தேவையான பொருட்கள்:
செய்முறை:
அனைத்து பொருட்களையும் மிக்ஸியில்போட்டு அரை டம்ளர் தண்ணீர்விட்டு விழுதாக அரைக்கவும். இதனுடன் 4 ½ டம்ளர் தண்ணீர்சேர்த்து வடிகட்டவும். இப்போது கருவேப்பிலை கீர் ரெடி.
பலன்கள்:
இந்த கீர் இரத்தத்தை சுத்திகரித்து.புத்துணர்ச்சி அளிக்கிறது.முடி வளர்ச்சியை அதிகரிக்கிறது. முடி உதிர்வை தடுக்கிறது.இரும்பு,கால்சியம் வைட்டமின் ஏ,பி,பி12, சி ஆகிய சத்துக்கள்நிறைந்துள்ளன. இரத்த சிவப்பணுக்களை அதிகரிக்கும். சுவாசப் பிரச்சனை உள்ளவர்களுக்கு சிறந்த மருந்து. நகங்கள் அழகும்,வலிமையுடனும் இருக்கும். நினைவுத்திறன் அதிகரிக்கும்.
தேவையான பொருட்கள்:
செய்முறை:
அனைத்து பொருட்களையும் ½ டம்ளர்தண்ணீர் விட்டு அரைக்கவும். இதனுடன் 4 1/2 டம்ளர் தண்ணீர் விட்டு வடிகட்டவும். கேரட் கீர் தயார்.
பலன்கள்:
இது இரத்தத்தை சுத்தம்செய்து உடலுக்கு பளபளப்பை தருகிறது.கேரட்டில் வைட்டமின் பி8,எ,சி, கரோட்டிநாயுடுஉள்ளன. இது பார்வை திறனை அதிகரிக்கும். கொழுப்பை கரைத்து சிறுநீரக செயல்பாட்டை மேம்படுத்துகிறது. உமிழ்நீரை சீராக சுரக்க செய்து பற்சொத்தை வராமல் தடுக்கிறது.
தேவையான பொருட்கள்:
செய்முறை:
அனைத்தையும் அரை டம்ளர் தண்ணீர் விட்டு அரைக்கவும். இத்துடன் 4 1/2 டம்பளர் தண்ணீர் சேர்த்து வடிகட்டி குடிக்கவும்.
பலன்கள்:
இதுவயிற்றுப்புண் மற்றும் வாய்ப்புண்களை போக்கும் அருமருந்தாகும். வயிற்றுப் பூச்சிகளை அழிக்கிறது. பொட்டாசியம்,மக்னிசியம், நார்ச்சத்து ஆகியன நிறைவாக உள்ளது. ஜீரணத்தை எளிமையாக்குகிறது. தொண்டைக்கட்டை போக்கும் ஆற்றல் உள்ளது.
முக்கிய குறிப்பு:
இரவுநேரத்திலும்,அசைவ உணவுடனும் சேர்த்து உண்ணக்கூடாது
தேவையான பொருட்கள்:
செய்முறை:
துளசி,தேங்காய் துருவல்,நாட்டு சர்க்கரை, ஏலக்கத்தூள், ½ டம்ளர் தண்ணீர் விட்டு அரைக்கவும். இதனை 4 ½ டம்ளர் தண்ணீர் விட்டு வடிகட்டவும்.இந்த துளசி கீரினை அருந்துவதனால் சளி சம்பந்தமான அனைத்து பிரச்சனைகளும் சரி செய்கிறது.
பலன்கள்:
துளசியில் வைட்டமின் ஏ,பீட்டாகரோட்டின், பொட்டாசியம்,இரும்பு, தாமிரம்,மெக்னீசியம்,மாங்கனிஸ் ஆகிய சத்துக்கள் நிறைந்துள்ளன. தலைவலியை போக்க வல்லது. குளிர்ச்சியும் உற்சாகமும் தரும் பானம். உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும். மூளையை புத்துணர்வு பெறவும் செய்கிறது. இருமலை போக்கும் அருமருந்தாக துளசி கீர் உள்ளது.
தேவையான பொருட்கள்:
செய்முறை:
அனைத்து பொருட்களையும் 1/2 டம்ளர் தண்ணீர் விட்டு மிக்ஸியில் அரைக்கவும். அத்துடன் 4 1/2 டம்ளர் தண்ணீர் சேர்த்து வடிகட்டினால் தூதுவளைக் கீர் ரெடி.
