுள்ள நீர் முழுவதும் சுண்டிவிடுவதால் சர்க்கரை மணல் போன்ற படிவமாக மாறிவிடுகிறது.
5. இளஞ்சூட்டில் நெய்யையும் அதன் பிறகு தேனையும் சேர்க்க வேண்டும்.
6. இலேகியம் மிகவும் கடினமாகவோ தடித்த திரவமாகவோ இருத்தல் கூடாது. இரு விரல்களுக்கிடையில் உருட்டிப் பார்க்கும் பொழுது விரல்களில் ஒட்டக் கூடாது. விரல் ரேகை பதியுமளவிற்கு மென்மையாக இருக்க வேண்டும்.
7. உலோகங்களைப் பற்பமாக்கியும் சேராங்கொட்டை போன்ற சரக்குகளை சுத்தி செய்து லேகியத்தில் சேர்க்க வேண்டும்.
8. லேகியத்தின் நிறம், மணம், சுவை ஆகியன அதில் சேரும் மருந்துப் பொருட்களையே பெரிதும் பொருத்ததாகும். இலேகியங்கள் நல்ல முறையில் தயாரிக்கப்பட்டு பாதுகாக்கப்பட்டு வந்தால் ஓர் ஆண்டு வரை கெடாமல் இருக்கும். காளான் பூத்தல், நொதித்தல், விபரீதமான மணம் வீசுதல் ஆகியன லேகியம் சீர்கேட்டின் அறிகுறிகளாகும்.
தேவையான சரக்குகள் :
1. அஸ்வகந்தா -102.6 கி
2. சந்தனம் -25.6 கி
3. கோரைக்கிழங்கு -25.6 கி
4. கடுக்காய் பூ -25.6 கி
5. விலாமிச்சம் வேர் -25.6 கி
6. தேசாவரம் -25.6 கி
7. சித்திரமூலம் -25.6 கி
8. சர்க்கரை -256.1 கி
9. கிஸ்மிஸ்பழம் -25.6 கி
10. ஜாதிக்காய் -25.6 கி
11. கூகைநீர் -25.6 கி
12. திரிகடுகு -25.6 கி
13. சாம் -256.1 கி
14. லவங்கம் - 25 கி
15. லவங்கப்பட்டை -25.6 கி
16. ஏலம் -25.6 கி
17. நெய் -500 கி
செய்முறை :
அஸ்வகந்தா, சந்தனம், கோரைக்கிழங்கு, கடுக்காய் பூ, விலாமிச்சம் வேர், தேசாவரம், சித்திர மூலம் இவற்றுடன் பால், சர்க்கரை சேர்த்து பாகுபதம் செய்து அதில் கிஸ்மிஸ், பேரீச்சம்பழம், ஜாதிக்காய், கூகை நீர், திரிகடுகு, லவங்கம், லவங்கப்பட்டை, ஏலம், இவைகளை அரைத்து நெய்விட்டு கிண்டி மெழுகு பதத்தில் எடுத்து பத்திரப்படுத்தவும்.
அளவு :
5 - 10 கிராம் தினம் இரண்டு அல்லது மூன்று வேளைகள் பாலில் உட்கொள்ளவும்.
தீரும் நோய்கள்:
பிரமேகம் மற்றும் வெட்டையைப் போக்கி தாது விருத்தி உண்டாக்கி உடல் பலத்தைப் பெருக்கும் கல்ப மருந்து.
தேவையான பொருட்கள்:
1. பிரண்டைச்சாறு -50 மி.லி
2. குமரி வேர்ச்சாறு -50 மி.லி
3. தேத்தான் கொட்டை -50 மி.லி
4. காட்டுக்குருணை -126 கி
5. நாக பற்பம் -25 கி
6. நத்தை பற்பம் -25 கி
7. மாம்பருப்பு -50 கி
8. சித்திர மூல வேர்ப்பட்டை -25 கி
9. திரிபலா -151 கி
10. முத்து சிற்பி பற்பம் -50 கி
11. சர்க்கரை -2.5 கி.கி
12. பால் -5 லி
13. திரிகடுகு -50 கி
செய்முறை:
மேற்கண்ட சரக்குகளை ஒன்றாய் சேர்த்துக் காய்ச்சி பாகுபதம் வந்தவுடன் 500 மி.லி நெய் சேர்த்து கிண்டி இறக்கி வைக்கவும். பின் தேன் சேர்த்து மெழுகு பதத்தில் பத்திரப்படுத்தவும்.
அளவு :
5 - 10 கிராம் தினம் 2 அல்லது 3 வேளைகள் சாப்பிடவும்.
தீரும் நோய்கள்:
எல்லா விதமான மூலநோய்களைப் போக்கி உடல் உஷ்ணத்தைக் குறைத்து ஆரோக்கியமளிக்கிறது.
தேவையான பொருட்கள் :
1. கண்டங்கத்திரி -13.1 கி
2. பால் -1.870லி.
