தேவையான பொருட்கள்:
செய்முறை:
வாணலியில் எண்ணெய் ஊற்றிகாய்ந்ததும். கறிவேப்பிலை, சீரகம், வரமிளகாய்,கடலைபருப்பு,இஞ்சி,பூண்டு,புளி இவற்றை சேர்த்துநன்கு வறுக்கவும். வறுத்தவுடன் தேங்காய் பூவையும் இறுதியாக சேர்த்து தேவையான உப்பு சேர்த்து ஆறியவுடன் அரைக்கவும்.
பலன்கள்:
நார்ச்சத்து,புரதச்சத்து,இரும்புச்சத்து நிறைந்தது.எலும்புகளின் வளர்ச்சிக்கும்,உறுதிக்கும் பக்கபலமாக இருக்கிறது.இரும்புச்சத்து இருப்பதால் இரத்த சோகையை தடுக்கும்.குழந்தைகள்,பெரியவர்கள், முதியவர்கள் என அனைவருக்கும் ஏற்றதுவையல்.
தேவையான பொருட்கள்:
செய்முறை:
முதலில் கத்திரிக்காயை தீயில்வாட்டி அதன்மேல் தோலை உரித்துக் கொள்ளவும்.வாணலியில் எண்ணெய் ஊற்றி வரமிளகாய்,பூண்டு,தக்காளி, புளி இவற்றை நன்குவதக்கவும். இதனுடன் வாட்டி தோல் நீக்கிய கத்திரிக்காயையும்உப்பும் சேர்த்து அரைக்கவும்.
பலன்கள்:
வளரும் குழந்தைகளின் எலும்பு வளர்ச்சிக்கு மிகவும் ஏற்றது. கால்சியம், வைட்டமின் பி6 அதிகம் உள்ளது.பைட்டோ நியூட்ரியன்ஸ் இருப்பதால் நினைவுத்திறன் அதிகரிக்கும். நார்ச்சத்து நிறைந்திருப்பதால் ஜீரண சக்தியை மேம்படுத்தவும் மலச்சிக்கலைப் போக்கவும் உதவுகிறது
தேவையான பொருட்கள்:
செய்முறை
வாணலியில் எண்ணெய் ஊற்றிகாய்ந்ததும் கடலைப்பருப்பு, உளுந்துபருப்பை சேர்த்து நன்கு வறுக்கவும். இவற்றுடன் இஞ்சி, பூண்டு. வரமிளகாய், சின்னவெங்காயம், தக்காளி, புளி இவற்றை முறையேவதக்கி கருவேப்பிலையும் சேர்த்து நன்கு வதக்கி உப்பு சேர்த்து அரைக்கவும். இது இரும்புசத்தும், கால்சியமும்நிறைந்தது முடிவளர்ச்சியைத் தூண்டக்கூடிய துவையலாகும்.
பலன்கள்:
கூந்தலின் வலுவை அதிகரிக்க உதவுகிறது. ஆண்டி ஆக்ஸிடண்ட் அமினோ அமிலங்கள் அதிகம் உள்ளது என்பதால் ஆரோக்கியம் சிறக்கும். வைட்டமின் சி, மக்னீசியம் ஆகியனநிறைவாக உள்ளது.
தேவையான பொருட்கள்:
செய்முறை:
வாணலியில் எண்ணெய் ஊற்றி கடலைப்பருப்பு,உளுந்தப்பருப்பு இவற்றை சேர்த்து வறுக்கவும்.இதனுடன் வரமிளகாய் இஞ்சி, பூண்டு, சின்னவெங்காயம்,புளி இவற்றை நன்குவதக்கவும். இதனுடன் கேரட் துருவலையும் சோத்து நன்கு வதக்கி உப்பு சேர்த்து அரைக்கவும்
பலன்கள்:
வைட்டமின் ஏ அதிக அளவில்உள்ளது. இது பார்வைத்திறனை அதிகரிக்கும். கடலைப்பருப்பு மற்றும் உளுந்துப் பருப்பில் புரதச்சத்து நிறைந்திருப்பதால் உடலுக்கு வலுசேர்க்கும். வயிற்றுப்புண் குணமாகும் எலும்பு பற்களுக்கு நன்மை செய்யும்.
