சித்த மருத்துவத்தில் மணப்பாகு தயாரிக்கும் முறைப்படியே டானிக் எனப்படும். சுவையான மணப்பாகு மருந்தும் தயார் செய்யப்படுகிறது. டானிக்குகள் தேவையான மூலிகைகளைப் பச்சையாகவோ, காய வைத்தோ தேவையான அளவு எடுத்து தண்ணீரில் கலந்து கொதிக்க வைக்கும் பொழுது மூலிகைகளில் உள்ள மருத்துவ குணங்களை தண்ணீர் கிரகித்துக் கொண்டு மூலிகை கஷாயமாகிறது. இந்த மூலிகை கஷாயத்தினை நோயாளிக்குக் கொடுக்கும்பொழுது கஷாயத்தின் மருத்துவ குணம் உடலில் ஊக்குவிக்கப்படுவதற்கு ஒரு துணை சக்தியாக சர்க்கரைப் பாகு செயல்பட்டு செய்வதுடன் நோயாளியின் உடலை ஆரோக்கியமாக இயக்குவதற்கு தேவையான சக்தினையும் சாப்பிடுவதற்கு இலவயையும் கொடுக்கின்றன. ஏனெனில் உடலை நோயின்றி காப்பதற்கு உடலில் எதிர்ப்பு சக்தி தேவையான அளவு ஒவ்வொருவரின் உடம்பிலும் காணப்படும். இந்த அளவு குறையும் பட்சத்திலேயே நோய்கள் உண்டாகின்றன. அதே போல் நோய்க்குண்டான மருந்தினை செயல்படுத்த உடம்பிற்கு சக்தி தேவைப்படுகிறது. இந்த சக்தி சர்க்கரை (அ) மாவுப் பொருட்களில் இருந்தே பெரும்பாலும் கிடைக்கிறது. எனவே மருந்தின் ஆற்றலை செயல்படுத்தும் பொருட்டு சர்க்கரை போன்ற சக்தியைத் தரக்கூடிய பொருட்கள் மருந்தில் சேர்க்கப்படுகின்றன. மேலும் சர்க்கரை கஷாயங்களை நீண்ட நாள் கெடாமல் அதற்குரிய மருத்துவ குணம் மாறாமல் தக்க வைத்துக்கொள்ளும் பொருளாகவும் செயல்படுகிறது.
தேவையான சரக்குகள்:
1. அவுரி இலைச்சாறு -500 மி.லி
2. கீழாநெல்லிச் சாறு -500 மி.லி
3. அதி மதுரச் சாறு -500 மி.லி
4. நிலவேம்புச் சாறு -1000 மி.லி
5. அன்னபேதி சாறு -1500 மி.லி
செய்முறை :
தேவையான மூலிகைகளைக் கழுவி சுத்தம் செய்து நீராவி கொள்கலன்களில் கஷாயம் தயாரித்து சர்க்கரையைக் கலந்து காய்ச்சல் பதத்தில் வடித்து பத்திரப்படுத்தவும்.
அளவு :
5-10 மி.லி. 3-4 வேளைகள் இத்துடன் ஏரோலில் மற்றும் சந்தனாதி கேப்சூல்கள் உபயோகித்தால் சிறந்த பலன் கிடைக்கும்.
தீரும் நோய்கள் :
மஞ்சட்காமாலை, கல்லீரல், மண்ணீரல் கோளாறுகள். பித்தாதிக்கம், பசியின்மை, ருசியின்மை, வாயுத் தொல்லைகள் முதலியன தீரும்.
தேவையான சரக்குகள் :
1. துத்தி இலைச்சாறு - 857 மி.லி
2. வெட்பாலை - 857 மி.லி
3. ஆமணக்கு வேர்சாறு - 857 மி.லி
4. சந்தனக் கட்டை சாறு - 857 மி.லி
5. ஆடு தீண்டாப்பாளை சாறு - 857 மி.லி
6. சர்க்கரை - தேவையான அளவு
தயாரிப்பு முறை :
1-5 வரையுள்ள சாறு மற்றும் சர்க்கரையைப் பாகு பதமாகக் காய்ச்சி சுத்தமான பாட்டில்களில் நிரப்பி மூடி வைக்கவும்.
அளவு :
5-10 மி.லி. தினமும் இரண்டு மூன்று வேளைகள் இத்துடன் ஏபைலோ ஹெர்ப் கேப்சூல், சந்தனாதி கேப்சூல்ஸ் உபயோகித்தால் சிறந்த பலன் கிடைக்கும்.
