தேவையான பொருட்கள்:
செய்முறை:
கம்பரிசியை 3 மணிநேரம் ஊறவைக்கவும், மிக்ஸியில் கொரகொரப்பாக அரைக்கவும். அடிகனமான கடாயில் எண்ணெய் காயவைத்து கடுகு, உளுத்தம் பருப்பு, கடலைப்பருப்பு தாளித்து. வெங்காயம், மிளகாய் கருவேப்பிலை, கொத்தமல்லி சேர்த்து லேசான பொன்னிறத்திற்கு வதக்கவும். உப்பு சேர்க்கவும். அரைத்த மாவையும் சேர்த்து லேசான தீயில் வனக்கவும். மாவுடன் தேங்காய் துருவலையும் சேர்த்து கெட்டியாகும் வரை வதக்கவும். ஆறியதும்கெட்டியான உருண்டைகளாக பிடித்து ஆவியில் வேக வைக்கவும். எள்ளுஇட்லிப்பொடி, காரசட்னியுடன் பரிமாறவும்.
பலன்கள்:
புரதம், கார்போ ஹைட்ரேட் ஆகிய சத்துக்கள் இதில் உள்ளன. கடலை,உளுந்து பருப்புகளில் புரதம் அதிக அளவில் உள்ளன. கறிவேப்பிலை,கொத்தமல்லி இலைகள் செரிமானத்தை மேம்படுத்துகின்றன.
தேவையான பொருட்கள்:
செய்முறை:
கம்பையும், பார்லியையும் அலசி ஊற வைத்துக்கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் எண்ணெய்சேர்த்து சூடானவுடன் வெங்காயம், தக்காளி சேர்த்து ஒன்றாக வதக்கவும்.இதனுடன் 3 பங்கு தண்ணீர் சேர்த்து கம்பையும், பார்லியையும் மிதமான சூட்டில் வேகவைக்கவும். உப்பு, மிளகுத்தூள்,ஓமம், துளசி சேர்த்து பாத்திரத்தை மூடிவிடவும். பார்லி நன்றாக வெந்தவுடன் இறக்கி அருந்தலாம்.
பலன்கள்:
கம்பில் உள்ள இரும்புச்சத்து, ரத்தசோகையைத்தடுக்கும். குடல்புண், வாய்ப்புண் ஆற்றும் தன்மை கொண்டது. பார்லியில் பொட்டாசியம் நிறைந்திருப்பதால் இரத்த அழுத்தத்தை சீராக்கும். பசியைத் தூண்டும் ஆற்றல் பார்லி சூப்பிற்கு உண்டு.
தேவையான பொருட்கள்:
செய்முறை:
முருங்கை இலையை நன்றாக சுத்தம் செய்து ஒன்றிரண்டாக நறுக்கிக் கொள்ளவும். கம்பு மாவுடன் சோம்பு, மிளகு, உப்பு, கொத்தமல்லி, முந்திரி, நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய்,முருங்கை கீரையையும் சேர்த்து சிறிது தண்ணீர் தெளித்து கெட்டியாகப் பிசைந்து கொள்ளவும். சிறு சிறு உருண்டைகளாகஉருட்டி இலையிலோ அல்லது தட்டிலோ எண்ணெயைத் தடவி அடைபோல் தட்டவும். தோசைக் கல்லில் எண்ணெய் ஊற்றி இரண்டு பக்கமும் திருப்பிப் போட்டு நன்கு வேகவைத்து எடுக்கவும்
பலன்கள்:
உடல் வெப்பத்தைதணிக்கும் ஆற்றல் கொண்டது. கை,கால் மூட்டு வரிகளைகுணமாக்கும். பார்வைத்திறன் அதிகரிக்கும் கால்சியம் பாஸ்பரஸ். இரும்புச்சத்து ஆகியன நிறைந்திருப்பதால் உடல் வலிமையை உண்டாக்கும்.
தேவையான பொருட்கள்:
செய்முறை:
கம்பு மாவு மற்றும் கோதுமைமாவை உப்பு சேர்த்து வெந்நீர் தெளித்து மிருதுவாக பிசையவும். அதிகம் தண்ணீர் சேர்க்கக்கூடாது. சமமான உருண்டைகளாக உருட்டி சப்பாத்திகளாக இட்டு இருபுறமும் சுட்டு எடுக்கவும் தேவைப்பட்டால் எண்ணெய் அல்லது வெண்ணெய் தடவிக் கொள்ளலாம்.
பலன்கள்:
அனீமியா எனும் இரத்தசோகையைக் தடுக்கும். அஜீரணக் கோளாறு சரியாகும். பொட்டாசியம், வைட்டமின் பி காம்ப்ளக்ஸ் ஆகியனகோதுமையில் நிறைந்துள்ளன. நார்ச்சத்து நிறைந்திருப்பதால் மலச்சிக்கலை போக்கும். உடல் எடை குறையவிரும்புவோர்க்கு ஏற்ற உணவு.
