தேவையான பொருட்கள்:
செய்முறை:
முதலில் பாசிபருப்பை நன்கு குழைய வேகவைத்துக் கொள்ளவும். காளிபிளவரை பொடியாக நறுக்கி ஆவியில் வேகவைக்கவும். பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி இஞ்சி, பூண்டு விழுது பொடியாக நறுக்கிய சின்னவெங்காயம், வேகவைத்த காளிபிளவர் இவற்றை சேர்த்து வதக்கி பாசிபயிறு வேகவைத்ததை எடுத்து ஊற்றவும். இதனுடன் மக்காச்சோளமாவு 1 ஸ்பூன் கலந்து கொதிக்க விடவும். நன்கு வெந்தவுடன் இதனுடன் மிளகுத்தூள், சீரகத்தூள். தேவையான உப்பு சேர்த்து இறக்கவும். இதனுடன் பொடியாக நறுக்கிய கருவேப்பிலை, கொத்தமல்லி இலை தூவிக்கொள்ளவும்.
பலன்கள்:
புரதம், வைட்டமின்கள், தாது உப்புகள் நிறைந்தசூப் உடலில் இரும்புச்சத்து கிரகிக்கப்படுவது மேம்படுகிறது. ஆஸ்துமா, புற்றுநோய் ஆகியவற்றை கட்டுப்படுத்தும் ஆற்றல் கொண்டது.
தேவையான பொருட்கள்:
எண்ணெய் - தே.அளவு
செய்முறை:
பாசிபருப்பை நன்கு குழைய வேகவைத்துக் கொள்ளவும். பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி காய்ந்தவுடன் இஞ்சி, பூண்டு விழுது நறுக்கிய சின்னவெங்காயம், சேர்த்து வதக்கவும். வதங்கிய உடன் அகத்திக்கீரை, வேகவைத்த பாசிபயிறு இவற்றை சேர்த்து கொதிக்கவிடவும்.நன்கு வெந்தவுடன் மிளகுத்தூள், சீரகத்தூள், உப்பு சேர்த்து இறக்கவும். பொடியாக நறுக்கிய கருவேப்பிலை, மல்லி இலை சேர்த்து பரிமாறவும்.
பலன்கள்:
வைட்டமின் ஏ,சி, கால்சியம், தயமின், ரிபோஃப்ளேவின் ஆகியவை இதில் உள்ளன. வயிற்றில் உள்ள புழுக்களை வெளியேற்ற உடலில் உள்ள நச்சுத்தன்மைகளை நீக்கும்,வயிற்றுப்புண், அல்சர் பிரச்சனையை குணமாக்கும். கால்சியம், இரும்புச்சத்து, சோடியம், பொட்டாசியம் போன்ற தாது உப்புகள் நிறைந்துள்ளது. வாய்ப்புண் குணமாகும்.
தேவையான பொருட்கள்:
செய்முறை:
பாசிபயிறை நன்கு வேகவைத்து தனியாக எடுத்து வைத்துக் கொள்ளவும். பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றிக் காய்ந்தவுடன் இஞ்சி, பூண்டு விழுது பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயம், காளான் இவையனைத்தையும் போட்டு நன்கு வதக்கவும். நன்கு வதங்கியவுடன் வேகவைத்த பாசிபயறையும், மக்காசோள மாவு 1 ஸ்பூனையும் சேர்த்து வேகவிடவும். நன்கு கொதித்தவுடன், மிளகுத்தூள் சீரகத்தூள், உப்பு சோத்து இறக்கவும். கறிவேப்பிலை கொத்தமல்லி தூவி பரிமாறவும்.
பலன்கள்:
மிகுதியாக உள்ள கொலஸ்ட்ரால் அளவைக்குறைக்கும். மார்பகம், புரோஸ்டேட் புற்றுநோய்களைத் தடுக்கும். உடல் எடை குறையவிரும்புவோர்க்கு ஏற்ற சூப். நோய்எதிர்ப்பு ஆற்றலை மேம்படுத்தும்.
தேவையான பொருட்கள்:
செய்முறை:
முதலில் பாசிபருப்பை 6 டம்ளர் தண்ணீர் விட்டு நன்கு குழைவாக வேகவைத்துக் கொள்ளவும்.பாத்திரத்தில் 2 டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் இஞ்சி, பூண்டு விழுது பொடியாக நறுக்கிய வெங்காயம், நறுக்கிய கேரட், பீன்ஸ் இவற்றை சேர்த்து வதக்கவும்.வதங்கியவுடன் பாசிபருப்பு வேக வைத்த தண்ணீரையும்அதில் ஊற்றி, சோளமாவு 1 ஸ்பூன் சேர்த்து நன்கு வேகவிடவும்.நன்கு வெந்தவுடன் உப்பு, மிளகுத்தூள், சீரகத்தூள், சேர்த்து இறக்கவும். இறுதியாக பொடியாக நறுக்கிய கொத்தமல்லி. கருவேப்பிலை சேர்த்து பரிமாறவும்.