3. வெல்லம் -374.2 கி
4. அமுக்கரா -13.1 கி
5. பொன் முசுட்டை -13.1 கி
6. நன்னாரி வேர் -13.1 கி
7. நிலப்பனை வேர் -13.1 கி
8. சுக்கு -65.5 கி
9. சிறு செருப்படை -65.5 கி
10. கரிசாலை -65.5 கி
11. தக்கோலம் -6.5 கி
12. கூகை நீர் -6.5 கி
13. கரியபோளம் -6.5 கி
14. தான்றிக்காய் -6.5 கி
15. நெல்லி வற்றல் -6.5 கி
16. திப்பிலி -6.5 கி
17. திராட்சை -6.5 கி
18. வாய்விடங்கம் -6.5 கி
19. செம்முள்ளி -6.5 கி
செய்முறை :
பாலுடன் வெல்லம் சேர்த்து காய்ச்சி பாகுபதம் செய்து அதில் அமுக்கரா, பொன்முசுட்டை, நன்னாரி வேர், நிலப்பனை வேர், சுக்கு, சிறுசெறுபடை, கரிசாலை. தக்கோலம், கூகை நீர், கரியபோளம், தான்றிக்காய், நெல்லி வற்றல், திப்பிலி, திராக்க்ஷாதி வாய்விடங்கம் இவைகளை இடித்து சூரணித்து மேற்படி பாகில் தூவி நெய் சேர்த்துக் கிண்டவும்.
அளவு:
10-15 கிராம் இரண்டு அல்லது 3 வேளைகள் உண்ணவும்.
தீரும் நோய்கள்:
தாய்மார்களுக்கு பிரசவத்திற்குப் பின் ஏற்படும் அசதி, பசியின்மை, சோர்வு முதலியவற்றைப் போக்கி ஆரோக்கியமாக இருக்கச் செய்து அதிக பால் சுரக்கச் செய்கிறது.
தேவையான பொருட்கள்
1. சுக்கு -35 கி
2. மிளகு -35 கி
3. திப்பிலி -35 கி
4. சீரகம் -35 கி
5. ஏலம் -35 கி
6. வாய்விடங்கம் -35 கி
7. கிராம்பு -35 கி
8. தாளிச பத்திரி -35 கி
9. மேல்தோல் நீக்கிய இஞ்சிச்சாறு -1.4 லி.
10. கண்டங்கத்திரி சாறு -1.4 லி.
11. நெரிஞ்சில் சமூலம் சாறு -1.4 லி.
12. வெள்ளை முள்ளங்கிச்சாறு -1.4 லி.
13. எலுமிச்சம் பழச்சாறு -1.4 லி.
14. பசுவின் பால் -2.8 லி.
15. பனைவெல்லம் -2.8 லி.
16. தேன் -350 கி
17. நெய் -700 மி.லி.
செய்முறை :
1-8 வரையுள்ள சரக்குகளை சேர்த்து கலந்து பின்னர் எல்லா (இஞ்சி, கண்டங்கத்திரி, நெருஞ்சில், முள்ளங்கி மற்றும் எலுமிச்சம் பழச்சாறு) சாறுகளையும் பாலையும் ஒன்றாகக் கலந்து அதில் பனை வெல்லத்தையும் சேர்த்து நன்கு கலந்து வைக்கவும்.
தீரும் நோய்கள்:
வாயு, பித்தம், சூலை, வலிப்பு, பொருமல், வாந்தி, அஜீரணம், பசியின்மை, ருசியின்மை ஆகியன நீங்கும்.
அளவு:
6- 12 கிராம் வீதம் இரண்டு வேளைக்கு சாப்பிடலாம்.
தேவையான பொருட்கள்:
1. பொன்னாங்கண்ணி சாறு -3 கி.கி.
2. பால் -3 கி.கி.
3. இளநீர் -3 கி.கி.
4. இஞ்சிச்சாறு -3 கி.கி.
5. ஏலம் -1.79 கி.கி.
6. லவங்கம் -1.20 கி.கி.
7. சர்க்கரை -7.19 கி.கி.
8. சிவகரந்தை -1.79 கி.கி.
9. தேன் -3.00 கி.கி.
10. நெய் -3.00 கி.கி.
செய்முறை :
சர்க்கரையை தண்ணீரில் கரைத்து வடிகட்டி, இளநீர், பொன்னாங்கண்ணிச்சாறு, பால், இஞ்சிச்சாறு இவைகளை சேர்த்து சூடேற்றி பாகுபதமாக எடுத்துக் கொண்டு மற்ற சரக்குகளை நன்கு கலந்து பின்னர் தேன், நெய் போன்றவற்றை சேர்த்து கிளறி வைத்துக் கொள்ளவும்.
அளவு:
5 கிராம் வீதம் தினமும் 2-3 வேளைகள் உணவிற்கு பின் பாலுடன் சாப்பிடவும்.
தீரும் நோய்கள்:
நரம்புத்தளர்ச்சி, ஞாபகமறதி, தாது இழப்பு, சோகை, மேகவெட்டை முதலியன.
தேவையான பொருட்கள்
1. கடுக்காய் -3.5 கி.கி.
2. சிவதை -35 கி
3. இஞ்சி -35 கி
4. மிளகு -35 கி
5. ஓமம் -35 கி
6. வாய்விடங்கம் -35 கி
7. திப்பிலி -35 கி
8. ஆவின் நெய் -1.6 லி
9. தேன் -1லி
செய்முறை :
கடுக்காயை இடித்து எட்டு பங்கு நீர் கலந்து பின்னர் அதை ஒரு பங்காக வற்ற வைத்து சர்க்கரையுடன் சேர்த்து பாகுபதம் செய்து அதில் சிவதை, இஞ்சி, மிளகு, ஓமம், வாய்விடங்கம், திப்பிலி அரைத்துப் போட்டு நெய்விட்டுக் கிண்டி மெழுகு பதத்தில் தேன்விட்டு கலந்து வைக்கவும்.
அளவு:
2 - 6 கிராம் வரை தினம் ஒரு வேளை சாப்பிடவும்.
