Contact Us

கேழ்வரகு பால்

தேவையான பொருட்கள்:

  • கேழ்வரகு- 100 கிராம் 
  • நாட்டுசர்க்கரை இனிப்பிற்கு ஏற்ப 
  • தண்ணீர்தேவையான அளவு 

செய்முறை:

        முந்தையநாள் இரவே கேழ்வரகு (ராகி)எடுத்து நீரில் ஊற வைக்க வேண்டும்.காலையில்ஊறி இருக்கும் கேழ்வரகை தண்ணீரை வடித்து எடுத்துக் கொள்ள வேண்டும்.பின்னர் மிக்ஸியில் இட்டு அரைத்து பாலை பிழிந்து எடுக்கவும்.சுவைக்குஏற்ப நாட்டு சர்க்கரையை சேர்த்து கலக்கவும். இப்பொழுது சுவையான கேழ்வரகு பால் தயார்.

பலன்கள்:

        வயிற்றுப்புண்களை ஆற்றும் எலும்பு மற்றும் பற்களின் உறுதிக்கு உதவும். கால்சியம் சத்து இதில் உள்ளது.சருமம் பளபளப்பாகவும் ஆரோக்கியமாகவும் இருக்கும்.

கோதுமை பால்

தேவையான பொருட்கள்:

  • கோதுமை- 100 கிராம் 
  • நாட்டுசர்க்கரைஇனிப்பிற்கு ஏற்ப 
  • தண்ணீர்தேவையான அளவு 

செய்முறை:

          முந்தையநாள் இரவில் கோதுமையை சுத்தம் செய்து எடுத்துக் கொண்டு இரவு தண்ணீரில் ஊறவைக்க வேண்டும்.காலையில் தண்ணீரை வடித்து கோதுமை தனியாக எடுத்துக் கொள்ளவும்.பின்னர் மிக்ஸியில் இட்டு அரைத்து பாலை பிழிந்து எடுக்கவும்.சுவைக்குஏற்ப நாட்டு சர்க்கரை கலந்து பருகலாம்.

பலன்கள்:

         கார்போஹைட்ரேட்,புரதம்,கால்சியம்ஆகிய சத்துக்கள் நிறைந்துள்ளன. வளரும் பருவத்தினருக்கு ஏற்றது.செரிமான கோளாறு சரி செய்யும். நார்ச்சத்துமிகுதியாக இருப்பதால் மலச்சிக்கல் பிரச்சனை தீரும்.

சோளம் பால்

 தேவையான பொருட்கள்:

  • சோளம் -100 கிராம்
  • நாட்டு சர்க்கரை இனிப்பிற்கு ஏற்ப 
  • தண்ணீர் தேவையான அளவு

செய்முறை:

      முந்தைய நாள் இரவில் சோளத்தை எடுத்து ஊற வைத்துவிட வேண்டும். காலையில் ஊறிய சோளத்தை தண்ணீரை வடித்து எடுத்து கொள்ளவும். பின்னர் சோளத்தை மிக்ஸியில் இட்டு அரைத்துப் பாலை பிழிந்து எடுத்துக் கொள்ளவும். இந்தப் பாலில் தேவையான அளவு நாட்டுச்சர்க்கரை கலந்து பருகலாம்.

பலன்கள்:

 வைட்டமின் மற்றும் புரதச்சத்து நிறைந்த பானம். உடலுக்குத் தேவையான ஆற்றலை வழங்குகிறது. வளரும் பருவத்தினர் தினசரி அருந்தி வர பலன்கிட்டும்.

கொண்டைக்கடலை பால்

 தேவையான பொருட்கள:

  • கொண்டைக்கடலை -100 கிராம் 
  • நாட்டுச்சர்க்கரை – இனிப்பிற்கேற்ப
  • தண்ணீர்- தே. அளவு

செய்முறை:

          கொண்டைக்கடலையை எடுத்து ஊற வைக்கவும்.ஊறிய பின்னர்அதில் உள்ள தண்ணீரை வடித்துக்கொள்ளவும். அதற்கு பின்னர் கொண்டைக்கடலையை மிக்ஸியில் இட்டு அரைத்து அதிலிருந்து பாலைப் பிழிந்து எடுக்கவும். சுவைக்கு ஏற்ப நாட்டுச்சர்க்கரையை கலந்து பருகலாம்.

