தேவையான சரக்குகள் :
1. கற்பூர வல்லி -4.9.கி
2. துளசி எண்ணெய் -4.9.கி
3. மென்தால் -49.3.கி
4. கற்பூரம் -49.3.கி
5. யூகலிப்டஸ் எண்ணெய் -4.9.கி
6. தேன் மெழுகு -886 மி.கி
தயாரிக்கும் முறை:
தேன் மெழுகு பாத்திரத்திலிட்டு அதை நீருள்ள பாத்திரத்தில் வைத்து சூடுபடுத்தி மெழுகிளை உருகச் செய்ய வேண்டும். அத்துடன் மேற்படி சரக்குகளை நன்கு கலந்து சூடு ஆறுவதற்கு முன்பே மிதமான சூட்டில் டப்பாக்களில் அடைத்து பத்திரப்படுத்தவும்.
தீரும் நோய்கள்:
சளி, ஜலதோஷம், தலைவலி, உடம்பு வலி, தசைப்பிடிப்பு முதலியன.
தேவையான சரக்குகள் :
1. வங்க செந்தூரம் -200 கி.
2. மிருதார் சிருங்கி -200 கி.
3. மயில் துத்தம் -100 கி.
4. கார்போக அரிசி -50 கி.
5. சேங்கோட்டை -50 கி.
6. மஞ்சள் மெழுகு -400 கி.
செய்முறை :
தேன் மெழுகு (அ) மஞ்சள் மெழுகை பாத்திரத்திலிட்டு அதை நீருள்ள பாத்திரத்தில் வைத்து சூடுபடுத்தி மெழுகினை உருகச் செய்ய வேண்டும். அத்துடன் மேற்படி சரக்குகளை நன்கு கலந்து சூடு ஆறுவதற்கு முன்பே மிதமான சூட்டில் டப்பாக்களில் அடைத்து பத்திரப்படுத்தவும்.
தீரும் நோய்கள் :
அடிபட்ட புண், புரையோடிய புண்கள், காயங்கள், கட்டிகள், பருக்கள் முதலிவற்றிற்கு சிறந்தது.
தேவையான சரக்குகள் :
1. லிங்கம் -50 மி.கி.
2. பால் துத்தம் -50 மி.கி.
3. மயில் துத்தம் -50 மி.கி.
4. மிருதார் சிங்கி -50 மி.கி.
5. நீரடி முத்து -50 மி.கி.
6. கார்போக அரிசி -100 மி.கி.
7. கசகசா -50 மி.கி.
8. அகத்தி -50 மி.கி.
9. கிரந்தி -50 மி.கி.
10. மஞ்சள் மெழுகு -400 மி.கி.
11. தேங்காய் எண்ணெய் -100 மி.கி.
செய்முறை :
தேன் மெழுகு (அ) மஞ்சள் மெழுகை பாத்திரத்திலிட்டு அதை நீருள்ள பாத்திரத்தில் வைத்து சூடுபடுத்தி மெழுகினை உருகச் செய்ய வேண்டும். அத்துடன் மேற்படி சரக்குகளை நன்கு கலந்து சூடு ஆறுவதற்கு முன்பே மிதமான சூட்டில் டப்பாக்களில் அடைத்து பத்திரப்படுத்தவும்.
தீரும் நோய்கள் :
எல்லாவிதமான சரும நோய்கள், கிரந்தி, நோய், புண் முதலியவைகளுக்கு சிறந்தது.
தேவையான சரக்குகள்:
1. மருதாணி -70 கி
2. பேய்க் கரிப்பான் -70 கி
3. அரிவாள்மனை பூண்டு -70 கி
4. அவுரி -70 கி
5. விளக்கெண்ணெய் - 70 கி
6. வெள்ளை மெழுகு - 70 கி
தயாரிக்கும் முறை :
மெழுகை உருக்கி விளக்கெண்ணெயில் மேற்படி சாறுகளை காய்ச்சி பதத்தில் எடுத்து மெழுகை சேர்த்து தயாரிக்கவும்.
உபயோகம் :
பித்த வெடிப்பு.
தேவையான சரக்குகள் :
1. அரசம்பட்டை -20 கி.
2. மருதாணி -40 கி.
3. வேப்பிலை -40 கி.
4. அருகன்புல் -40 கி.
5. வேப்பெண்ணெய் -40 கி.
6. தேங்காய் எண்ணெய் -40 கி.
7. வெள்ளை மெழுகு -20 கி.
செய்முறை:
1 முதல் 4 வரையுள்ள சரக்குகளைப் பொடி செய்து வேப்பெண்ணெய், தேங்காய் எண்ணெயில் காய்ச்சி தைல பதத்தில் எடுத்துக் கொண்டு வெள்ளை மெழுகை சூடு செய்து உருக்கி தைலத்தில் கலந்து கொள்ளவும்.
அளவு :
வெளி உபயோகம் வழுக்கையான பகுதியில் எண்ணெய்க்கு பதிலாக உபயோகிக்கலாம்.
வியாதிகள்:
ஆரம்ப கால வழுக்கை, புழுவெட்டு, முடி உதிர்தல் முதலியன.