தீரும் நோய்கள் :
மாந்தம், சூலை, மலச்சிக்கல், வாயுத் தொல்லை, மூலவாய், வயிற்றுப்புண் ஆகியவை குணமாகும். இது ஒரு மலமிளக்கி லேகியம்.
தேவையான பொருட்கள்:
1. காரக் கருணை -3 கி.கி.
2. கடுக்காய் -500 கி
3. நெல்லிக்காய் -500 கி
4. தான்றிக்காய் -500 கி
5. சுத்தித்த பூநீறு -750 கிராம்
6. நல்லெண்ணெய் -2 கி.கி.
செய்முறை :
கருணைக் கிழங்கை உப்புநீரில் வேக வைத்து எடுத்து அத்துடன் திரிபலா சூரணத்தையும் பூ நீற்றையும் சேர்த்துப் பிசைந்து அடுப்பில் ஏற்றி நல்லெண்ணெய் விட்டு மெழுகு பதம் வரும் வரை கிண்டி இறக்கவும்.
அளவு:
3 - 6 கிராம் காலை, மாலை இருவேளையில் உட்கொள்ளவும்.
தீரும் நோய்கள்:
எல்லா வகையான மூல நோய்களும் தீரும்.
தேவையான பொருட்கள் :
1. கண்டங்கத்திரி சமூலம் -1750 கி
2. ஆவின் நெய் -200 கி
3. பனை வெல்லம் -350 கி
4. திரிகடுகு -105 கி
5. வாய்விடங்கம் -35 கி
6. திரிபலாதி -105 கி
7. தாளிசபத்திரி -35 கி
8. இலவங்கப்பட்டை -35 கி
9. அக்கரகாரம் -35 கி
10. திப்பிலி மூலம் - 35 கி
11. சீரகம் -35 கி
12. குரோசோனி ஓமம் -35 கி
13. ஓமம் -35 கி
14. ஆனைத்திப்பிலி -35 கி
15. கோஷ்டம் -35 கி
செய்முறை :
4-5 வரையுள்ள சரக்குகளைப் பொடித்து, சூரணித்து வைக்கவும். அதனுடன் கண்டங்கத்திரி சமூலம், பனைவெல்லம் கலந்து பாகுபதமாகக் காய்ச்சி,மேற்படி சூரணத்தை அதில் போட்டு நன்கு கிளறி, பின் நெய்விட்டு கலந்து வைக்கவும்.
அளவு:
வேளைக்கு 5-10 கிராம் வீதம் தினமும் ஓரிரு வேளைகள் உட்கொள்ள வேண்டும்.
தீரும் நோய்கள் :
சளி, இருமல், இளைப்பு மற்றும் பனிக் காலங்களில் வரும் இருமல், ஜலதோஷம் முதலியவற்றிற்கு சிறந்தது.
தேவையான பொருட்கள்:
1. எள் -61.9 கி
2. ஆவாரம்பட்டை -61.9 கி
3. வால்மிளகு -84.8 கி
4. இலவங்கம் -12.4 கி
5. மாசிக்காய் -63.1 கி
6. சிறுநாகப்பூ -6.2 கி
7. பரங்கிப்பட்டை -12.4 கி
8. பால் -247.7 கி
9. பனைவெல்லம் -495.4 கி
10. நல்லெண்ணெய் -247.7 கி
செய்முறை :
எள், ஆவாரம்பட்டை, வால்மிளகு, லவங்கம், மாசிக்காய், சிறுநாகப்பூ, பரங்கிப்பட்டை இவற்றைப் பொடித்து சூரணித்து வைக்கவும். பால் மற்றும் பனை வெல்லத்தினைக் கலந்து பாகுபதமாகக் காய்ச்சி மேற்படி சூரணத்தை அதில் கொட்டி, கிளறி, நல்லெண்ணெய் விட்டு பிசைந்து வைக்கவும்.
அளவு:
2-5 கிராம் வீதம் இரு வேளைகள் உட்கொள்ள வேண்டும்.
தீரும் நோய்கள் :
சர்க்கரை வியாதி, அதிமூத்திரம், வெள்ளை, வெட்டை முதலியவற்றைப் போக்கி உடல் வலிமையை உண்டாக்குகிறது.
தேவையான பொருட்கள் :
1. பறங்கிப்பட்டை -350 கி
2. நெல்லி வற்றல் -350 கி
3. தான்றிக்காய் -250 கி
4. சுக்கு -260 கி
5. சிற்றரத்தை -270 கி
6. வெட்பாலை அரிசி -70 கி
7. சிவனார் வேம்பு -70 கி
8. நிலப்பனை -70 கி
9. ஜாதிக்காய் -35 கி
10. லவங்கம் -35 கி
11. லவங்கப்பத்திரி -35 கி
12. மிளகு -35 கி
13. ஏலம் -35 கி
14. 14.ஓமம் -35 கி
15. திப்பிலி -35 கி
16. கார்போக அரிசி -35 கி
17. கொத்து மல்லி -35 கி
18. வாய்விடங்கம் -35 கி
19. கருஞ்சீரகம் -35 கி
20. சித்திரமூலம் -35 கி
21. வாலளுவை அரிசி -35 கி
22. அமுக்கரா -35 கி
23. குங்குமப்பூ - 8 கி
24. கோரோஜனை -8 கி
25. சுத்தி செய்த சேராங்கொட்டை -700 கி
26. நெய் -3 கி.கி.
27. கிரான் -3 கி.கி.
