தேவையான பொருட்கள்:
செய்முறை:
தேங்காய் பால் தயிர் தேவைப்படுவதற்குமுந்தையநாள்இரவேஒருமுழுத்தேங்காயின்கெட்டிப்பாலைஎடுத்துஅதில்ஒருஎலுமிச்சையின்சாறைஊற்றிவைத்தால்அடுத்தநாள்காலைஅதுதேங்காய்பால்தயிராகதயாராகிஇருக்கும்.
அவுல் தயிர்சாதம்செய்முறை:
அவுலை நன்கு சுத்தம் செய்து தண்ணீரில் ஊறவைக்கவும். அவுல் 10 நிமிடம் நன்கு ஊறியவுடன் தேங்காய் பால் தயிரை ஊற்றிகலக்கவும். இதனுடன் பொடியாக நறுக்கிய சின்னவெங்காயம், இஞ்சி. பச்சைமிளகாய், உப்பு, கருவேப்பிலை, கொத்தமல்லி இலை இவற்றையும் சேர்த்துகலந்து கொள்ளலாம். இறுதியாக கேரட் துருவலை தூவி பரிமாறலாம்.
பலன்கள்:
தயிர், உணவுக்கு கூடுதல்சுவையை அள்ளித்தருகிறது. இதில் கார்போ ஹைட்ரேட் மற்றும் புரதச்சத்து சரிவிகிதத்தில் கலந்துள்ளன. எலும்பு, பல் தசைமண்டல வளர்ச்சியைஊக்குவிக்கிறது. அமினோ அமிலங்கள் நிறைந்த இந்த உணவு சளி, இருமல், மற்றும் நோய் தொற்றுகளில் இருந்துகாக்குகிறது.
தேவையான பொருட்கள்:
செய்முறை:
அவுலை நன்கு சுத்தம்செய்து தண்ணீர் ஊற்றி ஊற வைக்கவும்.அவல் நன்கு ஊரியஉடன் வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு உளுந்தம் பருப்பு போட்டு தாளிக்கவும் பொரித்தவுடன் மிளகாய் வற்றல் வெங்காயம் போட்டு வதக்கி தேவையான அளவு உப்பு சேர்த்துகிளறவும்.இறுதியாக தேங்காய் துருவலையும் சேர்த்து கொத்தமல்லி இலை தூவி பரிமாறவும்.
பலன்கள்:
கடுகு,உளுந்து ஆகியன செரிமான மண்டலத்தை சீராக்குகின்றன.எலும்பு வளர்ச்சிக்கு உதவும். வைட்டமின் மற்றும் சத்துக்கள் அடங்கியுள்ளது.
தேவையான பொருட்கள்:
செய்முறை:
அவுளை நன்கு சுத்தம் செய்து மிக்ஸியில் போட்டு தண்ணீர் விடாமல் ஒன்றிரண்டாக உடைக்கவும்.உடைத்த அவுளை 5 டம்ளர் தண்ணீர்விட்டு கொதிக்க விடவும். அவுள் பாதி வெந்தவுடன் வெல்லம் தேங்காய்பால் ஏலக்காய் தூள்சேர்த்து இறக்கவும்.முந்திரியையும்,திராட்சையும் நெய்யில் வறுத்து சேர்த்து ஐந்து நிமிடம் கழித்து பரிமாறவும்.
பலன்கள்:
அடிப்படைச் சத்துக்கள் அடங்கி உள்ளன.உடல் சோர்வை நீக்கி புத்துணர்வை அளிக்கும்.மூளை வளர்ச்சிக்கு உதவும்.புரதம்,முந்திரியில் உள்ளது. இதில் உள்ள மாங்கனீஸ் செரிமானகோளாறுகளை குணப்படுத்தும்.
