Contact Us

வாழைத்தண்டு ஜூஸ்

வாழைத்தண்டு ஜூஸ்:

தேவையான பொருட்கள்:
* வாழைத்தண்டு -100 கிராம்
* தண்ணீர் இரண்டு டம்ளர்

செய்முறை:
வாழைத்தண்டினை தோல் சீவி பொடியாக நறுக்கவும். அதனை மிக்ஸியில் போட்டு நைசாக அரைத்து இரண்டு டம்ளர் தண்ணீர் சேர்த்து வடி கட்டினால் வாழைத்தண்டு ஜூஸ் ரெடி.

பலன்கள்:
இது சிறுநீரக பித்தப்பை கற்கள் போக்கும். ரத்தத்தை சுத்தமாக்கும். வைட்டமின் ஏ, பி16, சி, ஃபோலேட்ஸ் நியாசின் ஆகிய சத்துக்கள் அடங்கியுள்ளன. இரத்த சோகை கரோனரி இதய நோய் நரம்பு மண்டல பிரச்சனை உள்ளவர்களுக்கு நிவாரணம் அளிக்கிறது. நார்ச்சத்து இருப்பதால் கொழுப்பின் அளவை குறைக்கும் எலும்புகளை வலிமையாக்குகிறது . பைட்டோ கெமிக்கல் சத்துக்கள் நிறைந்திருப்பதால் அல்சரை தடுக்கும் ஆற்றல் கொண்டது .

கற்றாழை ஜூஸ்

                      கற்றாழை ஜூஸ்

 தேவையான பொருட்கள்:

  • கற்றாழைச்சோறு- 100 கிராம்
  • பழையசாத தண்ணீர்- 2 டம்ளர்

செய்முறை:

      கற்றாழையை எடுத்து அதன்தோலை நீக்கிய பின் உள்ளிருக்கும் சோற்றினைநன்கு கழுவி மிக்ஸியில் போட்டு அரைத்து விடவும். இதனை இரண்டு டம்ளர்பழைய சாத தண்ணீரில் கலந்துகுடிக்கலாம்.

 பலன்கள்:

      இதுஉடலை குளிர்வித்து பெண்களுக்கு ஏற்படும் வெள்ளைப்படுதலை சரி செய்யும். பாக்டீரியாவைஎதிர்த்துப் போராடும் ஆற்றல் கொண்டது. அலர்ஜி,அல்சர் போன்ற உபாதைகளை விரைவில் போக்குகிறது.

 

கறிவேப்பிலை ஜூஸ்

                         கறிவேப்பிலை ஜூஸ் 

 தேவையான பொருள்கள் :

  • கருவேப்பிலை -50 கிராம் 
  • தண்ணீர்இரண்டு டம்ளர் 

 செய்முறை:

           கருவேப்பிலை இலையை அரை டம்ளர் தண்ணீர்விட்டு அழைக்கவும். அதில் 1 1/2 டம்ளர் தண்ணீர் கலந்து வடிகட்டினால் கருவேப்பிலை ஜூஸ் ரெடி.

 பலன்கள்:

         இது சர்க்கரை வியாதிக்குமருந்தாகும், ரத்தத்தை சுத்திகரிக்கவும் பயன்படும், முடி வளர்ச்சியை தூண்டிகருகருவென முடியை வளரச் செய்யும்.

        வைட்டமின் ஏ, கால்சியம், இரும்புச்சத்துஇருப்பதால் ரத்த சோகையை நீக்கும். கர்ப்பிணிகள், குழந்தைகள், பெரியவர்கள் என அனைவருக்கும் ஏற்ற சிறந்த பானம் இது.

வெண்பூசணி ஜூஸ்

 தேவையான பொருட்கள்:

  • வெண்பூசணி- 200 கிராம் 
  • தண்ணீர்-2 டம்ளர் 

 செய்முறை:

        வெண்பூசனையின் விதை மற்றும் தோல்பகுதியை நீக்கிவிட்டு அரை டம்ளர் தண்ணீர்விட்டு மை போல் அரைக்கவும். பின்னர் 1 1/2 டம்ளர் தண்ணீர் சேர்த்து வடி கட்டினால் இரண்டுடம்ளர் வெண் பூசணி ஜூஸ்ரெடி.

 பலன்கள்:

       உடல் எடையை கட்டுக்குள்கொண்டு வரும்.வயிற்றுப்புண் ஆறும்.அனைத்து உறுப்புகளுக்கும் புத்துணர்ச்சி தரும். நீர்ச்சத்து மிகுந்துள்ளதால் சிறுநீர் பெருக்கியாக செயல்பட்டு உடலில் உள்ள கழிவுகளை வெளியேற்றஉதவும். குடல் புழுக்களை வெளியேற்றவும் நரம்பு மண்டலத்தை சரி செய்யவும் உதவும். உடலில் பி. எச் நிலையைசமநிலைப்படுத்த உதவும்.