தேவையான பொருட்கள்:
செய்முறை:
வாணலியில் எண்ணெய் ஊற்றி கடலைப்பருப்பு,உளுந்தப்பருப்பு இவற்றை சேர்த்து வறுக்கவும்.இதனுடன் வரமிளகாய் இஞ்சி, பூண்டு, சின்னவெங்காயம்,புளி இவற்றை நன்குவதக்கவும். இதனுடன் கேரட் துருவலையும் சோத்து நன்கு வதக்கி உப்பு சேர்த்து அரைக்கவும்
பலன்கள்:
வைட்டமின் ஏ அதிக அளவில்உள்ளது. இது பார்வைத்திறனை அதிகரிக்கும். கடலைப்பருப்பு மற்றும் உளுந்துப் பருப்பில் புரதச்சத்து நிறைந்திருப்பதால் உடலுக்கு வலுசேர்க்கும். வயிற்றுப்புண் குணமாகும் எலும்பு பற்களுக்கு நன்மை செய்யும்.
தேவையான பொருட்கள்:
செய்முறை:
வாணலியில் எண்ணெய் கடலைப்பருப்பு, உளுந்தப்பருப்பு சேர்த்து பொன்னிறமாக வறுக்கவும். இதனுடன் வரமிளகாய் இஞ்சி, பூண்டு, சின்னவெங்காயம் தக்காளி இவற்றை முறையே வதக்கி கொத்தமல்லி சேர்த்து நன்கு வதக்கவும். இறுதியில் புளி, உப்பு சேர்த்து கிளறி அரைத்துக் கொள்ளவும்
பலன்கள்:
கால்சியம், இரும்புச்சத்து, மக்னீசியம், பொட்டாசியம் ஆகிய சத்துக்கள் நிறைந்தது. ஜீரணத்தை எளிதாக்கும்.உணவில் உள்ள நச்சுத்தன்மையை நீக்கும்ஆற்றல் கொண்டது. தோல் நோயைக் குணப்படுத்தும்.
தேவையான பொருட்கள்:
செய்முறை:
கொள்ளை நன்கு வறுத்துகாய்ந்த மிளகாய், பூண்டு,தேங்காய் பூ, உப்பு சேர்த்துஅரைக்கவும். இந்த கொள்ளு துவையல்இட்லி, தோசை, கஞ்சிகளுக்கும் பயன்படுத்தலாம்.
பலன்கள்:
அதிக ஆற்றல் தரக்கூடியது.கெட்ட கொழுப்பைக் கரைக்கும். புரதச்சத்தும், நார்ச்சத்தும் கூடுதலாக இருப்பதால் மலச்சிக்கலைப் போக்கும் உடல் எடையைக் குறைக்கும்.
தேவையான பொருட்கள்:
செய்முறை:
அனைத்தையும் சேர்த்து அரைத்தால்துவையல் ரெடி. இந்த துவையலை கஞ்சிகளுக்கும்தொட்டுக் கொள்ள சுவையாக இருக்கும்.
பலன்கள்:
புரதமும், நார்ச்சத்தும் அதிக அளவில் உள்ளன. மக்னீசியம்,பொட்டாசியம், இரும்புச்சத்து நிறைந்திருப்பதால் இருதய செயல்பாட்டிற்கு ஊக்கமளிக்கிறது. உடலுக்கு குளிர்ச்சியைத் தரும்.நல்ல கொழுப்பு நிறைந்தது.
தேவையான பொருட்கள்:
செய்முறை:
வாணலியில் ஊற்றி காய்ந்தவுடன் கடலைப்பருப்பு. உளுந்தப்பருப்பு சேர்த்து பொன்நிறமாக வறுக்கவும். இதனுடன் பூண்டு, இஞ்சி, வரமிளகாய், சின்னவெங்காயம், புளி சுத்தம் செய்தபிரண்டை இவை அனைத்தையும் நன்குவதக்கவும். வதங்கியவுடன் உப்பு சேர்த்து ஆறியபின் அரைக்கவும்.
பலன்கள்:
இது பசியைத் தூண்டி ஜீரணத்தை எளிதாக்குகிறது. நாக்கின் சுவையற்ற தன்மைக்கு நல்ல மருந்தாகிறது. வைட்டமின்சி. மற்றும் சிட்டோசிரால் எனும் அமினோ அமிலம் அடங்கியது. அஜீரண கோளாறு, ஒழுங்கற்ற மாதவிடாய், ஆஸ்துமா ஆகியவற்றை குணப்படுத்தும் ஆற்றல் கொண்டது.
தேவையான பொருட்கள்:
செய்முறை:
வாணலியில்எண்ணெய் ஊற்றி காய்ந்தவுடன் கடலைப்பருப்பு, உளுந்துபருப்பை சேர்த்து பொனநிறமாக வறுக்கவும். இதனுடன் வரமிளகாய், இஞ்சி, பூண்டு, சின்னவெங்காயம் புளி,கேரட் துருவல் இவற்றையும் சேர்த்து நன்கு வதக்கவும் அறிய பின் உப்புசோத்து அரைக்கவும் இது இட்லி,தோசை, சாப்பாடு இவற்றிற்கு பயன்படும்
பலன்கள்:
வைட்டமின் ஏ, சி,பி காம்ப்ளக்ஸ் இரும்புச்சத்து நிரைந்து இருப்பதால் நோய் எதிர்ப்பு சக்தியைமேம்படுத்துகிறது. இரத்த உற்பத்திக்கு உதவி செய்கிறது. இஞ்சியில்உள்ள ஜிஞ்சரால் இரத்தத்தை 'சுத்திகரிக்கும் செரிமானத்தை' எளிதாக்குகிறது.