28. சர்க்கரை - 10.5 கி. கி
29. பால் -3 கி.கி
செய்முறை :
பாலுடன் சர்க்கரையைக் கலந்து காய்ச்சி பதத்தில் இறக்கி மற்ற சரக்குகளின் சூரணத்தைக் கலந்து பின்னர் சேராங்கொட்டை நெய்யையும், பசுவின் நெய்யையும் தேனையும் கலந்து பின் குங்குமப்பூவையும் கோரோசனை யும் தூள் செய்து தூவி நன்கு கலந்து வைக்கவும்.
அளவு:
3 கிராம் வீதம் தினமும் 2 வேளைகள் உணவிற்குப் பின் சாப்பிடவும். தொடர்ந்து 48 நாட்கள் சாப்பிட வேண்டும்.
தீரும் நோய்கள் :
பக்கவாதம், குஷ்டம், ஆரம்பபுற்று, வெள்ளை தோல் நோய்கள், மூல வாயு, பௌத்திரம், மேக நோய்,சகல விஷங்கள்.
தேவையான பொருட்கள் :
1. நெல்லி வற்றல் -2100 கி
2. தண்ணீர் -1600 மி.லி
3. சர்க்கரை -875 கி
4. அதிமதுரம் -70 கி
5. கூகைநீர் -70 கி
6. முந்திரிப்பழம் -70 கி
7. பேரிச்சம்பழம் -70 கி
8. திப்பிலி -105 கி
9. காகம் -200 கி
10. நெய் -200 கி
செய்முறை:
நெல்லி வற்றலை தண்ணீரில் போட்டு எட்டுக்கு ஒன்றாய் வற்ற வைத்து வடித்த கியாழத்தில் சர்க்கரையை சேர்த்து பாகு செய்து அதில் அதிமதுரம், கூகை நீர், முந்திரிப் பழம், பேரீச்சம்பழம், திப்பிலி இவைகளை அரைத்து நெய்விட்டுக் கிண்டி மெழுகு பதத்தில் தேன் விட்டு பிசைந்து இறக்கி வைக்கவும்.
அளவு:
வேளை ஒன்றுக்கு 5-10 கிராம் உண்ணவும்.
தீரும் நோய்கள் :
வாந்தி, பித்தம், காமாலை, பித்தபாண்டு, வறட்சி, திமிர்வாயு, சோகை, நீர்ச்சுருக்கு, குன்மம், உடல் எரிவு நீங்கும்.
தேவையான பொருட்கள்:
1. வில்வ வேர் -175 கி
2. குறுந்தொட்டி வேர் -175 கி
3. முட்காவேளை வேர் -175 கி
4. சங்கன் வேர் -175 கி
5. சிற்றாமல்லி -175 கி
6. சிற்றாமுட்டி -175 கி
7. பேராமல்லி -175 கி
8. ஒளவையார் கூந்தல் -175 கி
9. முள்ளி -175 கி
10. சாரணை வேர் -175 கி
11. கண்டங்கத்திரி -175 கி
12. சீந்தில் -175 கி
13. கொடி வேலி -175 கி
14. வேர்ப்பட்டை -175 கி
15. நன்னாரி வேர் -175 கி
16. பொன் முசுட்டை -175 கி
17. சிறு தேக்கு -175 கி
18. தண்ணீர் -2.5 லி
19. வெல்லம் -1.68 கி
20. பசும்பால் -2.8 லி
21. திரிகடுகு -35 கி
22. திரிபலாதி -35 கி
23. கிராம்பு -35 கி
24. ஏலம் -35 கி
25. சீரகம் -35 கி
26. கருஞ்சீரகம் -35 கி
27. கோஷ்டம் -35 கி
28. தாளிசபத்திரி -35 கி
29. ஓமம் -35 கி
30. குரோசானி ஓமம் -35 கி
31. சிற்றரத்தை -35 கி
32. பேரரத்தை -35 கி
33. கொத்துமல்லி -35 கி
34. லவங்கப்பட்டை -35 கி
35. அக்ரகாரம் -35 கி
36. திப்பிலிக்கட்டை -35 கி
37. வால்மிளகு -35 கி
38. ஜாதிக்காய் -35 கி
39. நெய் -35 கி
40. தேன் -35 கி
செய்முறை:
1- 16 வரை உள்ள சரக்குகளை இடித்து தண்ணீரில் கலந்து 8-க்கு ஒன்றாக காய்ச்சி, சுருக்கி, வடித்து அதில் வெல்லம், பால் சேர்த்து கரைத்து வடிகட்டி, பின்னர் சூடேற்றி பாகுபதம் வந்தவுடன் மற்ற சரக்குகளை இளவறுப்பாக வறுத்து பொடி செய்து பாகில் சிறிது சிறிதாக தூவி நெய்விட்டு கிளறி, இறுதியில் தேன் சேர்த்து பக்குவப்படுத்திக் கொள்ளவும்.
அளவு:
3-6 கிராம் வீதம் தினமும் 2 வேளைகள் உணவிற்கு முன் அல்லது பின் நீருடன் சுவைத்து சாப்பிடவும்.
தீரும் நோய்கள் :
வயிற்றுப்புண், அதிக சூடு, தோல் நோய்கள், கை கால் எரிச்சல், மாந்தம், வாய்க் கசப்பு, வாய் நீர் ஊறல், எல்லாவிதமான பித்த நோய்கள், பத்தியம், புளிப்பு, கசப்பு, புகைபிடித்தல், பெண் இதை தவிர்க்க வேண்டும்.