தேவையான பொருட்கள்:
செய்முறை:
கரட் பீன்ஸ், சோயாமூன்றையும் பொடியாக நறுக்கி ஆவியில் வேகவிடவும். அவுலை நன்கு தண்ணீரில் அலசி தண்ணீரை வடித்துவிட்டுதேங்காய் பால் ஊற்றி ஊறவிடவும்.அவுல்ஊறியவுடன் ஆவியில் வெந்த காய்கறிகளையும், பட்டைகிராம்பு பொடி, மிளகுத்தூள், இஞ்சி, பூண்டு விழுது தக்காளி, வெங்காய விழுது தேவையான அளவு உப்பு இவையனைத்தும்சேர்த்து நன்கு கலக்கவும். கடைசியாக தேங்காய் துருவல் சேர்த்து கலந்து புதினா இலை தூவி பரிமாறலாம். செயற்கை மசாலா கலக்காத ஆரோக்கியமான அவுல் பிரியாணி உடலுக்கு மிகவும் நல்லது.
பலன்கள்:
வைட்டமின் ஏ.பி. காம்பள்க்ஸ்சி. இரும்புசத்து, பொட்டாசியம், தாமிரம் ஆகிய சத்துக்கள் நிறைந்தது. இரத்த உற்பத்திக்கு உதவும் பொருட்கள் இதில் உள்ளன. கண்களை காக்கும் சுரோட்டினாய்டு சத்துக்களும் நிறைந்துள்ளது.
தேவையான பொருட்கள்:
செய்முறை:
அவுலை கல், உமிநீக்கி நன்கு சுத்தம் செய்யவும். இதனை மிக்ஸியில் போட்டுதண்ணீர் விடாமல் மாவுபோல் உப்பு சேர்த்து அரைக்கவும். இந்த மாவுடன் சிறிதுதண்ணீர் தெளித்து கட்டிகள் இல்லாமல் பிசறிக் கொள்ளவும். இதனை 10 நிமிடம் அப்படியே வைத்து பின்னர் இதனுடன் நாட்டுச்சர்க்கரை தேங்காய் துருவல் சேர்த்து கலந்து பரிமாறவும்.
பலன்கள்:
தேங்காயில் நல்ல கொழுப்பு தேவையானஅளவு உள்ளதால் உடலில் உள்ள கொழுப்புகளையும், இரத்தஓட்டத்தையும் மேம்படுத்தும்.
தேவையான பொருட்கள்:
செய்முறை:
அவுலை நன்கு சுத்தம்செய்து தண்ணீர் விட்டு 10 நிமிடம் ஊறவிடவும். | ஊறியபின் எலுமிச்சைசாறு, உப்பு, பச்சை மிளகாய், இஞ்சிசாறு, மிளகுத்தூள், சீரகத்தூள், தேங்காய் துருவல் வறுத்த வேர்க்கடலை இவையனைத்தும் சேர்த்து கலக்கவும். இறுதியில் பொடியாக நறுக்கிய கருவேப்பிலை கொத்தமல்லி தூவி பரிமாறவும்.
பலன்கள்:
இரும்புசத்தும், கால்சியமும் ஆரோக்கியமான எலும்பு வளர்ச்சிக்கு உதவும். எலுமிச்சையில் உள்ள பிளேவனாய்ட்ஸ் தேவையற்றகொழுப்பை கரைக்கும். அல்சைமர் எனும் ஞாப மறதியை போக்கும். ஆற்றல் உள்ளது.
தேவையான பொருட்கள்:
செய்முறை:
அவுலை நன்கு சுத்தம்செய்து தண்ணீரில் 5 நிமிடம் ஊறவைக்கவும். அவுல் நன்கு ஊறியவுடன் மிளகுத்தூள், சீரகத்தூள், உப்பு சேர்த்து கலக்கவும். கடைசியாக தேங்காய் துருவல் கலந்து, கொத்தமல்லி,கருவேப்பிலையும் கலந்து பரிமாறவும்.
பலன்கள்:
குளிர்காலத்தில் ஏற்படும் மந்தத்தன்மையை போக்கி நன்கு பசி எடுக்கச் செய்யும். மிளகு, சீரகம் ஆகியன நுண் கிருமிகளை சிறிதளவுஅழிக்கும். இதில் உள்ள இயற்கையான சத்துக்களால் நுரையீரல் வலுவாக்குகின்றன.