தேவையான பொருட்கள்:
செய்முறை:
வாணலியில்கம்பு மாவையும்,பச்சைபயிறு மாவையும் தனித்தனியாக நன்கு வறுக்கவும். இந்த மாவுகளை மிக்ஸியில்போட்டு அத்துடன் கருப்பட்டியையும் சேர்த்து அரைக்கவும். நெய்யை சூடாக்கி முந்திரி, பேரிச்சம்பழத்தை வறுத்து மாவில் கொட்டவும். அத்துடன் பொடித்த எள், உப்பு சேர்த்துபிசறி வைக்கவும்.காய்ச்சிய பாலை கைபொறுக்கும் அளவு சூடாக்கி மாவில் கொஞ்சம் கொஞ்சமாக தெளித்து உருண்டைகளாக பிடிக்கவும். ஒருவாரம் வரை வைத்திருக்கலாம். பால்சேர்க்காமல் நெய் மட்டும் சேர்த்துஉருண்டை பிடித்தால் 15 நாட்கள் வைத்திருக்கலாம்.
பலன்கள்:
உடலுக்குத் தேவையான புரோட்டீன் பாசிப்பயிறு மாவில் உள்ளது. இதனுடன் இரும்புச்சத்து, கால்சியம் ஆகியன அதிக அளவில் உள்ளன. பித்தத்தின் அளவை குறைக்கிறது. முந்திரிகருப்பட்டியில் இரும்பச்சத்து உள்ளதால் உடலுக்குத் தேவையான ஆற்றலை வழங்குகிறது.
தேவையான பொருட்கள்:
செய்முறை:
கடலை மாவையும்,கம்புமாவையும் ஒன்றாகச் சேர்த்து சலித்துக் கொள்ளவும்.பின்பு அதனுடன் உப்பு, ஒமம் மிளகாய்த்தூள், எள்ளைச்சோத்துக் கொள்ளவும். சிறிதளவு வெந்நீர் சேர்த்து நன்றாகப் பிசைந்து கொள்ளவும் பின்பு சிறு உருண்டையாக உருட்டித்தேய்த்து ஒரு வாணலியில் எண்ணெய்ஊற்றிக் காய்நததும் பூரியைப் பொரித்து எடுக்கவும்.
பலன்கள்:
கம்பில் புரதச்சத்து நிறைவாக உள்ளது. எள்ளில் கால்சியம் சத்து அதிகம் உள்ளது. இது எலும்பு, பற்களைவலுவாக்கும். ஓமத்தில் உள்ள வாலட்டேல் எண்ணெய்செரிமானத்தை மேம்படுத்தும்,வயிறு கோளாறுகள் நீங்கும்
தேவையான பொருட்கள்:
செய்முறை:
பட்டாணியை ஊறவைத்து வேகவைத்துக் கொள்ளவும்.உருளைக்கிழங்கை சதுரமாக நறுக்கிக் கொள்ளவும். சோம்பு, தேங்காய், பச்சைமிளகாய் இவற்றை அரைத்துக் கொள்ளவும், கடாயில் எண்ணெயைக் காயவைத்து தாளிப்புப் பொருட்களை சேர்த்துத் தாளிக்கவும். பிறகு, நீளமாக நறுக்கிய வெங்காயம், தக்காளி சேர்த்து நன்கு வதக்கவும், உருளைக் கிழங்கினையும் சேர்த்து இளம் சூட்டில் வதக்கவும். அதனுடன் மிளகாய்த்தூள், தனியா பொடி, மஞ்சள் தூள், சிறிதளவு தண்ணீரைச் சேர்த்து 10 நிமிடம் வேகவிடவும். பின் அரைத்து வைத்ததேங்காய் சேர்த்து 5 நிமிடம் கொதிக்க வைத்து குருமா இறுகியவுடன் கொத்தமல்லியைத் தூவிப் பரிமாறவும்.
பலன்கள்:
ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளதால் நோய் எதிர்ப்பு சக்தியைஅதிகரிக்கும். வளரும் குழந்தைகளுக்கு ஏற்ற புரதம் நிறைந்தது. பட்டாணியில் வைட்டமின் பி காம்ப்ளக்ஸ், கேமற்றும் பொட்டாசியம், பாஸ்பரஸ், ஃபோலேட் நிறைந்துள்ளது. உருளைக்கிழங்கில் கால்சியம், மெக்னீசியம் சத்துக்கள் உள்ளது. உதடுவெடிப்பு, இரத்தக்கசிவு உள்ள ஈறுகள் நோய்கள்குணமாகும்.