தேவையான பொருட்கள்:
1. முருங்கைப் பூ -35 கி
2. தூதுவளை -35 கி
3. ஆவின்பால் -800 மி.லி
4. சர்க்கரை -420 கி
5. நெய் -400 மி.லி
6. தேன் -400 மி.லி
செய்முறை :
முருங்கைப் பூ மற்றும் தூதுவளைப் பூவை பாலில் போட்டுக் காய்ச்சி குறுகி வரும் போது சர்க்கரையை சேர்த்து நெய் மற்றும் தேன்விட்டு கிண்டி பாத்திரங்களில் பத்திரப்படுத்தவும்.
அளவு :
5-10 கிராம் தினம் இருவேளை உணவிற்குப் பின்பு உட்கொண்டு வெந்நீர் அருந்தவும்.
தீரும் நோய்கள்:
பிரமிய மேகம், இருமல், சளி, சுவாசம், காசம், நுரையீரல் கோளாறுகள் ஆகியவை தீரும்.
தேவையான பொருட்கள்:
1. வறுத்த தேத்தான் கொட்டை - 150 கி
2. சுக்கு -15 கி
3. மிளகு -15 கி
4. திப்பிலி -15 கி
5. கடுக்காய் -15 கி
6. நெல்லிக்காய் -15 கி
7. தான்றிக்காய் -15 கி
8. சிற்றரத்தை -15 கி
9. சீரகம் -15 கி
10. சர்க்கரை -120 கி
11. பசுவின் பால் -1.6 கி.கி.
12. 12.நெய் -1.6 கி.கி.
13. தேன் -800 கி
செய்முறை:
1 - 9 வரையுள்ள சரக்குகளை பொடித்து சலித்துக் கொள்ளவும். சர்க்கரை, பசுவின் பால் சேர்த்துக் காய்ச்சி இலேகிய பாகம் செய்து இறக்கி சூரணத்தை சிறிது சிறிதாக கலந்து பின்னர் நெய்யையும் தேனையும் சேர்த்து கலந்து வைக்கவும்.
அளவு :
தினம் 3- 6 கிராம் வீதம் 2-3 வேளைகள் கொடுக்கவும்.
தீரும் நோய்கள்:
மூலம், பவுத்திரம், வெள்ளை, வெட்டை, வாயுத் தொல்லை, பசி மந்தம் தீரும்.
தேவையான பொருட்கள்:
1. திப்பிலி -3500 கி
2. கற்கண்டு -350 கி
3..சுக்கு -35 கி
3. அக்கரகாரம் -35 கி
4. கடுக்காய் -35 கி
5. ஓமம் -35 கி
6. சீரகம் -35 கி
7. கொத்தமல்லி -35 கி
8. வெட்பாலை -35 கி
9. செண்பகப்பூ -35 கி
10. கோஷ்டம் -35 கி
11. நெய் -800 கி
12. தேன் -200 மி.லி.
13. அரத்தை -35 கி
செய்முறை :
திப்பிலியை நீரில் சிதைத்துப் போட்டு எட்டுக்கு ஒன்றாய் வற்ற வைத்து வடித்து அதில் கற்கண்டைப் போட்டு பாகு செய்து சுக்கு, அரத்தை, அக்கரகாரம், கடுக்காய், ஓமம், சீரகம், கொத்தமல்லி வெட்பாலையரிசி, செண்பகப்பூ இவற்றைப் பொடித்து தூவி நெய் விட்டு கிண்டி, தேன் விட்டு கலந்து பத்திரப்படுத்தவும்.
அளவு:
வேளைக்கு 5 முதல் 10 கிராம் வீதம் தினமும் 2 முதல் 3 வேளைகள் கொடுக்கவும்.
தீரும் நோய்கள்:
கப சம்மந்தமான வியாதிகளும், வாதம், வாயு மற்றும் குன்மம் ஆகியவையும் நீங்கும்.
தேவையான பொருட்கள்:
1. வெள்ளைப்பூண்டு -3500 கி
2. கல்கண்டு -350 கி
3. பெருங்காயம் -35 கி
4. சுக்கு -35 கி
5. வால்மிளகு -35 கி
6. கடுகு -35 கி
7. இந்துப்பு -35 கி
8. ஏலம் -35 கி
9. ஓமம் -35 கி
10. திப்பிலி -35 கி
11. மிளகு -35 கி
12. சீரகம் -35 கி
13. திரிபலா -35 கி
14. வெட்பாலை அரிசி -35 கி
15. அதிவிடாயம் -35 கி
16. வாய்விடங்கம் -35 கி
17. ஆவின் பால் -400 மி.லி
செய்முறை:
வெள்ளைப்பூண்டை 1 லிட்டர் தூய்மையான நீரிற் போட்டு எட்டுக்கு ஒன்றாய் வற்ற வைத்து அதில் கற்கண்டைப் போட்டு பாகு செய்து பெருங்காயம், சுக்கு, வால்மிளகு, கடுகு, இந்துப்பு, ஏலம், ஓமம், திப்பிலி, மிளகு, சீரகம், திரிபலா, வெட்பாலையரிசி, அதிவிடாயம், வாய்விடங்கம் முதலியவற்றை பொடித்துத் தூவி ஆவின் நெய்யை விட்டுக் கிண்டி மெழுகு பதத்திலெடுத்து டப்பாக்களில் அடைத்து பயன்படுத்தவும்.
அளவு :
5 முதல் 10 கிராம் இரண்டு முதல் மூன்று வேளைகள் உணவிற்கு முன் நன்கு சுவைத்து உண்டு வெந்நீர் அருந்தவும்.
தீரும் நோய்கள்:
எல்லாவிதமான வாயுக் கோளாறுகள், வாத வலிகள், அஜீரணம் முதலியவற்றைப் போக்கி பசியைத் தூண்டும்.