தீரும் நோய்கள் :
மூலம், பௌத்திரம், ரத்தமூலம், ஆசனவாய் கடுப்பு. மலச்சிக்கல் முதலியன.
தேவையான சரக்குகள்:
1. அசோகபட்டைச்சாறு - 80 மி.லி
2. துளசிச்சாறு - 40 மி.லி
3. சந்தனம் - 40 மி.லி
4. அரசம்பட்டைச் சாறு - 40 மி.லி
5. அதிமதுரம் சாறு - 40 மி.லி
6. மருதோன்றி இலைச்சாறு - 40 மி.லி
7. மிளகு - 40 மி.லி
8. பிரம்ம தண்டுச்சாறு - 40 மி.லி
9. வெண்மருதைச் சாறு - 20 மி.லி
10. சிரப் (சர்க்கரை பாகு) - 600 மி.லி
11. அமுக்கரா சாறு - 20 மி.லி
தயாரிக்கும் விதம் :
மேலே கூறப்பட்ட மூலிகைகளை சிதைத்து, ஒரு பாத்திரத்தில் நீர்விட்டு அதில் துளைகள் உள்ள தட்டினை இட்டு அதன் மேல் மூலிகைகளைப் போட்டு கொதிக்க வைத்து, மூலிகைச் சாற்றினை மட்டும் இறுத்து எடுத்து விட்டு, எஞ்சியவற்றை அகற்றிவிடவும். இச்சாற்றுடன் சர்க்கரை சேர்த்து பதத்தில் காய்ச்சி பாட்டில்களில் அடைத்து பயன்படுத்தவும்.
பயன்கள் :
வெள்ளைப்போக்கு, மாதவிடாய் கோளாறு, கருப்பாசய கோளாறு, இடுப்பு வலி, பலஹீனம், சோர்வு,சோகை, வலியுள்ள மாதவிடாய் முதலியன. இது பெண்களுக்கான ஆரோக்ய டானிக்.
அளவு:
5 முதல் 10 மில்லி தினம் 3 வேளைகள்.
தேவையான சரக்குகள் :
1. கண்டங்கத்திரி - 69.9 மி.லி
2. துளசிச்சாறு - 69.9 மி.லி
3. வெள்ளை எருக்கு - 2.8 மி.லி
4. திப்பிலி - 2.8 மி.லி.
5. ஆடாதோடை - 3.73 மி.லி
6. அவுரி இலை - 1.82 மி.லி
7. தும்பை - 3.26 மி.லி
8. மிளகு - 4.66 மி.லி
9. அதிமதுரம் - 2.8 மி.லி
10. பச்சைக் கற்பூரம் - 2.8 மி.லி.
11. சர்க்கரைப் பாகு - 559.2 மி. கி
தயாரிக்கும் விதம் :
மேலே கூறப்பட்ட மூலிகைகளை கழுவி சுத்தம் செய்து நீராவி கொள்கலன் அல்லது மூடிய கலனிலகஷாயம் இறங்க பாத்திரத்தின் கீழே துளைகள் உள்ள தடுப்பு பொருத்தி, கஷாயத்தைத் தனியே பிரித்தெடுக்கவும். மூலிகைச் சாற்றினை சர்க்கரையுடன் கலந்து பாகுபதத்தில் சுத்தமான பாட்டில்களில் நிரப்பி மூடி வைக்கவும்.
பயன்கள்:
சளி, இருமல், பீனிசம், ஜலதோஷம் மற்றும் கபத்தினால் உண்டாகும் நோய்கள் தீரும்.
அளவு:
5 முதல் 10 மில்லி தினம் 3 வேளைகள்.
தேவையான சரக்குகள் :
1. வல்லாரைச் சாறு - 28.2 கி.
2. அன்னபேதி சாறு - 22.6 மி
3. அதிமதுரம் சாறு - 28.2 கி.
4. லவங்கம் சாறு - 28.2 கி.
5. சிறுநாகப் பூ சாறு - 37.6 கி.
6. ஏலம் - 28.2 கி.
7. மிளகு - 28.2 கி.
8. திப்பிலி - 28.2 கி.
9. சுக்கு - 28.2 கி.
10. அமுக்கரா - 188 கி.
