தேவையான சரக்குகள் :
1. செம்பருத்தி பூ இதழ் - 100 கி
2. எலுமிச்சை சாறு - 50 கி
3. தேன் - 100 கி
4. சர்க்கரை - 750 கி
தயாரிக்கும் விதம் :
செம்பருத்தி பூ இதழ்களை தண்ணீரில் காய்ச்சி, கசாயமாக்கி அத்துடன் சர்க்கரை, எலுமிச்சை சாறு கலந்து, காய்ச்சி, பதத்தில் எடுத்து, தேனுடன் கலந்து வடிகட்டி பாட்டிலில் பத்திரப்படுத்தவும்.
அளவு:
20-30 மி.லி. சர்பத்துடன் 150 மி.லி. நீர் கலந்து பருகவும்.
தீரும் நோய்கள் :
இருதய நோய்கள், உடல் பலஹீனம், உடல் சூடு முதலியன.
தேவையான சரக்குகள் :
1. வில்வம் இலை - 200 கி
2. எலுமிச்சை சாறு - 50 கி
3. தேன் - 100 கி
4. சர்க்கரை - 1 கி.கி.
செய்முறை :
வில்வ இலைகளை நீரிலிட்டுக் காய்ச்சி கஷாயமாக்கி, அத்துடன் சர்க்கரை, எலுமிச்சை சாறு கலந்து, காய்ச்சி, பதத்தில் எடுத்து தேனுடன் கலந்து வடிகட்டி, பாட்டிலில் பத்திரப்படுத்தவும்.
அளவு :
20-30 மி.லி. சர்பத்துடன் 150 மி.லி. நீர் கலந்து பருகவும்.
பயன்கள்:
வாயுத் தொல்லை, வயிற்றுக்கோளாறு, உடல்சூடு முதலியன நீங்கும்.
தேவையான சரக்குகள் :
1. தூதுவளை -200 கி
2. எலுமிச்சை சாறு -50 கி.
3. தேன் -100 கி.
4. சர்க்கரை -1 கி.கி.
செய்முறை :
தூதுவளை இலைகளை நீரிலிட்டுக் காய்ச்சி கஷாயமாக்கி, அத்துடன் சர்க்கரை, எலுமிச்சை சாறு கலந்து, காய்ச்சி, பதத்தில் எடுத்து தேனுடன் கலந்து வடிகட்டி, பாட்டிலில் பத்திரப்படுத்தவும்.
அளவு:
20-30 மி.லி சர்பத்துடன் 150 மி.லி. நீர் கலந்து பருகவும்.
தீரும் நோய்கள் :
சளி, இருமல்.
(ஆத்மரட்சாமிருதம்)
தேவையான சரக்குகள் :
1. நன்னாரி -100 கி
2. சர்க்கரை -200 கி
செய்முறை :
நன்னாரி வேரைப் பொடித்து தண்ணீரில் கலந்து கஷாயமாக எடுத்து சீனி கலந்து காய்ச்சி பாகுபதத்தில் சீசாவில் அடைத்து பத்திரப்படுத்தவும்.
அளவு:
20 மி.லி. சர்பத்தில் 60 மி.லி. தண்ணீர் கலந்து அருந்தவும்.
தீரும் நோய்கள் :
மேக காங்கை, பிரமேகம், நீர்ச்சுருக்கு, நீர்க்கட்டு, கைகால் காந்தல், கண்ணெரிவு, நாவறட்சி தீரும், தேகம் குளிரும்.
தேவையான சரக்குகள் :
1. வல்லாரை -200கி
2. எலுமிச்சை சாறு -50 கி
3. தேன் -100 கி
4. சர்க்கரை - 1 கி.கி.
செய்முறை :
வல்லாரை இலைகளைப் பொடித்து தண்ணீரில் கலந்து கஷாயமாக எடுத்து அத்துடன் சர்க்கரை கலந்து காய்ச்சி பாகுபதத்தில் சீசாவில் அடைத்து பத்திரப்படுத்தவும்.
அளவு :
20 மி.லி. சர்பத்தில் 60 மி.லி. தண்ணீர் கலந்து அருந்தவும்.
தீரும் நோய்கள் :
ஞாபக மறதி, உடல் பலஹீனம் போன்றவைகளை நீக்கி இரத்தத்தை சுத்தம் செய்யும்.
தேவையான சரக்குகள் :
1. சந்தனம்தூளை -200 கி.
2. சர்க்கரை -250 கி.
செய்முறை :
சந்தனத்தூளை தண்ணீரில் ஒரு நாள் ஊறவைத்து மறுநாள் காய்ச்சி, தண்ணீர் நாலில் ஒன்றாய் வற்றிய பின் வடிகட்டி அத்துடன் சர்க்கரை கலந்து காய்ச்சி பாகு பதத்தில் சீசாவில் அடைத்து வைத்துக் கொள்ளவும். தேவைப்படும் பொழுது எடுத்து பயன்படுத்தவும்.
அளவு:
20 மி.லி. சர்பத்தை 60 மி.லி. தண்ணீரில் கலந்து பருகவும்.
தீரும் நோய்கள் :
மூலச்சூடு, பிரமேகம் தீரும்.
தேவையான சரக்குகள் :
1. தாமரைப்பூ -100 கி.
2. சர்க்கரை -200 கி.
செய்முறை :
உலர்ந்த தாமரைப் பூவை வெந்நீரில் 12 மணி நேரம் வரை ஊற வைத்து வடிகட்டி கால் பங்காய் வற்ற வைத்து அத்துடன் சர்க்கரை கலந்து பாகு பதத்தில் இறக்கி பாட்டில்களில் நிரப்பி பத்திரப்படுத்தவும்.
அளவு:
20 மி.லி. சர்பத்தை 60 மி.லி. தண்ணீர் கலந்து அருந்தவும்.
தீரும் நோய்கள் :
இருதய நோய்கள் மற்றும் இருதயத்திற்கு ஓர் ஆரோக்கிய பானம்.
தேவையான சரக்குகள் :
1. எலுமிச்சை சாறு -100 கி.
2. சர்க்கரை -500 கி.
செய்முறை :
எலுமிச்சை பழ ரசத்தில் சீனி (அ) சர்க்கரையைக் கலந்து காய்ச்சி பாகுபதத்தில் சீசாவில் அடைத்து பத்திரப் படுத்தவும்.
அளவு:
20 மி.லி. 40 மி.லி. தண்ணீருடன் பருகவும்.
தீரும் நோய்கள் :
பித்தம் தீரும்.
தேவையான சரக்குகள் :
1. மாதுளம் பழரசம் -100 கி.
2. சர்க்கரை -200 கி.
செய்முறை :
மாதுளையின் மேல் தோலை நீக்கி சாறு பிழிந்து அத்துடன் சீனியைக் கலந்து பாகுபதத்திற்கு காய்ச்சி சீசாவில் அடைத்து பத்திரப்படுத்தவும்.
அளவு :
20 மி.லி. சர்பத்தை 40 மி.லி. நீரில் கலந்து பருகவும்.
தீரும் நோய்கள்:
பித்தத்தையும், பித்த சூட்டையும் இரும்புச் சத்து குறைவையும் நீக்கும்.