பலன்கள்:

    வைட்டமின் ஏ.சி. பி காம்ப்ளக்ஸ், ஆகிய சத்துக்கள் நிறைந்திருப்பதால் உடல் எடை அதிகரிக்க உதவும். அதிக அளவு இரும்புச்சத்து இருப்பதால் ஹீமோகுளோபினை அதிகரிக்கச் செய்கிறது.

 

கொள்ளுபால்

தேவையான பொருட்கள்

  • கொள்ளு- 100 கிராம்
  • நா.சர்க்கரை இனிப்பிற்கேற்ப 
  • தண்ணீர்தே.அளவு

செய்முறை:

       முந்தைய நாள் இரவில்கொள்ளை எடுத்து ஊற வைக்கவும். கொள்ளுநன்கு ஊறிய பின்னர் தண்ணீரைவடித்து எடுத்து கொண்டு. மிக்ஸியில் அரைக்கவும்.பின்னர் அதிலிருந்து பாலை பிழிந்து எடுத்துக்கொண்டு தேளையான அளவு நாட்டுச்சாக்கரையை சோக்கவும். இப்போதுகொள்ளுபால் தயார்.

பலன்கள்:

      நார்ச்சத்தும், புரதச்சத்தும் அதிகம் உள்ளது. அதிக ஆற்றல் தரக்கூடியதுஎன்பதனால் இதை குதிரைக்கு உணவாகஅளிக்கின்றனர். தொடர்ந்து கொள்ளு சோக்கப்பட்ட உணவினை எடுத்துக் கொள்வதால் உடல் எடை குறையும். சிறுநீரக குறைபாடு உள்ளவர்கள் தகுந்த மருத்துவ ஆலோசனை பெற்று பயன்படுத்தலாம். சளி, இருமல் ஆகியவற்றைகுணப்படுத்தும் ஆற்றல் கொண்டது.

கருப்பு உளுந்துப்பால்

தேவையானபொருட்கள்:

  • கருப்புஉளுந்து-100 கிராம்
  • நாட்டுச்ர்க்கரை - இனிப்பிற்கேற்ப 
  • தண்ணீர்தே. அளவு

செய்முறை:

      முந்தைய நாள் இரவே கருப்புஉளுந்தை எடுத்துஊற வைக்கவும். ஊறிய உளுந்தினை எடுத்துதண்ணீரை வடித்து கொள்ளவும். மிக்ஸியில் போட்டு அரைக்கவும்.சுவைக்கு ஏற்ப நாட்டுச் சர்க்கரையைசேர்த்துக் கொள்ளலாம். இப்போது கருப்பு உளுந்து பால் தயார்.

பலன்கள்:

       கால்சியம், புரதம் நிறைவாக உள்ளது. இது எலும்புகளையும், பற்களையும்வலுவாக்கும். இரும்புச்சத்து கால்சியம், மக்னீசியம், வைட்டமின் பி6 ஆகிய சத்துக்கள்அடங்கியுள்ளன. இரத்த ஒட்டத்தை சீராக்கி உடலுக்கு புத்துணர்வை அளிக்க வல்லது. உடல் எடை கூட்டவேண்டுவோர் இதை சாப்பிட பலன்கிடைக்கும்.

பிஸ்தா பால்

தேவையான பொருள்:

  • பிஸ்தா -100 கிராம் 
  • தண்ணீர்ஊற வைக்க தேவையான அளவு 
  • நாட்டுசர்க்கரை இனிப்பிற்கு ஏற்ப 

செய்முறை:

        பிஸ்தாபருப்பை முந்தைய நாள் இரவே கழுவிதண்ணீர் விட்டு ஊற வைக்கவும்.மறுநாள் நன்கு ஊறியவுடன்தண்ணீரை வடித்து விட்டு மிக்ஸியில் அரைத்து பாலை வடித்து இனிப்புகலந்து குடிக்கலாம்.

பலன்கள்:

        நார்ச்சத்துநிறைந்திருப்பதால் செரிமானத்திற்கு ஏற்றது.வைட்டமின் பி6 இதய ரத்தகுழாய் பிரச்சனைகளை சீராக்கும். ரிபோ ஃபிளேவிங் மற்றும்எல்கார்டினை நிறைந்தது ஏற்பதால் மூளை செல்களை தூண்டிசிறப்பாக செயல்பட உதவுகிறது. ஆல்கலைன் எனப்படும் உடலின் அமிலத்தன்மையை குறைத்து சீராக பராமரிக்கும் நல்ல கொழுப்பை உடையது .உயிர் அணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கிறது. ஆண்மை சக்தியை பெருக்கும்.