பலன்கள்:
இது உடலுக்கு புத்துணர்வு அளிக்கும் மிகச்சிறந்த பானமாக செயல்படுகிறது. வைட்டமின் சி, இரும்புச்சத்து உள்ளிட்டதாது உப்புக்கள் உள்ளன. தூதுவளை சூடு தன்மை உள்ளதால் இதை கஷாயமாக செய்தும் பயன்படுத்தலாம். தொண்டையில் ஏற்படும் பிரச்சனைகள்,நோய்த்தொற்று ஆகியவற்றை குணப்படுத்தும். சளி, இருமல் மற்றும் சுவாசக் கோளாறுகளை சரி செய்யும்.பக்கவாதம்வராமல் பாதுகாக்கும்.
தேவையான பொருட்கள்:
செய்முறை:
அனைத்தையும்அரை டம்ளர் தண்ணீர் விட்டு மிக்ஸியில் அரைக்கவும்.இத்துடன் 4 1/2 டம்ளர் தண்ணீர் சேர்த்து வடிகட்டவும்.தேங்காய்பால் கீர் ரெடி.
பலன்கள்:
இதுஉடலுக்கு தேவையான வைட்டமின் சி,பி,இரும்பு,கால்சியம் ஆகிய உடலுக்கு தேவையானசத்துக்களை கொடுக்கிறது. உடலுக்கு புத்துணர்வை அளிக்கிறது. நல்ல கொழுப்பு நிறைவாகஇருப்பதால் தேவையற்ற கொழுப்பை அகற்றுகிறது. நாட்டு சர்க்கரையில் இரும்பு சத்து நிறைந்துள்ளது. இது உடலுக்கு உடனடி ஆற்றல் தருகிறது. புரதமும் நார் சத்தும் தேங்காயில் இருந்தால் செரிமானத்தை மேம்படுத்தி உடலை வலுவாக்குகிறது.
தேவையான பொருட்கள்:
செய்முறை:
பொருட்கள் அனைத்தையும் அரை டம்ளர் தண்ணீர்விட்டு அரைத்துக் கொள்ளவும். இதனுடன் 4 1/2 டம்ளர் தண்ணீர் சேர்த்து வடிகட்டி பருகவும்.
பலன்கள்:
இதயநோய்கள் வராமல் தடுக்கும்.இந்த கீரினை தொடர்ந்து பருகுவதானல்.உடலில் புது இரத்தம் உற்பத்தியாகிறது.இதனால் உடலுக்கு புத்துணர்வும் ஆரோக்கியமும் கிடைக்கிறது.நார்ச்சத்து,பொட்டாசியம்,வைட்டமின் சி ஆகியன நிறைந்தது.மூளை சுறுசுறுப்பாக்குகிறது.பீட்டா சயனின் உள்ளதால் கெட்ட கொழுப்பை கரைக்கிறது.
தேவையான பொருட்கள்:
செய்முறை:
அனைத்தையும்1/2 டம்ளர் தண்ணீர் விட்டு மிக்ஸியில் போட்டு அரைக்கவும். இதனுடன் 4 1/2 டம்ளர் தண்ணீர் சேர்த்து வடிகட்டவும். இப்பொழுது புதினா கீர் தயார்.
பலன்கள்:
இந்த கீர் வயிற்றுப் புண்களை ஆற்றி பசியை தூண்டுகிறது. மெண்தால் நிறைந்திருப்பதால் சுவாசம் மண்டல பிரச்சனைகளை சரி செய்கிறது. வாய் துர்நாற்றத்தை போக்கும். கால்சியம் நிறைந்து இருப்பதால் பற்களை வலுவாக்கும். நோய் எதிர்ப்பு சக்தி அளிக்கும் பானம் இது.
தேவையான பொருட்கள்:
செய்முறை தேவையான:
பொருட்கள்அனைத்தையும் ½ டம்லர் தண்ணீர் விட்டு மிக்சியில் அரைக்கவும். இந்த விழுதுடன் 4 ¼ டம்ளர் தண்ணீர்சேர்த்து வடி கட்டினால் முள்ளங்கி கீர் தயார்.
பலன்கள்:
இதனைபருகுவதனால் உடலில் உள்ள ஊளைச்சதை குறைகிறது.உடலில் உள்ள நச்சுக்களை நீக்கிதோலுக்கு பளபளப்பை தருகிறது.இரத்தத்தில் உள்ள பில்ரூபினை சீர்செய்வதால் மஞ்சள் காமாலையை குணப்படுத்தும். புற்றுநோய் செல்களை வரவிடாமல் செய்யும் ஆற்றல் கொண்டது. மூட்டு வலி வீக்கம் குறையும்.
தேவையான பொருட்கள்:
செய்முறை:
அனைத்துபொருட்களையும் அரை டம்ளர் தண்ணீர்விட்டு அரைத்து அத்துடன் 4 1/2 டம்ளர் தண்ணீர்சேர்த்து வடிகட்டவும். வல்லாரைக் கீர் தயார்.