தயாரிக்கும் விதம் :
மேலே கூறப்பட்ட மூலிகைகளைக் கழுவி சுத்தம்செய்து நீராவி கொள்கலன் (அ) மூடிய கலனில் கஷாயம் இறங்க பாத்திரத்தின் கீழே துளைகள் உள்ள தடுப்பினைப் பொருத்தி கஷாயத்தை தனியே வடிகட்டி எடுத்துக் கொள்ளவும். சர்க்கரையை பாகுபதத்தில் காய்ச்சி அத்துடன் தயாரித்து வைத்த கஷாயத்தைக் கலந்து சுத்தமான பாட்டில்களில் நிரப்பி மூடி வைக்கவும்.
பயன்கள்:
நரம்புத் தளர்ச்சி, உடல் வளர்ச்சியின்மை, மூளைச் சோர்வு, தூக்கமின்மை, அசதி, பலஹீனம், இரத்தக்குறைவு, ஜீவசக்தி குறைவு போன்றவை குணமாகும்.
அளவு :
5 முதல் 10 மில்லி தினம் 3 வேளைகள்.
தேவையான பொருட்கள்:
1. திரிகடுகு -16 கி.
2. வேலிப்பருத்தி - 1 கி.
3. வாத நாராயணன் - 50 மி.கி.
4. குப்பைமேனி - 50 மி.கி.
5. ஓமம் - 1 கி.
6. சர்க்கரை - 6 கி.
செய்முறை:
மேலே குறிப்பிட்ட மூலிகைகளைக் கழுவி சுத்தம் செய்து நீராவி கொள்கலன் (அ) மூடிய கலனில் கஷாயம் இறங்க பாத்திரத்தின் கீழே துளைகள் உள்ள தடுப்பினைப் பொருத்தி கஷாயத்தைத் தனியே வடிகட்டி எடுத்துக் கொள்ளவும். சர்க்கரையைப் பாகுபதத்தில் காய்ச்சி அத்துடன் தயாரித்து வைத்த கஷாயத்தைக் கலந்து சுத்தமாக பாட்டில்களில் நிரப்பி மூடி வைக்கவும்.
அளவு:
5 10 மி.லி. வீதம் தினமும் 3 வேளைகள் உணவிற்கு முன் அல்லது பின் உட்கொள்ளலாம்.
தீரும் வியாதிகள்:
மூட்டுவலி, மூட்டு வீக்கம், இடுப்புவலி, முதுகு வலி, உடல் வலி மற்றும் வாத நோய்கள்.
தேவையான பொருட்கள்:
1. தாமரைப்பூ - 1935 மி.கி.
2. ஆவாரம் பூ - 2690 மி.கி.
3. ரோஜாப்பூ - 2000 மி.கி.
4. முருங்கைப்பூ - 250 மி.கி.
5. மதனகாமப்பூ - 250 மி.கி.
6. குங்குமப்பூ - 5 மி.கி.
7. வல்லாரை - 250 மி.கி.
8. அருகன்புல் - 250 மி.கி.
9. மஞ்சள் கரிசாலை -250 மி.கி.
10. வெள்ளை கரிசாலை - 250 மி.கி.
11. அவுரி - 250 மி.கி.
12. சிவகரந்தை - 100 மி.கி.
13. இஞ்சி - 200 மி.கி.
14. ஏலம் - 25 மி.கி.
15. கொத்தமல்லி - 250 மி.கி.
16. கிராம்பு - 200 மி.கி.
17. ஜாதிக்காய் - 100 மி.கி.
18. துளசி - 250 மி.கி.
செய்முறை:
மேலே குறிப்பிட்ட மூலிகைகளை சேகரித்து நிழலில் உலர்த்தி பொடித்து நன்கு கலந்து டப்பாக்களில் அடைத்து பயன்படுத்தவும்.
அளவு:
காலை முதல் அரை டீஸ்பூன் 250 மி.லி. தண்ணீரில் கொதிக்க வைத்து தேவையான அளவு நாட்டு சர்க்கரை சேர்த்து தினம் 2 வேளை அருந்தவும்.
பயன்கள்:
காபி, டீ இவற்றிற்கு மாற்றாக உபயோகிக்கச் சிறந்தது. நரம்புகளுக்குப் புத்துணர்ச்சியூட்டி ஜீரணசக்தியைப் பெருக்கி இதயம், கல்லீரல், சிறுநீரகம், சீராக இயங்க வைக்கும். மற்றும் நோய்கள் வராமல் பாதுகாத்து உடலுக்கு வலிமையுண்டாக்கும்.