தேவையான பொருட்கள் :
1. வெண்பூசணிக்காய்ச் சாறு -5.6 மி.லி
2. தாழை விழுதுச் சாறு -1.6 மி.லி
3. தென்னம்பூ சாறு -1.6 மி.லி
4. எலுமிச்சம்பழம் சாறு -1.6 மி.லி
5. பசுவின் பால் -2.8 மி.லி
6. சர்க்கரை -3.5 கி.கி.
7. சீரகம் -35 கி
8. கொத்தமல்லி -35 கி
9. கோஷ்டம் -35 கி
10. மிளகு -35 கி
11. மாசிக்காய் -35 கி
12. ஏலம் -35 கி
13. ஜாதிக்காய் -35 கி
14. சாதிபத்திரி -35 கி
15. அதிமதுரம் -35 கி
16. தாளீசபத்திரி -35 கி
17. நெய் -700 மி.லி
18. தேன் -350 மி.லி
செய்முறை :
மேற்படி சாறுகளையும், சர்க்கரையும் கலந்து அடுப்பிலிட்டு காய்ச்சி பாகுபதம் வரும் போது, சீரகம், கொத்தமல்லி, கோஷ்டம், மிளகு, மாசிக்காய், ஏலம், ஜாதிக்காய், சாதிபத்திரி, அதிமதுரம், தாளீசபத்திரி இவைகளை இடித்து, பொடித்து, சூரணித்து மேற்படி பாகில் தூவி கிண்டி, நெய்யும், தேனும் சேர்த்து பிசைந்து வைக்கவும்.
அளவு :
3-6 கிராம் வரை வீதம் தினமும் 2 வேளைகள் உட்கொள்ள வேண்டும்.
தீரும் நோய்கள் :
காமாலை, சோகை, வெள்ளை ஆகிய நோய்கள் தீரும். மேலும் உடல் வலுக்கும். விந்து ஊறும். சூட்டினால் உண்டாகும் நோய்கள் மற்றும் நீர்ச்சுருக்கு தீரும்.
தேவையான பொருட்கள் :
1. குமரிச்சாறு -300 மி.லி
2. சர்க்கரை -300 கி
3. கிராம்பு -15 கி
4. ஜாதிக்காய் -20 கி
5. ஏலம் -5 கி
6. சீரகம் -40 கி
7. மிளகு -30 கி
8. நெய் -140 கி
9. தேன் -200 கி
செய்முறை :
குமரிச்சாறு, சர்க்கரை இவற்றினை ஒன்றாய் சேர்த்து கரைத்து வடிகட்டி அடுப்பிலிட்டு காய்ச்சி பாகுபதம் வரும்போது, கிராம்பு, ஜாதிக்காய், ஏலம், சீரகம், மிளகு இவைகளை இடித்துப் பொடித்து சூரணித்து மேற்படி பாகில் தூவி கிண்டி, நெய் சேர்த்து இறக்கி வைக்கவும். லேகியம் சூடு ஆறிய பின் தேன் கலந்து வைக்கவும்.
அளவு :
2 - 5 கிராம் இரு வேளைகள் உண்ணவும்.
தீரும் நோய்கள் :
வெள்ளை, வெட்டை, கிரந்தி, இருமல், சளி, பசியின்மை, மலச்சிக்கலைப் போக்கி இரத்தத்தை சுத்தப்படுத்த தேக பலத்தை உண்டாக்குகிறது.
தேவையான பொருட்கள் :
1. வல்லாரை -58.4 கி
2. ஆடாதோடை -29.2 கி
3. துளசி -58.4 கி
4. கண்டங்கத்திரி -58.4 கி
5. திரிகடுகு -5.8 கி
6. வாய்விடங்கம் -5.8 கி
7. சித்தரத்தை -5.8 கி
8. கோஷ்டம் -5.8 கி
9. அக்கரகாரம் -5.8 கி
10. தாளீசபத்திரி -5.8 கி
11. ஜாதிபத்திரி -5.8 கி
12. வால்மிளகு -5.8 கி
13. ஏலம் -1.17 கி
14. நெய் -11.6 கி
15. சர்க்கரை -583.9 கி
16. தேன் -116.8 கி
அளவு :
5- 10 கிராம் வீதம் தினமும் இருவேளைகள் உட்கொள்ளவும்.
தீரும் நோய்கள்:
ஞாபக சக்தியை அதிகரிக்கச் செய்கிறது. நரம்புகளுக்கு வலுவூட்டி உடலுக்கு ஆரோக்கியத்தை அளிக்கிறது.
தேவையான பொருட்கள் :
1. திரிகடுகு -35 கி
2. ஏலம் -35 கி
3. சீரகம் -35 கி
4. பசும்பால் -2.8 லி
5. பனைவெல்லம் -280 கி
6. நெய் -350 கி
7. தேன் -100 கி
தயாரிக்கும் விதம் :
திரிகடுகு, ஏலம், சீரகம் இவைகளை முறைப்படி சுத்தி செய்து இளவறுப்பாக வறுத்து சூரணித்து 2.8 லி பசுவின் பாலில் 280 கிராம் பனை வெல்லம் சேர்த்து கரைத்து படிகட்டி அடுப்பிலிட்டுக் கொதிக்க வைத்து பாகுபதம் வந்தபின் சிறிது சிறிதாக சூரணத்தைத் தூவி கிண்டிக் கொண்டே நெய் 350 கி சேர்த்துக் கிண்டி இறக்கி சற்று சூடு ஆறிய பின் 100 மி.லி. தேன் ஊற்றி, கிண்டி மெழுகு பதமாக செய்து கொள்ளவும்.
