Contact Us

பாசிப்பயறு

தேவையான பொருட்கள்:

  • பாசிப்பயறு- 50 கிராம் 
  • தண்ணீர் -2 டம்ளர் 

செய்முறை:

       முந்தைய நாள் காலையிலேயே பாசிப்பயிரினை கல் நீக்கி சுத்தம்செய்து ஊறவைக்கவும். ஊறியவுடன் மாலையில் தண்ணீரை வடித்து சுத்தமான காட்டன் துணியில் கட்டி வைக்க,அடுத்த நாள் காலையில் சிறுசிறு முளைவிட்டிருக்கும்.இதனை காலை டிபன் ஆகஇயற்கை உணவுடன் சேர்த்து சாப்பிட நல்ல ஊட்டம் தரும்.

பலன்கள்:

        இரும்பு சத்து நிறைந்தது என்பதால் ரத்த சோகை வருவதைதடுக்கும். அர்கினைன், மெத்தியேனைன்,வேரின் முதலான பல்வேறு கொழுப்பு அமிலங்கள் இதில் நிறைந்துள்ளன. வளரும் குழந்தைகளுக்கு அடிக்கடி தரும் உணவாக இதை அமைத்துக் கொள்ளலாம்.

கொண்டைக்கடலை

தேவையான பொருட்கள்:

  • கொண்டைக்கடலை- 50 கிராம்
  • தண்ணீர்தேவையான அளவு 

செய்முறை:

       கொண்டைக்கடலையை நீரில் ஊற வைக்கவும். ஒருநாள் முழுவதும் ஊறியவுடன் தண்ணீரை வடித்து விட்டு தூய பருத்தி துணியில் 20 மணி நேரம் கட்டி வைக்க வேண்டும்.20 மணி நேரம் கழித்துஎடுத்துப் பார்த்தால் கொண்டைக்கடலை முளைவிட்டிருக்கும்.இதனை உண்ணுவதால் உடலுக்கு நல்ல வலு ஏற்படும்.

பலன்கள்:

                   புரதச்சத்து,மாவுச்சத்து,நார்ச்சத்து,ஃபோலிக்அமிலம்,கால்சியம், பாஸ்பரஸ்,இரும்பு, சோடியம் போன்ற எண்ணற்ற சத்துக்கள் இருப்பதால். இரத்த நாளங்களில் கொழுப்பு படிவத்தை தடுக்கிறது.வயிற்றில் ஏற்படும் புற்றுநோயைத் தடுக்கும் ஆற்றல் உடையது.

சோளம்

தேவையான பொருட்கள்:

  • சோளம் -  50 g
  • தண்ணீர்தேவையான அளவு

செய்முறை:

         சோளத்தை சுத்தம் செய்து தேவையான தண்ணீர் சேர்த்து முதல் நாள் காலையிலேயே ஊறவைக்கவும். மாலையில் தண்ணீரை வடித்து விட்டு சுத்தமான பருத்தி துணியில் கட்டி வைக்க வேண்டும். அடுத்த நாள் அதை எடுத்துப்பார்த்தால் சிறு சிறு முளைவிட்டிருக்கும். இதனை உண்பதால் உடலுக்குவலு சேரும்.

பலன்கள்:

         உடல்பருமன் உடையவர்கள் எடையை குறைக்க இதை சாப்பிடலாம். இரும்பு,கால்சியம்,பாஸ்பரஸ்,மாவுச்சத்து,தயமின்மற்றும் பி காம்ப்ளக்ஸ் வைட்டமின்களும் அதிக அளவில் உள்ளன.வயிற்றுப்புண்,வாய் துர்நாற்றம் ஆகியன நீங்கும்.

கேழ்வரகு

தேவையான பொருட்கள்:

  • கேல்வரகு -50 கிராம்
  • தண்ணீர்தேவையான அளவு

செய்முறை:

       கேழ்வரகு கல் நீக்கி சுத்தம் செய்து தேவையான தண்ணீர் ஊற்றி ஊற வைக்கவும்.காலையில் ஊற வைத்தால்மாலையில் ஊறியவுடன் தண்ணீரை வடித்து விட்டு சுத்தமான காட்டன் துணியில் கட்டி வைக்கவும்.அடுத்த நாள் காலையில் அதில்சிறு சிறு முளைவிட்டிருக்கும். இதனை உணவாகஎடுத்துக் கொள்ளலாம்.

பலன்கள்:

      இதுஉடலை தேற்றும் தன்மை கொண்டது.கால்சியம் அதிக அளவு உள்ளதால்வளரும் குழந்தைகள்,விளையாட்டு வீரர்கள்,பெண்கள், கர்ப்பிணிகள் ஆகியோருக்கு ஏற்ற உணவு. உடல்வெப்பத்தை தணிக்கும் ஆற்றல் உடையது.குடல் புண்களை ஆற்றி நோய் நோய் எதிர்ப்புசக்தியை அதிகரிக்கச் செய்கிறது.