Contact Us

மூலிகை குளியல் பொடி

தற்காலத்தில் தீங்கு விளைவிக்கும் ரசாயனப் பொருட்களைக் கொண்டு தயாரிக்கப்படும் சோப்பு மற்றும் ஷாம்பூகளை உபயோகப்படுத்துவதினால் தோலின் மேலுள்ள அழுக்குகள் நீங்குவது மட்டுமில்லாமல் இயற்கையாக சருமத்தைப் பாதுகாக்கும் செபாசியஸ் சுரப்பிகளினால் சுரக்கப்படும் எண்ணெய்ப் பசையும் சேர்த்து நீக்கப்படுத்தினால் தோல் வறட்சி, தோல் நோய்கள் மற்றும் முடி உதிர்தல், பொடுகு, இளநரைக்கு இந்த இரசாயனங்கள் காரணமாகி விடுகின்றன. அரவிந்த் மூலிகை குளிக்கும் தூளிலுள்ள மூலப் பொருட்கள் இயற்கையான சருமத்தினைக் கொடுப்பதுடன் தோலிற்குப் பாதுகாப்பு மற்றும் முடி உதிர்தல், பொடுகு, இளநரை இவற்றைப் போக்கி ஆரோக்கியமளிக்கிறது.

தேவையான சரக்குகள் :
1. உசிலை இலை           - 125 கி.
2. பூந்திக் கொட்டை      -125 கி.
3. சிகைக்காய்                -250 கி.
4. பாசிப்பயறு                 -250 கி.
5. கஸ்தூரி மஞ்சள்        -62.5 மி.கி
6. பூலாங்கிழங்கு           -62.5 மி.கி
7. வேப்பிலை                  -62.5 மி.கி
8. ரோஜாப்பூ                   -62.5 மி.கி

தயாரிக்கும் முறை:
மேற்கண்ட பொருட்களைத் தனித்தனியாக உலர்த்தி பொடித்து பத்திரப்படுத்தி அவற்றைக் கலந்து பின் டப்பாக்களில் அடைத்து பத்திரப்படுத்தவும்.

பயன்கள் :
சருமத்தைப் பளபளக்கச் செய்து நோய்க் கிருமிகளி லிருந்து பாதுகாக்கிறது. இயற்கை நறுமணம் கொண்டது. உடலுக்கும் தலைக்கும் தேய்த்து குளிக்கலாம்.