தேவையான பொருட்கள்:
செய்முறை:
முதலில் கொத்தமல்லி தழையையும்,இஞ்சியையும் சிறிது தண்ணீர் சேர்த்து மிக்ஸியில் விழுதாக அரைத்துக் கொள்ளவும். அவுலை நன்கு சுத்தம் செய்து தண்ணீரில் 10 நிமிடம் ஊற வைக்க வேண்டும். ஊறிய அவுலில் கொத்தமல்லி, இஞ்சி விழுது, உப்பு, சீரகத்தூள், மிளகுத்தூள், தேங்காய் துருவல் இவற்றுடன் கலந்து பரிமாறலாம். இது இரும்புச்சத்தும், நார்ச்சத்தும் நிறைந்தஆரோக்கிய உணவாகும்.
பலன்கள்:
உமிழ்நீர் சுரப்பை அதிகரிக்கும்ஆற்றல் கொத்தமல்லிக்கு உண்டு. பசியைத் தூண்டும் ஆற்றல் கொண்டது. இரத்தத்தில் ஆக்ஸிஜன் சீராக கலக்க உதவி புரிகிறது.
தேவையான பொருட்கள்:
செய்முறை:
அவுலை சுத்தம் செய்து 10 நிமிடம் ஊறவிடவும். ஊறியவுடன் இதனுடன் பீட்ரூட் துருவலை அரைத்தும், மற்ற பொருட்களை அப்படியே சேர்த்து கலந்து பரிமாறவும். இது ஒரு ஆரோக்கியமானகாலை உணவாகும்.
பலன்கள்:
வைட்டமின்கள் மற்றும் தாதுஉப்புகள் பீட்ரூட் அவலில் நிறைந்துள்ளன. இரத்த உற்பத்தி, தோல் பாதுகாப்பு ஆகியவற்றில்பீட்ரூட் முக்கியப் பங்கு வகிக்கிறது.
தேவையான பொருட்கள்:
செய்முறை:
முதலில் புதினா இலையையும், இஞ்சியையும் மிக்ஸியில் விழுதாக அரைத்துக் கொள்ளவும். அவுலை நன்கு சுத்தம் செய்து தண்ணீரில் 10 நிமிடம் ஊற வைக்கவேண்டும். ஊறியபின்அவுலுடன் புதினா, இஞ்சி விழுது, உப்பு, சீரகத்தூள், மிளகுத்தூள் கலந்து இறுதியாக தேங்காய் துருவலையும் கலந்து பரிமாறலாம். இது ஜீரணத்தை அதிகரித்துபசியைத் தூண்டக்கூடிய நார்ச்சத்து மிக்க உணவாகும்.
பலன்கள்:
புதினாவில் மென்தால் நிறைந்துள்ளதால் சுவாசப் பிரச்சனைகளை சரிசெய்கிறது.வாய் துர்நாற்றம் நீங்கும். புற்றுநோய் செல்களை அழித்து நோய் எதிர்ப்பு ஆற்றலை அதிகரிக்கும் உணவு.
தேவையான பொருட்கள்:
செய்முறை:
கேரட் துருவலையும்,தேங்காய்துருவலையும் மிக்ஸியில் அரைத்து பால் எடுக்கவும்.அவுலைஉமி நீக்கி சுத்தம் செய்து மிக்ஸியில் போட்டு தண்ணீர் விடாமல் மாவுபோல் அரைக்கவும். அரைத்த மாவில் கேரட். தேங்காய் பால் சேர்த்து, பிசிரிவிடவும்சிறிது நேரம் (10நிமிடம்) ஊறிய பின் 10 மிளகுத்தூள், சீரகத்தூள், உப்பு சேர்த்து கிளறி கருவேப்பிலை கொத்தமல்லி தூவி பரிமாறவும்.
பலன்கள்:
உடலில் ஏற்படும் நீர்வறட்சியைக் குறைக்கும். பால் சாப்பிடாதவர்களுக்கு இதிலிருந்து கிடைக்கும்கால்சியம் அதை ஈடு செய்யும்.புரதம் கார்போஹைட்ரேட் நிறைந்த உணவு.