வேர்க்கடலை பால்

தேவையான பொருட்கள்: 

  • வேர்க்கடலை -100 கிராம் 
  • நாட்டுசர்க்கரை இனிப்பிற்கு ஏற்ப 
  • தண்ணீர்தேவையான அளவு 

செய்முறை:

       முந்தையநாள் இரவே வேர்க்கடலையை கழுவிஊற வைக்கவும்.மறுநாள் நன்கு ஊறிய வேர்க்கடலையை தண்ணீரைவடித்து எடுத்துக் கொள்ளவும். பின்னர் மிக்ஸியில் கடலையை அரைத்து பால் பிழிந்து எடுத்துக்கொண்டு.தேவைக்கு ஏற்ப நாட்டு சர்க்கரைகலந்து கொள்ளலாம். இப்போது வேர்க்கடலை பால் தயார். 

பலன்கள்:

      வேர்க்கடலையில்பொட்டாசியம்,நார்ச்சத்துஆகியன உள்ளன. செரிமான கோளாறு சரி செய்யும். நல்லகொழுப்பு இருப்பதால் இருதய நோய் பாதிப்பு உள்ளவர்கள்சாப்பிட ஏற்றது.குழந்தைகளுக்கு உடல் வலிமை மற்றும்ஆரோக்கியம் தரும்.

பாசிபயறுப் பால்

 தேவையான பொருட்கள்:

  • பாசிப்பயறு- 100 கிராம்
  • நாட்டுச்சர்க்கரைஇனிப்பிற்கு ஏற்ப
  • தண்ணீர்ஊற வைக்க தேவையான அளவு

செய்முறை:

        முதல்நாள் இரவே பாசிபயரை சுத்தம்செய்து தண்ணீரில் ஊற வைக்கவும்.அடுத்த நாள்காலையில் தண்ணீரை வடித்து விட்டு நன்கு அரைக்கவும்.அரைத்த விழுதை வடிகட்டி பால் எடுத்து தேவையானஅளவு நாட்டு சர்க்கரை சேர்த்து குடிக்கலாம். 

பலன்கள்:

        படிக்கும்குழந்தைகளுக்கு நல்ல நினைவாற்றலை வளர்கிறது.புரதம்,கால்சியம்,பாஸ்பரஸ்,மாவுசத்துஆகிய உடலுக்கு நல்ல ஆரோக்கியத்தை தருகிறது.உடலுக்குகுளிர்ச்சியை தந்து நிம்மதியான உறக்கத்தை தருகிறது. முதியவர்கள் அடிக்கடி சேர்த்துக் கொள்ளலாம்.வாயு பிரச்சனையை ஏற்படுத்தாத சிறந்த பால்.

பாதாம் பால்

தேவையான பொருட்கள்:

  • பாதாம்- 100 கிராம்
  • தண்ணீர்ஊற வைக்க தேவையான அளவு 
  • நாட்டுசர்க்கரை இனிப்பிற்கு ஏற்ப 

செய்முறை:

         பாதாம்பருப்பை முந்தைய நாள் இரவே கழுவிதண்ணீரில் ஊற வைக்க வேண்டும்.மறுநாள்காலை தண்ணீரை வடித்து விட்டு பாதாமின் மேல் தோல் நீக்கிமிக்ஸியில் போட்டு சிறிது தண்ணீர் விட்டு அரைக்கவும். பின் வடித்து பால்எடுத்து தேவையான அளவு நாட்டுச்சர்க்கரை கலந்துகுடிக்கலாம்.

பலன்கள்:

         இதுநல்ல கொழுப்பு சத்து நிறைந்த உணவாகும். உடலுக்கு நல்ல மினுமினுப்பையும் வலுவையும்தருகிறது. இரத்த செல்களில் உருவாக்கத்திற்கு உதவுகிறது. ஹீமோகுளோபினை அதிகரிக்கச் செய்வதுடன் உள் உறுப்புகளின் சீரானஇயக்கத்திற்கு துணை செய்கிறது. இதில்உள்ள ஃபிளேவனாய்ட்ஸ்,நுரையீரல்,ப்ரோட்ஸ்டேட்,மார்பகப்புற்றுநோய்  கட்டுப்படுத்தும்ஆற்றல் உடையது.கூந்தல் வளர்ச்சிக்கு உதவும் சத்துக்கள் இதில் உள்ளன.எடை குறைய விரும்புவோருக்கு சிறந்த பானம்.