அருகம்புல் ஜூஸ்

 தேவையான பொருட்கள்:

  • அருகம்புல்- 50 கிராம்
  •  தண்ணீர் -2 டம்ளர் 

செய்முறை :

      அருகம்புல்லை கழுவி சுத்தம் செய்து நன்கு அரைத்து 2 டம்ளர் தண்ணீர்கலந்து வடிகட்டவும் .பின் அதனை வாயில்ஊற்றி உமிழ்நீர் கலந்து சுவைத்து பருகவும்.

பலன்கள்:

       சர்க்கரைநோயாளிகளுக்கு ஏற்ற அருமருந்தாகவும், இரத்தத்தை சுத்திகரிக்கவும் இது பயன்படுகிறது. சருமத்துக்குபொலிவும் உடலுக்கு ஆற்றலையும் புத்துணர்வையும் தருகிறது. இரும்பு ,தாமிரம் மற்றும் சோடியம் ஆகியன இதில் நிறைந்துள்ளன .இது தேவையற்ற கொழுப்புகளைகரைக்கும்.

வெண்டைக்காய் ஜூஸ்

  தேவையான பொருட்கள்:

  • வெண்டைக்காய் -4
  •  தண்ணீர் -2 டம்ளர் 

    செய்முறை:

       வெண்டைக்காயை தண்ணீரில் நன்கு கழுவி இரண்டு டம்ளர் தண்ணீரில் முந்தைய நாள் இரவே ஊறவைக்கவும். அடுத்த நாள் காலையில் அந்ததண்ணீரை வடித்து குடிக்கலாம். வெண்டக்காயையும் சாப்பிடலாம்.

      இது சர்க்கரைக்கு மிகசிறந்த மருந்தாக பயன்படுகிறது.

 பலன்கள் :

       ஃபோலிக்  அமிலம்நிறைவாக இருப்பதால் கர்ப்பிணிகள் சாப்பிடலாம் .மூளை செயல் திறனுக்குஉதவும். வைட்டமின் பி9 உள்ளது. 

      இரத்த சோகையை தடுக்கும். ஆஸ்துமாவின் வீரியத்தை குறிக்கும். நினைவாற்றல் மேம்படும்.

பாகற்காய் ஜூஸ்

தேவையான பொருட்கள்:

  • பாகற்காய் -50 கிராம் 
  • தண்ணீர் -2 டம்ளர் 

 செய்முறை:

       பாகற்காயை பொடியாக நறுக்கி மிக்ஸியில் போட்டு அரைக்கவும் .அதனுடன் இரண்டு டம்ளர் தண்ணீர் சேர்த்து வடிகட்டி ஜூஸ் ஆக அருந்தலாம்.

 பலன்கள் :

      இது சர்க்கரைநோய்க்கும், வயிற்றுப் புண்ணுக்கும், பூச்சிகளை அழிக்கவும் ஏற்ற அருமருந்தாகும். மாரடைப்பைதடுக்கும். பீட்டா கரோட்டின் இருப்பதால் பார்வை திறன் அதிகரிக்கும். உடலில் தேங்கும் யூரிக்அமிலம் உள்ளிட்ட கழிவுகளை வெளியேற்றும். கவுட் எனும் எழும்பு சம்பந்தமான நோயை குணப்படுத்தும்.

முருங்கைக் கீரை ஜூஸ்

தேவையானபொருட்கள்:

  • முருங்கைக்கீரை சிறிய தண்டுடன்- 200 கிராம்
  •  தண்ணீர் -4 டம்ளர்
  •  உப்பு- தேவையான அளவு 
  •  பூண்டு -2 பல்
  •  சின்ன வெங்காயம்- தேவையான அளவு 
  •  தக்காளி- 1
  •  சீரகம்- 1/4 டீஸ்பூன் 

 செய்முறை :

      முருங்கைக் கீரையுடன் சின்னவெங்காயத்தையும் பூண்டையும் பொடியாக தட்டிக் கொள்ளவும். தக்காளியையும் பொடியாக நறுக்கவும். இவற்றுடன் சீரகம் 4 டம்ளர் தண்ணீர் சேர்த்து முந்தைய நாள் இரவே தண்ணீர் 2 டம்ளர் ஆகும் வரை கொதிக்க விடவும். காலை எழுந்து தண்ணீரை வடித்து தேவையான உப்பு கலந்து குடிக்கவும். 