பலன்கள்:
குழந்தைகளுக்கும் பெரியவர்களுக்கும் மிகவும் நல்லது. அனைவருக்கும் ஞாபக சக்தியை அதிகரிக்கும்.அருமருந்தாக செயல்படுகிறது. சளி,இருமல் போக்கவும். உடனே வலும் பெறச்செய்ததுடன் ஆஸ்துமாவை குணப்படுத்தவும் இந்த கீர் உதவுகிறது.நுரையீரலை வலுவாக்குவதுடன் ஆஸ்துமாவை விரைவில் குணப்படுத்துகிறது. ஆண்மை சக்தியை பெருக்கும் நுண்ணூட்ட சத்துக்கள் அடங்கியுள்ளன.
தேவையான பொருட்கள்:
செய்முறை:
வாழைத்தண்டைபொடியாக நறுக்கி அத்துடன் தேவையான பொருட்கள் அனைத்தையும் அரை டம்ளர் தண்ணீர்விட்டு அரைத்து. அத்துடன் 4 ½ டம்ளர் தண்ணீர் விட்டு வடிகட்டி குடிக்கவும்.
பலன்கள்:
இந்த கீர்ரானது சிறுநீரகக்கற்களை கரைக்கிறது.சர்க்கரைக்கு ஏற்ற மருந்தாக அமைகிறது.தேவையற்ற நீரை வெளியேற்றவும், சிறுநீரகத்தைபலப்படுத்தவும் உதவுகிறது. இதைத் தொடர்ந்து அருந்துதல் கூடாது 15 நாட்களுக்கு ஒரு முறை சாப்பிடுவதுசிறந்தது.
தேவையான பொருட்கள்:
செய்முறை:
வாழைப்பூவின்நரம்பை நீக்கிவிட்டு அத்துடன் தேங்காய் துருவல். நாட்டு சர்க்கரை ஏலக்காய் தூள் முதலியவற்றை ½ டம்ளர் தண்ணீர் சேர்த்து அரைக்கவும். இத்துடன் 4 ½ டம்ளர்தண்ணீர் சேர்த்து வடி கட்டவும். இந்தகீரை குடிப்பதனால் சிறுநீரகக் கற்கள் கரைகின்றன.
பலன்கள்:
கர்ப்பிணிகள்வாரம் இரு முறை சாப்பிட்டுவர குழந்தைகளுக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் கிடைக்கும். அல்சர் மலச்சிக்கல் பிரச்சனைகளை தீர்க்கும். இரும்புச்சத்து நிறைந்து உள்ளதால். இரத்த சோகையை குணப்படுத்தும்.
தேவையான பொருட்கள்:
செய்முறை:
வில்வஇலை,, தேங்காய் துருவல் நாட்டுச் சர்க்கரை, ஏலக்காய் தூள் இவற்றுடன் ½ டம்ளர் தண்ணீர் சேர்த்து மிக்ஸியில் அரைக்கவும். இதனுடன் ½ டம்ளர் தண்ணீர் சேர்த்து வடிகட்டினால். வில்வ இலை கீர் தயார். இது சர்க்கரை நோயாளிகளுக்கு சிறந்தது.
பலன்கள்:
மர்மிலோசின்,ஏஜிலைன் போன்ற அமினோ அமிலங்கள் அடங்கியுள்ளன. மாதவிடாய் சமயங்களில் பெண்களுக்கு வலியை போக்கும் நிவாரணமாகவும். ஊட்டச்சத்து பானமாகவும் திகழ்கிறது. வயிற்றுப்போக்கு ஆகியவற்றை சரி செய்யும். உடலில்தேங்கியுள்ள நச்சுக்களை வெளியேற்றும்.
தேவையான பொருட்கள்:
செய்முறை:
கீருக்குதேவையான பொருட்கள் அனைத்தையும் அரை டம்ளர் தண்ணீர்விட்டு அரைக்கவும். இதனுடன் 4 ¼ டம்ளர் தண்ணீர்சேர்த்து வடிகட்டவும்.
பலன்கள்:
இது உடல் எடையை குறைக்கும். இரத்தத்தில் உள்ள நச்சுக்களை நீக்கி சுத்திகரிக்கிறது.நரம்பு மண்டலத்தை சரி செய்யும்.புரதம்,வைட்டமின் சி, பாஸ்பரஸ்,கால்சியம் ஆகிய சத்துக்கள்இதில் உள்ளன.பித்தப்பை கற்களை அகற்றவும், குடல் புழுக்களை வெளியேற்றவும் ஊக்கியாக செயல் புரிகிறது.