தேவையான பொருட்கள்:
செய்முறை:
வாழைப்பூவை நரம்பு நீக்கி பொடியாக அறிந்து கொள்ளவும். இதனுடன் அனைத்து பொருட்களையும் நன்கு கலந்து சிறிதுநேரம் வைத்திருந்து பரிமாறவும்.
பலன்கள்:
இதை உண்பதனால்இதிலுள்ள துவர்ப்புச்சுவை உடலை தூய்மைப்படுத்தி, ஆரோக்கியம் தருகிறது.வயிற்றுப்புண்களை ஆற்றும், கர்பப்பை பலப்பட உதவும். சீரகம் புண்களை குணப்படுத்தும்.
தேவையான பொருட்கள்:
செய்முறை:
வாழைத்தண்டை நார் நீக்கி பொடியாகநறுக்கிக் கொள்ளவும். இதனுடன் தேவையான பொருட்கள் அனைத்தையும் நன்கு கலந்து தேங்காய் துருவலை மட்டும் இறுதியாக சேர்த்து பரிமாறலாம்.
பலன்கள்:
இது சிறுநீரகக் கற்களைகரைத்து உடலுக்கு வலிமையை தருகிறது. வைட்டமின் A இருப்பதால் கண்களுக்கு நல்லது. உடலில் உள்ள தொற்றுகள், கழிவுகள், ஆகியவற்றை வெளியேற்றும். நார்ச்சத்தும் இருப்பதால் கெட்ட கொழுப்பின் அளவைக் குறைக்கும்.
தேவையான பொருட்கள்:
செய்முறை:
முள்ளங்கியை தோல் நீக்கி பொடியாகதுருவிக் கொள்ளவும். இதனுடன் தேவையான பொருட்கள் அனைத்தையும் நன்கு கலந்து சிறிது நேரத்திற்குப் பின் பரிமாறவும். இதுஇருதயத்திற்கு மிகவும் நல்லது. உடலுக்குத் தேவையான நீர்ச் சத்தினைத் தருகிறது.
பலன்கள்:
புற்றுநோய் செல்களை வளரவிடாமல்தடுக்கும். மூல நோய் இருப்பவர்கள் இதை அவசியம் சேர்த்துக்கொள்ள வேண்டும். ஆஸ்துமா, தொண்டை எரிச்சல், சுவாசக் கோளாறுகள் சரியாகும்.
தேவையான பொருட்கள்:
செய்முறை:
முதலில் காளிபிளவரை சுத்தம் செய்து சுடுநீரில் சிறிது மஞ்சள் தூள், உப்பு கலந்து சுத்தம் செய்து காளிபிளவரை அதில் போட்டு வைக்கவும்.10 நிமிடத்திற்குப் பிறகு, நீரை நன்கு வடித்துவிட்டுகாளிபிளவரை காய் துருவியில் பொடியாகதுருவிக்கொள்ளவும். இதனுடன் மற்ற அனைத்து பொருட்களையும்கலந்து 5 நிமிடத்திற்குப் பிறகு பரிமாறலாம். இது சுவைமிக்க ஒருசாலட் ஆகும்.
பலன்கள்:
கொலைன் சத்து இருப்பதால் மூளை வளர்ச்சிக்கு உதவும். வைட்டமின் சி நிறைவாக இதில்உள்ளது. பைடோ நியூட்ரின்ஸ். ஆன்டிஆக்ஸிடன்ட் இருப்பதால் நாள்பட்ட வியாதிகளின் தீவிரம் குறையும். எலும்பு தசை வளர்ச்சியை ஊக்கப்படுத்துகிறது.
தேவையான பொருட்கள்:
செய்முறை:
பாசிபயறை முந்தைய நாள் காலையே ஊறவைத்துமுளைகட்டிக் கொள்ளவேண்டும். இதனுடன் கேரட் துருவல், முட்டைக்கோஸ், பொடியாக நறுக்கிய வெள்ளரி, மிளகுத்தூள், சீரகத்தூள், தேங்காய்த் துருவல், எலுமிச்சைசாறு, தேவைக்கேற்ப உப்பு கலந்து வைத்து 5 நிமிடம் கழித்து பரிமாறலாம்.
பலன்கள்:
இது நமது உடலைசுத்தம் செய்து நமது தோலை பளபளப்பாகவைத்திருக்க உதவுகிறது. கல்லீரலை பலப்படுத்தி நோய் எதிர்ப்பு ஆற்றலைஅதிகரிக்கிறது. வயிற்றுப்புண் குணமாகும். கண்களுக்கு நல்லது.