பலன்கள்:

       இது கர்ப்பிணிகளுக்கு ஏற்றசிறந்த டானிக்காக பயன்படுகிறது .அனைவருக்கும் ஏற்ற உடலை தேற்றும்இரும்புச்சத்து மிக்க ஜூஸாக இது அமைகிறது. எலும்புபற்கள் வலுபெறும். இரத்த சோகையை கட்டுப்படுத்தும். செரிமான கோளாறு, மந்தத்தன்மை ஆகியவற்றைப் போக்கும்.

மணத்தக்காளி ஜூஸ்

 தேவையான பொருட்கள்:

  • மணத்தக்காளி- 500 கிராம்( காய் இலை சேர்த்து )
  • தண்ணீர்-2 டம்ளர் 

 செய்முறை :

        மணத்தக்காளி காய் மற்றும் இலையை தண்ணீரில் அலசி நன்கு அரைக்கவும் .அதில் இரண்டு டம்ளர் தண்ணீர் விட்டு வடிகட்டவும். இப்பொழுது மணத்தக்காளி ஜூஸ் ரெடி.

 பலன்கள்:

       இது குடல் புண்ணை ஆற்றும் தன்மை கொண்டது. வாதம் ,பித்தம், கபம் சமநிலையாக்கும். வயிற்றுவலியை போக்கும். உடலில் சேர்ந்துள்ள நச்சுக்களை வெளியேற்றும் சிறந்த டீடாக்ஸ் பானம் இது.

துளசி ஜூஸ்

தேவையான பொருட்கள்:

  •  துளசிஇலை- 50 கிராம்
  •  தண்ணீர்- 2 டம்ளர் 

 செய்முறை:

        துளசிஇலையை சுத்தம் செய்து அரைத்துக் கொள்ளவும் இரண்டு டம்ளர் தண்ணீர் சேர்த்து வடிகட்டிப் பருகவும்.

 பலன்கள்:

       இது சளி இருமல் கபக்கட்டு போன்ற பிரச்சனைகளுக்கு நிரந்தர தீர்வாக அமைகிறது. வைட்டமின் ஏ,பீட்டாகரோட்டின்,பொட்டாசியம்,இரும்பு,தாமிரம்,மாங்கனீஸ்,மெக்னீசியம் ஆகிய சத்துக்கள் நிறைந்துள்ளன.தலைவலியைப் போக்கி உற்சாகத்தை அதிகரிக்கும்.

வெற்றிலை ஜூஸ்

தேவையான பொருட்கள் :

  •  வெற்றிலை -5 
  •  மிளகு -7
  •  தண்ணீர் -3 டம்ளர்

 செய்முறை :

       வெற்றிலையுடன் மிளகு சேர்த்து 1/2 டம்ளர் தண்ணீர்விட்டு அரைக்கவும். இதனுடன் 2 1/2 டம்ளர் தண்ணீர் சேர்த்து கொதிக்க வைத்து அது 2 டம்ளராகமாறியவுடன் வடிகட்டி வெதுவெதுப்பான சூட்டில் குடிக்கலாம்.

பலன்கள்:

        இதன் மூலம் நம்  உடலில்உள்ள அனைத்து விதமான கிருமிகளும் அழிகிறது .சளி கபத்தை போக்கும் அருமருந்தாகவும் செயல்பட்டு ஆரோக்கியத்தை தருகிறது. வெற்றிலையில் கால்சியம், இரும்புச்சத்து ஆகியன அடங்கியுள்ளன. சரும பிரச்சனைகளை குணமாக்கும்.வயிற்றுவலி செரிமான கோளாறுகளை குணப்படுத்தும்.

 

ஓரிதழ் தாமரை ஜூஸ்

 தேவையான பொருட்கள்:

  • ஓரிதழ்தாமரை செடியில் வேர் தவிர்த்து மற்றபாகங்கள் அனைத்தும் சேர்த்து- 100 கிராம்
  •  தண்ணீர் -2 டம்ளர்

 செய்முறை :

         ஓரிதழ் தாமரையின் வேர் தவிர்த்து மற்ற பாகங்களை கழுவிசுத்தம் செய்யவும் இதனை நன்கு மையஅரைத்து இரண்டு டம்ளர் தண்ணீர் கலந்து வடிகட்டி வாயில் ஊற்றி உமிழ் நீருடன் கலந்து குடிக்கவும்.

