Contact Us

அரைக்கீரை பொரியல்

தேவையான பொருட்கள்:

  • அரைக்கீரை -100கிராம் 
  • பொடியாகநறுக்கிய சின்னவெங்காயம் – 5
  • எலுமிச்சைசாறு - 2 டீஸ்பூன் 
  • மிளகுத்தூள் - 1/2 டீஸ்பூன் 
  • சீரகத்தூள் - 1/4 டீஸ்பூன் 
  • வே.கடலைத்தூள் - 1 டீஸ்பூன் 
  • பொ.கடலைத்தூள் - 2 டீஸபூன் 
  • உப்பு - தேவைக்கேற்ப 
  • தேங்காய்துருவல் - 20 கிராம்

செய்முறை:

         முதலில் அரைக்கீரையை உப்பு தண்ணீரில் அலசி பின்னர் சாதாரணநீரில் கழுவிக் கொள்ளவும். பின் கீரையை பொடியாகநறுக்கி கொள்ளவும். இதனுடன் தேங்காய் துருவல் தவிர்த்து மற்ற பொருட்கள் அனைத்தையும்சேர்த்துக் கலக்கவும். தேங்காய் துருவலை இறுதியாக கலந்து 10 நிமிடம் கழித்து பரிமாறவும்.

பலன்கள்:

        இது வேகவைக்காததால் சத்துக்கள்நிறைந்த நார்ச்சத்து மிக்க பொரியலாகும். நீர்ச்சத்து அதிகம் உள்ளதால் உடல் வெப்பத்தை குறைக்கும்.

 

பொன்னாங்கண்ணி பொரியல்

தேவையான பொருட்கள்:

  • பொன்னாங்கண்ணிகீரை - 100 கிராம்
  • பொடியாகநறுக்கியசின்னவெங்காயம் – 5
  • எலுமிச்சைசாறு - 2 டீஸ்பூன்
  • மிளகுத்தூள் - 1/2 டீஸ்பூன்
  • வே.கடலைத் தூள் - 1 டீஸ்பூன்
  • பொ.கடலைத்தூள் - 2 டீஸ்பூன்
  • உப்பு – தேவைக்கேற்ப
  • தேங்காய்த்துருவல் - 20 கிராம்

செய்முறை:

        கீரையை உப்புத்தண்ணீரில் கழுவிக் கொள்ளவும். நீரில் சுத்தம் செய்த கீரையை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். இதனுடன் மற்ற பொருட்களையும் (தேங்காய்துருவல் தவிர்த்து) கலந்து கொள்ளவும். தேங்காய் துருவலை இறுதியாக கலந்து கொள்ளவும். 10 நிமிடம் அப்படியே வைத்து பின்னர் சாப்பிடவும்.

பலன்கள்:

      இது கண்களுக்குநல்ல குளிர்ச்சியையும், வெளிச்சத்தையும் கொடுக்கும். பித்தமயக்கம், கைகால் எரிச்சலை போக்கும். வைட்டமின் ஏ.பி.சி. நார்ச்சத்து, பீட்டாகரோட்டின்,கால்சியம், இரும்புச்சத்து, நிறைந்தது. காசநோய், கண் நோய்களை, குணப்படுத்தும். கல்லீரல் நோய்களுக்கு சிறந்த மருந்தாக அமைகிறது.

மணத்தக்காளிபொரியல்

தேவையான பொருட்கள்:

  • மணத்தக்காளி - 100 கிராம் 
  • பொடியாகநறுக்கியசின்னவெங்காயம் -5 
  • எலுமிச்சைசாறு -2 டீஸ்பூன் 
  • சீரகத்தூள் - 1/4டீஸ்பூன் 
  • வே.கடலைத் தூள் - 1 டீஸ்பூன் 
  • பொ.கடலைத்தூள் - 2 டீஸ்பூன் 
  • உப்பு -தேவைக்கேற்ப 
  • தேங்காய்த்துருவல் - 20 கிராம்

செய்முறை:

      கீரையை உப்புத்தண்ணீரில் அலசி பின் சாதாரண நீரில் கழுவிக் கொள்ளவும். சுத்தம் செய்த கீரையை நன்கு பொடியாக அரிந்து அதனுடன் தேங்காய் துருவல் தவிர்த்து மற்ற பொருட்களை முதலில்கலந்து வைத்துக் கொள்ளவும். இறுதியாக தேங்காய் துருவல் கலந்து பரிமாறவும்.

பலன்கள்:

         வைட்டமின் பி காம்பளக்ஸ், பாஸ்பரஸ்உள்ளிட்ட தாது உப்புகள் மிகுந்தஅளவில் உள்ளன. குடல் புண், வாய்ப்புண், ஆகியவற்றை ஆற்றும் மன அழுத்தத்தை குறைக்கும்பக்கவாதம் மூட்டுவலிகளுக்கு சிறந்த பலன் தரும்.