பருத்திப்பால்

தேவையான பொருட்கள்:

  • பருத்திக்கொட்டை- 100 கிராம் 
  • நாட்டுசர்க்கரை இனிப்பிற்கு ஏற்ப 
  • தண்ணீர்ஊற வைக்க தேவையான அளவு 

செய்முறை:

       முதல்நாள் இரவே பருத்திக் கொட்டையைதண்ணீரில் ஊற வைக்கவும்.மறுநாள்காலை தண்ணீரை வடித்து விட்டு பருத்திக்கொட்டை மிக்ஸியில் போட்டு அரைத்து வடிகட்டினால் பருத்தி பால் கிடைக்கும்.இதனுடன்தேவையான அளவு நாட்டுச்சர்க்கரை சேர்த்துபருகலாம். இது உடலை தேற்றும்அருமருந்தாகும்.

பலன்கள்:

        இதில்தரம் மிகுந்த புரதம்,கொழுப்பு மற்றும் நார் சத்துக்கள் அடங்கியுள்ளன..எனவேமிகச் சிறந்த வகையில் உடலுக்கு புத்துணர்வும் ஆற்றலும் கிடைக்கிறது.பாஸ்பரஸ், இரும்புச்சத்து,சோடியம் ஆகியன இருப்பதால் இருதய செயல்பாட்டிற்கு ஊக்குவிக்கும் சத்துக்களை வழங்குகிறது. உடலினை வலுவாக்கும்

எள்ளுபால்

தேவையான பொருட்கள்:

  • எள்ளு- 100 கிராம் 
  • நாட்டுசர்க்கரை இனிப்பிற்கு ஏற்ப 
  • தண்ணீர்ஊற வைக்க தேவையான அளவு 

செய்முறை:

        முதல்நாள் இரவே எள்ளை தண்ணீர்விட்டு ஊற வைக்கவும். காலையில்தண்ணீரை வடித்து விட்டு எள்ளை மிக்ஸியில் போட்டு அரைக்கவும். வடிகட்டி பால் எடுத்து தேவையானஇனிப்பு சேர்த்து பரிமாறவும்.

பலன்கள்:

       இதுகால்சியம் சத்து நிறைந்ததாகும்.எலும்புகளுக்குவளர்ச்சி தருக்கிறது. பெண்களுக்கு கர்ப்பப்பையில் இருக்கும் அழுக்குகளை வெளியேற்றி ஆரோக்கியத்தை தருகிறது.மேலும் இரும்புச்சத்து,தாமிரம்,மக்னிசியம்,வைட்டமின் பி6 ஆகியன இருப்பதால்உடலை உறுதியாககிறது.அதிக அளவு இருப்பதால் ஆழ்ந்தஉறக்கம் வர வழி வகுக்கிறது.மலச்சிக்கலைதடுக்கும் ஆற்றல் பெற்றது,

கம்புபால்

தேவையான பொருட்கள்:

  • கம்பு- 100 கிராம் 
  • நாட்டுசர்க்கரை இனிப்பிற்கு ஏற்ப 
  • தண்ணீர்ஊற வைக்க தேவையான அளவு 

செய்முறை:

        முதல்நாள் இரவே கம்பை தண்ணீரில்ஊற வைக்கவும்.மறுநாள் காலையில் தண்ணீரை வடித்து விட்டு கம்பை மிக்சியில் அரைத்து பாலை வடிகட்டிக் கொள்ளவும்.இதனுடன் இனிப்பிற்கு தேவையானஅளவு நாட்டுச்சர்க்கரை சேர்த்துக் கொள்ளவும்.

பலன்கள்:

        இந்தபாலை அருந்துவதனால் உடல் குளிர்ச்சி அடைந்துவெப்பம் தணியும். புரதச்சத்து இருப்பதால் உடல் நல்ல வலுவுடன்இருக்கும். கால்சியம் நிறைந்த பால் என்பதால் எலும்புகள்ஆரோக்கியமடைகின்றன. இரும்புச் சத்துக்கள், நார்ச்சத்துக்கள் சேர்ந்திருப்பதால் நோய் எதிர்ப்பு ஆற்றலைபெருக்கும்.