தேவையான பொருட்கள்:
செய்முறை:
வணலியில் எண்ணெய் ஊற்றி கடலைப்பருப்பு,உளுந்தப்பருப்பு சேர்த்து பொன்நிறமாக வறுக்கவும். இதனுடன் இஞ்சி, பூண்டு,வரமிளகாய் சின்னவெங்காயம்,தக்காளி இவற்றையும் புதினா இலையையும் சேர்த்து வதக்கவும். புளியையும் சேர்த்து நன்கு வதக்கி ஆறியவுடன் உப்பு சேர்த்து அரைக்கவும் சுவையான புதினா துவையல் ரெடி.இது ஜீரணத்தை முறைபடுத்தி. பசியைத் தூண்டுகிறது.
பலன்கள்:
வைட்டமின் ஏ, கால்சியம், இரும்புசத்து, ஆகியன இதில் அதிகம் உள்ளன. வயிறு மந்தம். வாயுப்பிடிப்பு ஆகியன போக்கும். வைட்டமின் பி 6, சி, பொட்டாசியம் நிறைந்தது மலச்சிக்கலை நீக்கும்.
தேவையான பொருட்கள்:
செய்முறை:
வாணலியில் எண்ணெய் ஊற்றிகாய்ந்ததும், கடலைப்பருப்பு, உளுந்து பருப்பு சேர்த்து வறுக்கவும். இதனுடன் இஞ்சி, பூண்டு, வரமிளகாயையும் சேர்த்து வதக்கவும். பின் முட்டைக்கோஸையும் புளியையும்சேர்த்து நன்கு வதக்கி உப்பு சேர்த்து அரைக்கவும்.
பலன்கள்:
மார்பகபுற்றுநோய்,மலக்குடல் புற்றுநோய் வருவதைக் தடுக்கும். வைட்டமின் சி நிறைவாக உள்ளது. உடல் வலி வீக்கம் ஆகியவற்றைக்குறைக்கும்.இரத்த சிவப்பணுக்களை அதிகரிக்கும்.நரம்புத்தளர்ச்சி சரியாகும்.
தேவையான பொருட்கள்:
செய்முறை:
வாணலியில் எண்ணெய் ஊற்றிகாய்ந்தவுடன்.கடலைப்பருப்பு, உளுந்தப்பருப்பைபொன் நிறமாக வறுக்கவும். பின்பு வரமிளகாய் பூண்டு, இஞ்சி, சின்னவெங்காயம், தக்காளி, புளி, முருங்கை இலை இவையனைத்தையும் சேர்த்துவதக்கி ஆறியபின் உப்பு சேர்த்து அரைக்கவும். இது இரும்புச்சத்து நிறைந்தசத்தான துவையலாகும்.
பலன்கள்:
கால்சியம்,இரும்பச்சத்து நிறைவாக இருப்பதால் எலும்புகளை வலுவாக்கும். நார்ச்சத்து செரிமானத்தை மேம்படுத்துகிறது. உளுந்து, கடலைப்பருப்பில் உள்ள புரதம் உடல்வளர்ச்சிக்குஉதவுகிறது.
தேவையான பொருட்கள்:
செய்முறை:
வேர்க்கடலையை நன்கு வறுத்து தோல் நீக்கி சுத்தம் செய்து வைத்துக் கொள்ளவும். இதனுடன் தேங்காய்துருவல்,பூண்டு,வரமிளகாய்,உப்பு சேர்த்து அரைக்கவும். இது இட்லி, தோசைக்கு ஏற்ற துவையலாகும்.
பலன்கள்:
வேர்க்கடலையில் நல்ல கொழுப்பு நிறைந்துள்ளது. இது இதயத்தை காக்கும் அரணாகி செயல்புரிகிறது. பூண்டு செரிமானத்தை மேம்படுத்தும். சீரான இரத்த ஓட்டத்திற்கு உதவும். மூஃயா எனும் ஒற்றை நிறைவழர் கொழுப்பு அமிலம் இருப்பதால் நல்ல கொழுப்பை சேர்த்துகெட்ட கொழுப்பை நீக்குகிறது. உடலை வலுப்படுத்தும் துவையல்.