அளவு :
3-6 கிராம் வீதம் இரு வேளை 40 நாட்கள் உட்கொள்ளலாம்.
தீரும் நோய்கள் :
வாயுத் தொல்லை, வாதம், உஷ்ணம், பித்தவாயு, உடல் உளைச்சல், வலி, கடுப்பு, எரிச்சல், பேதி, பொருமல், வாதக்கிராணி, அஸ்திசுரம், அஸ்திவெட்டை, வாந்தி முதலியவைகள் தீரும்.
தேவையான பொருட்கள் :
1. 1 சீந்தில் சர்க்கரை -100 கி
2. முந்திரிப்பழம் -100 கி
3. கோஷ்டம் -100 கி
4. அதிமதுரம் -100 கி
5. திரிகடுகு -100 கி
6. நெல்லி வற்றல் -100 கி
7. பூச்சாந்துபட்டை -100 கி
8. அமுக்கிராக்கிழங்கு -100 கி
9. ஏலம் -100 கி
10. பூனைக்காலி வித்து -100 கி
11. குங்குமப்பூ -100 கி
12. ஜாதிக்காய் -100 கி
13. அரேனுகம் -100 கி
14. சிறுநாகப்பூ -100 கி
15. தாளீசபத்திரி -100 கி
16. நீர்முள்ளிக் கிழங்கு -100 கி
17. நிலப்பனைக்கிழங்கு -100 கி
18. விலாமிச்சம் வேர் -100 கி
19. நெருஞ்சில் வித்து -100 கி
20. வெட்டிவேர் -100 கி
21. தாமரைக்கிழங்கு -100 கி
22. அல்லிக்கிழங்கு -100 கி
23. வெல்லம் -2 கி.கி
24. தேன் -350 கி
25. நெய் -250 கி
செய்முறை :
மேற்கண்ட கடைச் சரக்குகளை தனித்தனியே பொடித்து பனை வெல்லத்தினை பாகு செய்து மேற்சொன்னபடி சூரணத்தை சிறுக சிறுகப் போட்டு மருந்துக்குத் தகுந்த நெய்யைச் சிறுக சிறுக விட்டு கிண்டி மெழுகு பதத்திலிறக்கி, ஆறவிட்டு தேன்விட்டுப் பிசைந்து டப்பாக்களில் அடைத்து பத்திரப்படுத்தவும்.
அளவும்; தீரும் நோயும் :
2 முதல் 5 கிராம் வரை தினம் இருவேளை. சாப்பிட்டு வர சர்க்கரை நோய், அஸ்திசுரம், காங்கை, சீதம், இரத்தம் விழுதல், வாயு பாண்டு சோகை காமாலை முதலிய நோய்கள் தீரும். தாது புஷ்டி அளித்து நரம்புத் தளர்ச்சியை நீக்கும்.
தேவையான பொருட்கள்:
1. வில்வ வேர் -11.2 கி. கி
2. தண்ணீர் -16 லி
3. பால் -22.4லி
4. பனைவெல்லம் -1.44 கி
5. இலவங்கப்பட்டை -600 கி
6. கிராம்பு -600 கி
7. ஜாதிக்காய் -600 கி
8. சிறுநாகப்பூ -600 கி
9. சுக்கு -600 கி
10. தாளிசப்பத்திரி -600 கி
11. திப்பிலி -600 கி
12. மிளகு -600 கி
13. ஏலக்காய் -600 கி
14. தேன் -280 கி
செய்முறை :
வில்வ வேரை இடித்து நீரிலிட்டு நாலில் ஒன்றாய் வற்றவைத்து வடித்து சர்க்கரையைக் கரைத்து பாகு செய்து மேற்கண்ட கடைச்சரக்கினை பொடித்து பொடித்த தூளை தூவி நெய்யில் விட்டு கிண்டி இறக்கி சிறிது ஆறிய பின் தேன் விட்டு பிசைந்து பத்திரப்படுத்தவும்.
தீரும் நோய்கள்:
வயிற்று வலி, குன்மம், இருமல், ஈளைகாசம், நெஞ்செரிவு, வாயு கிராணி, அதிசாரம், பித்தகாசம், தேக காந்தல், நீரேற்றம், விக்கல், விஷபாண்டு, சுரம், உப்பிசம், வயிற்றுளைச்சல், வாந்தி, பித்தம், மலக்கட்டு தீரும்.
தேவையான பொருட்கள்:
1. திரிகடுகு -100 கி
2. சாரப்பருப்பு -100 கி
3. கசகசா -100 கி
4. கிராம்பு -100 கி
5. ஏலம் -100 கி
6. ஜாதிக்காய் -100 கி.
7. ஜாதி பத்திரி -100 கி.
8. அதிமதுரம் -100 கி.
9. கூகை நீர் -100 கி
10. கோஷ்டம் -100 கி
11. சடாமஞ்சில் - 100 கி
12. சன்னலவங்கப்பட்டை -100 கி
13. நெய் -100 கி.
14. தேன் -100 கி.
15. பால் -3 லி
16. சர்க்கரை -350 கி
17. முட்டை -4கி
செய்முறை:
மேற்கண்ட பொருட்களை தனித்தனியே பொடித்து வைக்கவும். சர்க்கரையை பாகு பதமாக காய்ச்சி அதில் மேற்கண்ட சூரணித்த பொடியினை சேர்த்து நெய்யை சிறுக சிறுக சேர்த்து கிண்டி மெழுகு பதத்திலிறக்கி ஆறவிட்டு பின் தேன்விட்டு பிசைந்து வைக்கவும்.
