Contact Us

கொள்ளு கஞ்சி

தேவையான பொருட்கள்:

  • கொள்ளு - 50கிராம்
  • குருணைஅரிசி -150 கிராம்
  • பூண்டு - 5 பல்
  • உப்பு - தேவையான அளவு
  • தண்ணீர் - தேவையான அளவு
  • உ.பருப்பு பொடி 1 ஸ்பூன்
  • கொத்தமல்லி சிறிதளவு

செய்முறை:

          கொள்ளுப் பருப்பை நன்கு வறுத்து மிக்ஸியில் தண்ணீர் விடாமல் கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளவும். அடுப்பை பற்றவைத்து பாத்திரத்தில் 6 டம்ளர் தண்ணீர் ஊற்றி நன்கு கொதித்தவுடன் கொள்ளு பவுடரையும்,அரிசியையும் போட்டு நன்கு கொதிக்க விடவும். பூண்டையும் உப்பையும் சேர்க்கவும் நன்கு வெந்தவுடன் உளுந்தம் பருப்பு பொடியை சிறிது தண்ணீரில் கலந்தும் கொத்தமல்லி இலை விழுதையும் சேர்த்துஇறக்கவும்.

பலன்கள்:

         கொள்ளு கஞ்சி, நீரைப் பெருக்கும் ஆற்றல் உடையது.கெட்ட கொழுப்பைக் கரைக்கும். என்பதால் உடல் எடை குறைப்பில்ஈடுபடுவோர்களுக்கு ஏற்றது. புரதச்சத்து நிறைந்த கஞ்சி.

பாசிபயறு கஞ்சி

தேவையான பொருட்கள்:

  • பாசிபயறு-50 கிராம் 
  • அரிசிகுருணை - 150கிராம் 
  • கேரட், பீன்ஸ் இரண்டும் சேர்த்து-25 கிராம் 
  • மஞ்சள்தூள் ஒரு சிட்டிகை 
  • சீரகம்- 4டீஸ்பூன் 
  • மிளகு-10 
  • பச்சைமிளகாய்-2
  • இஞ்சிபொடியாக நறுக்கியது -1/4 ஸ்பூன் 
  • உப்பு-தேவையானஅளவு 
  • தண்ணீர்-தேவையானஅளவு 
  • பொடியாகநறுக்கிய மல்லி தழை

செய்முறை:

         5 டம்ளர் தண்ணீர் விட்டு பாசிபயிரை நன்கு குழைய வேகவைத்து அதில் அரிசியையும் கலந்து வேகவிடவும்.பாதி வெந்ததும் கேரட், பீன்ஸ். மஞ்சள் தூள், சீரகம், மிளகு, பச்சைமிளகாய், இஞ்சி. உப்பு சோத்து நன்கு வெந்ததும் பொடியாக நறுக்கிய மல்லி தழை தூவி இறக்கவும்.

பலன்கள்:

        இரவு வேளைகளில் இந்தகஞ்சிகளை குடிப்பதனால் ஜீரணம் எளிதாகி மலச்சிக்கல் தீரும். கார்போஹைட்ரேட், புரோட்டீன் நிறைந்தது என்பதால் உடல் எடை அதிகரிக்கஇதைப் பருகலாம். வைட்டமின் பி1. பி2, பி6. நிறைந்தது. வளரும் குழந்தைகளுக்கு ஏற்ற புரதம் நிறைந்தது. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.

 

கோதுமை கஞ்சி

தேவையான பொருட்கள்:

  • கோதுமைகுருணை - 50 கிராம்
  • குருணைஅரிசி - 150கிராம்
  • சீரகம் - 1/4டீஸ்பூன்
  • மிளகு - 10 மிளகு
  • பச்சைமிளகாய் - 2நறுக்கியது 
  • இஞ்சி - 1/4 ஸ்பூன்
  • உப்பு – தேவைக்கேற்ப
  • தண்ணீர் தேவைக்கேற்ப
  • மல்லிதழை - சிறிதளவு

செய்முறை:

         5 டம்ளர் தண்ணீர்விட்டு கோதுமை குருணையை வேகவிடவும்.பாதி வெந்ததும் அதில் அரிசி குருணையும் சேர்த்து வேகவைத்து.வெந்ததும் சீரகம், மிளகு,பொடியாக நறுக்கிய பச்சைமிளகாய்,இஞ்சி,உப்பு சேர்த்து வேகவிடவும் நன்கு வெந்ததும் பொடியாக நறுக்கிய மல்லி தழை தூவி இறக்கவும். இது உடலுக்கு சத்தினை கொடுக்கக் கூடிய எளிய உணவாகும்.