பலன்கள்:
உடலுக்கு தேவையான புரோட்டீனைபாசிப்பயிறு கொடுக்கும் கேரட்டில் உள்ள சத்துக்கள் (லூக்மியா) எனும் இரத்தப் புற்றுநோயை தடுக்கும். ஞாபகச்சக்தி அதிகரிக்கும்.
தேவையான பொருட்கள்:
செய்முறை:
முதலில் பாசிபருப்மை 2 டம்ளர்தண்ணீர் விட்டு வேகவைத்து தனியாகஎடுத்து வைத்துக் கொள்ளவும்.பின்பு பாத்திரத்தில் சிறிது எண்ணெய் ஊற்றி பட்டைகிராம்பு தூள், இஞ்சி,பூண்டுவிழுது சின்ன வெங்காயம் பொடியாக நறுக்கிய தக்காளி இவற்றை முறையே வதக்கவும்நன்கு வதங்கியவுடன் பாசிபருப்பு வேக வைத்த தண்ணிரையும்அதில் ஊற்றவும்.அதனுடன் சோளமாவு 1 டீஸ்பூன் சேர்த்து கொதித்தவுடன் தேவையான அளவு உப்பு மிளகுத்தூள்சீரகத்தூள் சேர்த்து இறக்கவும் .புதினா இலை தூவி பரிமாறலாம்.
பலன்கள்:
வயிற்றில் ஏற்படும் பித்தம்குறையும். இரும்புச்சத்து, புரதம், கால்சியம் ஆகியவை இதில் நிறைவாக உள்ளது. தக்காளியில் லைக்கோஃபீன் எனும் கரோட்டினாய்டு சத்து இருப்பதால் நுரையீரல், மார்பக புற்று நோய் வருவதை தடுக்கிறது. மலச்சிக்கலை தீர்க்கும்.
தேவையான பொருட்கள்:
செய்முறை:
பாசிபயறை நன்கு குழைய வேகவைத்து கொள்ளவும். பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி இஞ்சி, பூண்டு விழுது, பொடியாக நறுக்கிய சின்னவெங்காயம், நறுக்கிய தண்டுக்கீரை இவற்றை சேர்த்து வதக்கி வேகவைத்த பாசிபயறை ஊற்றி நன்கு கொதிக்கவிடவும். சோளமாவையும் சேர்க்கவும்.நன்கு கொதித்தவுடன் மிளகுத்தூள், சீரகத்தூள், உப்பு சேர்த்து இறக்கவும். இறுதியாக பொடியாக நறுக்கிய கருவேப்பிலை கொத்தமல்லி சேர்க்கவும்.
பலன்கள்:
வாயுத்தொல்லை, நீர்க்கடுப்பு, வாந்தி, வயிறு தொடர்பான அனைத்து நோய்களையும் சரி செய்யும். உடலின்பித்த அளவைக் குறைக்கும். இதயம் வலுப்பெற உதவுகிறது. எலும்புத் தேய்மானம், மூட்டுவலியைத்தடுக்கும்.
தேவையான பொருட்கள்:
செய்முறை:
பாசிபருப்பை 6 டம்ளர் தண்ணீர் சேர்த்து நன்கு வேக வைத்து தனியாகஎடுத்து வைத்துக் கொள்ளவும். பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் இஞ்சி, பூண்டு விழுது. சின்னவெங்காயம் சேர்த்து வதக்கவும். வதங்கிய பின் முருங்கைக் கீரையைசேர்த்து வேகவைத்த பாசிபயிரையும் சேர்த்து கொதிக்க விடவும். இதனுடன் 1 ஸ்பூன் மக்காச்சோள மாவினையும் சேர்க்கவும். நன்கு கொதித்தவுடன் சீரகத்தூள் மிளகுத்தூள், உப்பு சேர்த்து இறக்கவும். பொடியாக நறுக்கிய கருவேப்பிலை, கொத்தமல்லி இலை தூவி பரிமாறவும்.
பலன்கள்:
நார்சத்து, இரும்புசத்து, மக்னீசியம், பொட்டாசியம், கால்சியம் ஆகிய சத்துக்கள் நிறைந்துள்ளது. இரத்த சோகையைப் போக்கும். ஜீரணச்சக்தி அதிகரித்து மலச்சிக்கலைப் போக்கும்.
தேவையான பொருட்கள்:
செய்முறை:
பாசிபருப்பை 6 டம்ளர் தண்ணீர் விட்டு நன்கு குழைய வேகவைத்துக் கொள்ளவும். பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி காய்ந்தவுடன் இஞ்சி பூண்டு விழுது, நறுக்கியசி.வெங்காயம். முளைக்கீரை ஆகியவற்றை சேர்த்து வதக்கவும். இதனுடன் வேகவைத்த பாசிபயறு மற்றும் 1 டீஸ்பூன் மக்காச் சோளமாவு இவற்றை சேர்த்து கொதிக்கவிடவும். நன்கு வெந்தவுடன் மிளகுத்தூள், சீரகத்தூள், உப்பு சேர்த்து இறக்கவும். பொடியாக நறுக்கிய கருவேப்பிலை, மல்லி இலை சேர்த்து பரிமாறவும்.