அளவு:
5 10 கிராம் வீதம் தினமும் 2 வேளைகள் உட்கொள்ள வேண்டும்.
தீரும் நோய் :
காமவர்த்தினி மற்றும் வெள்ளை, வெட்டை, பெரும்பாடு இவைகள் தீரும்.
தேவையான பொருட்கள்:
1. தேன் -200 கி
2. சுக்கு -35 கி
3. மிளகு -35 கி
4. திப்பிலி -35 கி
5. சீரகம் -17.5கி
6. கிராம்பு -17.5கி
7. ஏலம் -17.5கி
8. பனை வெல்லம் -17.5கி
9.நெய் -400கி
செய்முறை :
சுக்கு, மிளகு, திப்பிலி, சீரகம், கிராம்பு, ஏலம் ஆகிய வற்றை சுத்தி செய்து சூரணம் செய்து பனை வெல்லத்தை பாகு போல் காய்ச்சி சூரணத்தைக் கொட்டி, கிண்டி நெய் மற்றும் தேன்விட்டு கிளறி வைத்துக் கொள்ள வேண்டும்.
அளவும், தீரும் வியாதிகள் :
கொட்டைப் பாக்களவு காலை, மாலை இரு வேளை உண்ண வாயுத் தொல்லை, உஷ்ணம், பித்தவாயு, அக்கினிமாந்தம், வாந்தி, அஸ்திவெட்டை, கிராணி, அஜீரணம் ஆகிய நோய்கள் தீரும்.
தேவையான பொருட்கள்:
1. இஞ்சிச்சாறு -1.6 மி.லி
2. கண்டங்கத்திரி -1.6 மி.லி
3. நெருஞ்சில் -1.6 மி.லி
4. முள்ளங்கிச்சாறு -1.6 மி.லி
5. எலுமிச்சைச் சாறு -1.6 மி.லி
6. பசும்பால் -1.6 மி.லி
7. பனை வெல்லம் -280 கி
8. சுக்கு -35 கி.
9. மிளகு -35கி.
10. திப்பிலி -35கி
11. சீரகம் -35 கி.
12. ஏலம் -35 கி.
13. வாய்விடங்கம் -35 கி
14. கிராம்பு -35 கி
15. தாளிசபத்திரி -35 கி.
செய்முறை:
பனை வெல்லத்தினை பால் மற்றும் மேலே குறிப்பிட்ட சாறுகளுடன் கலந்து பாகுபதத்தில் காய்ச்சி எஞ்சியிருக்கும் கடைச் சரக்குகளை பொடித்து அத்துடன் கலந்து வைக்கவும்.
அளவு:
5 10 கிராம் வீதம் தினமும் 2 வேளைகள் உட்கொள்ள வேண்டும்.
தீரும் நோய்கள்:
பித்தத்தை அகற்றும், வாயுக் கோளாறு மற்றும் எல்லா விதமான வயிற்றுக் கோளாறினையும் நீக்க வல்லது.
தேவையான பொருட்கள்:
1. இம்பூறல் வேர்ப்பட்டை -350கி.
2. பசும்பால் -1.4லி.
3. பனங்கற்கண்டு -700கி.
4. ஜாதிபத்திரி -35 கி.
5. வால்மிளகு -3530 கி.
6. ஜாதிக்காய் -35 கி.
7. நெய் -350கி
செய்முறை :
இம்பூறல் வேர்ப்பட்டையைத் தட்டியெடுத்துப் பாலில் கரைத்து வடிகட்டி, அதில் பனங்கற்கண்டு அதனளவிற்குச் சேர்த்து கரைத்து, வடிகட்டி, அடுப்பிலேற்றிப் பாகுபதம் வரும் சமயத்தில் சாதிப்பத்திரி, சாதிக்காய், வால்மிளகுச் சூரணஞ் சேர்த்துக் கிண்டி, பிறகு பசுவின் நெய் விடவும். தேன் சேர்த்தல் கூடாது.
அளவு:
சுண்டைக்காயளவு 2 வேளைகள்.
தீரும் நோய்கள் :
இரத்த காசம், இரத்த வாந்தி, இரத்த பேதி இவைகளுக்கு கொடுக்கத் தீரும்.
தேவையான பொருட்கள்:
1. பெருங்காயம் -100 கி
2. கடுகு -100 கி
3. மிளகு -100 கி
4. சுக்கு -100கி
5. திப்பிலி -100 கி
6. ஓமம் -100கி
7. சீரகம் -100கி
8. அதிமதுரம் -100 கி
9. கோஷ்டம் -100 கி
10. நெய் -300கி
11. வெல்லம் -300கி
12. தேன் -300 கி
13. பால் -1.4லி
செய்முறை:
பெருங்காயத்தினை பொடித்து நீரில் போட்டு எட்டுக்கு ஒன்றாக வற்ற வைத்து வடித்து சர்க்கரையை கரைத்து பால் சேர்த்து பாகு செய்து அதில் மேற்கண்ட கரைச் சரக்குகளைப் பொடித்து தூவி நெய்விட்டுக் கிண்டி பின் தேன்விட்டு மெழுகு பதத்திலிலெடுத்து வைத்து பத்திரப்படுத்தவும்.
அளவு:
3-5 கிராம் வீதம் தினமும் 2 வேளைகள் உட்கொள்ள வேண்டும்.
தீரும் நோய்கள் :
கிராணி, கடுப்பு, வாயுத் தொல்லை, வயிறு உப்பல் தீரும்.