பலன்கள்:

        சர்க்கரை நோய், உடல் பருமன் பிரச்சனைஉள்ளவர்கள் இதனை அருந்தலாம். பொட்டாசியம், இரும்புச்சத்து, வைட்டமின் பி காம்ப்ளக்ஸ் நிறைந்தது. கொழுப்பு இல்லை என்பதால் உடல் எடை குறைப்பதற்குஇதை எடுத்துக் கொள்ளலாம். குடல் தொடர்பான பிரச்சனைகளை சீராக்கும்.

கம்புகஞ்சி

தேவையான பொருட்கள்:

  • கம்புகுருணை - 50 கிராம்
  • அரிசிகுருணை - 150 கிராம்
  • சீரகம் - 1/4 டீஸ்பூன்
  • மிளகு – 10
  • பொடியாகநறுக்கியபச்சைமிளகாய் – 2
  • பொடியாகநறுக்கியஇஞ்சி - 1/4டீஸ்பூன்
  •  உப்பு – தேவைக்கேற்ப
  • தண்ணீர் – தேவைக்கேற்ப
  • பொடியாகநறுக்கியமல்லிதழை - சிறிதளவு

செய்முறை:

       கம்பு குருணையை 6 டம்ளர் தண்ணீர் சேர்த்து பாதி வெந்தவுடன் அரிசிகுருணையையும் சேர்த்து நன்கு வேகவிடவும்.வெந்தவுடன், சீரகம், மிளகு, பொடியாக நறுக்கிய பச்சைமிளகாய், இஞ்சி, உப்பு இவற்றையும் சேர்த்து வேகவிடவும் இறுதியாக மல்லி தழை தூவி இறக்கிபரிமாறவும்.

பலன்கள்:

        அனிமியா எனப்படும் இரத்த சோகை நோயைப் போக்கும்ஆற்றல் கொண்டது. அஜீரணக் கோளாறு உள்ளவர்கள் இந்த கஞ்சியைக் குடித்துவரநன்றாக ஜீரணம் நடைபெறும் குடல் புண், வாய்ப்புண் ஆகியவை குணமாகும். அதிக அளவு இரும்புச்சத்துஉள்ளதால் ஹிமோகுளோபினை மேம்படுத்த உதவுகிறது.

சாமைகஞ்சி

தேவையான பொருட்கள்

  • சாமைஅரிசி - 50 கிராம்
  • அரிசிகுருணை - 150 கிராம் 
  • சீரகம் - 1/4 டீஸ்பூன் 
  • மிளகு -10 பொடியாக 
  • நறுக்கியபச்சைமிளகாய் -2 
  • பொடியாகநறுக்கிய இஞ்சி - 1/4டீஸ்பூன் 
  • உப்பு -தேவையான அளவு 
  • தண்ணீர் - தேவைக்கேற்ப 
  • பொடியாகநறுக்கிய மல்லிதழை - சிறிதளவு

செய்முறை:

           சாமை அரிசியை 6 டம்ளர் தண்ணீர் சேர்த்து குருணையும் சேர்த்து நன்கு வேகவிடவும். வெந்தவுடன், சீரகம், மிளகு, பொடியாக நறுக்கிய பச்சைமிளகாய், இஞ்சி, உப்பு இவற்றையும் சேர்த்து வேகவிடவும். இறுதியாக மல்லி தழை தூவி இறக்கிபரிமாறவும்.

பலன்கள்:

           இரும்புச்சத்து அதிகம்  உள்ளதால் இரத்தசோகையைத்தடுக்கும். கலோரிகள் அதிகம் உள்ளது என்பதால் உடல் எடை உள்ளவர்கள்அளவாக பயன்படுத்த  வேண்டும்.கொழுப்பு அதிகம் உள்ளதாள் அனைவருக்கும் ஏற்றது.