தேவையான பொருட்கள்:
செய்முறை:
முதலில் கேரட்டை சிறிதுதண்ணீர் சேர்த்து அரைத்து வைத்துக் கொள்ளவும். அவுலை நன்கு சுத்தம் செய்து கழுவி தேவையான தண்ணீர் சேர்த்து 10 நிமிடம் ஊறவிடவும். ஊறியவுடன் அவுலுடன் கேரட் விழுது, உப்பு, சீரகத்தூள், மிளகுத்தூள், தேங்காய் துருவல் அனைத்தும் சேர்த்து கலந்து பரிமாறவும்.
பலன்கள்:
கேரட்டில் வைட்டமின், கரோட்டினாய்டு உள்ளன. சீரகம், மிளகுத்தூள் ஆகியவை வயிற்றைச் சுத்தம் செய்கின்றன. சிறுநீரகத்தில் அடைப்புகள் ஏற்படாமல் தடுக்கிறது.
தேவையான பொருட்கள்:
செய்முறை:
அவுலை தண்ணீர் ஊற்றி 2 முறை கழுவிவிடவும். அவுலை விடவும் சற்று குறைவான தண்ணீர் சேர்த்து 10 நிமிடம் ஊறவைக்க வேண்டும். பின்னர் இதனுடன் மற்ற பொருட்களை சேர்த்துநன்கு கலக்கி பரிமாறவும்.
பலன்கள்:
இரும்புச்சத்து, கால்சியம் ஆகியன அடங்கியிருப்பதால் எலும்பு வளர்ச்சிக்கு உதவுகிறது. முந்திரியில் உள்ள சத்துக்கள் குழந்தைகளின்முளை வளர்ச்சிக்கு தவுகின்றன.
தேவையான பொருட்கள்:
செய்முறை:
மேலே குறிப்பிட்டுள்ள அனைத்துப்பொருட்களும் நாட்டு மருந்துக் கடைகளில் கிடைக்கக் கூடியதே. இப்பொழுது கூறப்பட்ட பொருட்கள் அனைத்தும் சேர்த்தால் பத்து முதல் பதினைந்து கிலோ மூலிகை டீதயார் செய்வதற்கான அளவுகளாகும். உங்களுக்கு குறைவாகத் தேவைப்படும் எனில் இந்த அளவுகளில் பாதிஅல்லது கால்பாகம் என்ற அளவில் வாங்கிக்கொள்ளலாம்.
இங்கு குறிப்பிட்டுள்ள அனைத்துப் பொருட்களையும் வாங்கி வந்து வெயிலில் ஈரம்படாமல் இரண்டு நாட்கள் காயவைக்க வேண்டும். பிறகு அனைத்தையும் நன்றாக இடித்துக் கொள்ள வேண்டும். இதில் ஏற்கனவே சில பொருட்கள் பொடியாககிடைக்கலாம். சில பொருட்கள் கெட்டியாகஇருக்கும் கெட்டியாக உள்ள பொருட்கள் நன்றாகஇடித்துக் கொள்ள வேண்டும். பிறகு அனைத்தையும் ஒன்று சேர்த்தோ.தனித்தனியாகவோ மிக்சியில் போட்டு அரைக்க வேண்டும். அரைப்பதற்கு முன்னால் இவற்றில் உள்ள குப்பைகள் கற்கள்இருந்தால் நீக்கிவிடலாம். மிக்சியில் அரைக்கும் பொழுது முடிந்தவரை வேகத்தை குறைவாக வைத்து அரைப்பது நல்லது.
பலன்கள்:
செரட்டோன் சுரப்பியை சீராகஇயங்கச் செய்வதால் ஒரு மனிதனுக்கு ஆழ்ந்ததூக்கத்திற்கு உதவுகிறது. பார்க்கின்சன், பக்கவாதம், ஞாபக மறதி உள்ளவர்களுக்குசிறந்த மருந்தாக வேலை செய்கிறது. சர்க்கரை, பிபி க்கு மாத்திரை எடுத்துக்கொள்வோர் இதை சாப்பிடுவதால் உடனடிஆரோக்கியம் பெறலாம். உடலும், மனமும் சுறுசுறுப்பாக இயங்க உதவுகிறது.