 பலன்கள்:

          இதுபெண்களின் வெள்ளைப்படுதல் பிரச்சனைக்கு ஏற்ற தீர்வாக அமைகிறது.ஆண்களுக்கு ஆண்மை சக்தியை அதிகரிக்கவும் பயன்படுகிறது. அமினோ அமிலம் பாலிஃபினால் கிளைக்கோஸைட்ஸ் ஆகியன அடங்கி இருக்கின்றன. ரத்த அழுத்தம் சீராகஇருக்க செய்கிறது.

வேப்பிலை ஜூஸ்

தேவையான பொருட்கள்: 

  • வேப்பிலை -10 கிராம் 
  • தண்ணீர்- 3 டம்ளர் 

செய்முறை:

        சுத்தம் செய்த வேப்பிலையை முந்தைய நாள் இரவே பாத்திரத்தில்போட்டு மூன்று டம்ளர் தண்ணீர் ஊற்றி அது இரண்டு டம்ளராகமாறும் வரை கொதிக்க விடவும்.இரவு முழுவதும் அப்படியே விட்டுவிட்டு காலையில் இந்த ஜூசை மட்டும்வடித்து குடிக்கவும்.

 பலன்கள்:

         இது உடலில் உள்ளநச்சுக்களை நீக்குகிறது. குழந்தைகளுக்கு வயிற்றுப் பூச்சிகளை அளிக்கும் எளிய மருந்தாகவும் இதுசெயல்படுகிறது.அம்மை நோயாளிகள் தொடர்ந்து அருந்தலாம். இதன் நுண்ணூட்டச் சத்துக்கள்நரம்புகளை வலுப்படுத்தும் .வாத பிரச்சனைகள் தீரும்.உட்புற வெளிப்புற புண்களை விரைவில் ஆற்றும்.

வாழைப்பூ ஜூஸ்

தேவையானபொருட்கள்: 

  • வாழைப்பூ- 50 கிராம் 
  • தண்ணீர் -2 டம்ளர் 

 செய்முறை :

        வாழைப்பூவினை நரம்பு நீக்கி சுத்தம் செய்து அரை டம்ளர் தண்ணீர்விட்டு அரைக்கவும். அதனுடன் 1 1/2 டம்ளர் தண்ணீர் கலந்து வடிகட்டினால் வாழைப்பூ ஜூஸ் ரெடி.

 பலன்கள்:

       சற்றே துவர்ப்பான இந்த வாழைப்பூ ஜூஸ்ஆனது சிறுநீரக கற்களை நீக்கி ஆரோக்கியமும், புத்துணர்ச்சியும் அளிக்கிறது. கொலஸ்ட்ராலின் அளவை கட்டுப்படுத்தும். பெண்களுக்கு ஏற்படும் மாதவிலக்கு பிரச்சனையை நல்ல தீர்வு தரும்.வயிற்றுப் புண்களை ஆற்றும் திறன் உள்ளது. உடலில் உள்ள கொழுப்பின் அளவைகட்டுப்படுத்தும்.

வெந்தைய ஜூஸ்

தேவையான பொருட்கள்:

  • வெந்தயக்கீரை -200 கிராம் 
  • தண்ணீர்- 2 டம்ளர் 

செய்முறை:

       வெந்தயக் கீரையை நன்குசுத்தம் செய்து அரை டம்ளர் தண்ணீர்விட்டு மிக்ஸியில் நன்கு அரைக்கவும். பின்னர் ஒன்றரை டம்ளர் தண்ணீர் சேர்த்து வடிகட்டி ஜூஸாக அருந்தலாம்.

பலன்கள்:

       இந்த ஜூஸ் உடலைகுளிர்வித்து வெப்பம் சார்ந்த பிரச்சனைகளை தீர்க்க உதவுகிறது. இரும்பு சத்து நிறைந்திருப்பதால் இரத்த சோகையை குணப்படுத்தும். பெண்களுக்கு ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன் சுரப்பை கட்டுக்குள் வைக்கும். தாய்ப்பால் அதிகரிக்கவும் உதவும். லேனோவைக்  கொழுப்புஅமிலங்கள் நிறைந்து இருப்பதால் சர்க்கரை நோயாளிகள் சாப்பிட ஏற்றது.

வில்வ இலை ஜூஸ்

தேவையான பொருட்கள்:

  •  வில்வஇலை- 25
  •  தண்ணீர் - 2 டம்ளர் 

செய்முறை :

       நன்கு கழுவி சுத்தம் செய்த வில்வ இலையை மைய அரைத்துக் கொள்ளவும். இரண்டு டம்ளர் தண்ணீர் கலந்து வடிகட்டி பருகவும். 

 பலன்கள்:

       இது ஆண்மை சக்தியைஅதிகரிக்கும் அருமருந்தாக செயல்படுகிறது .வைட்டமின்கள் தாது உப்புக்கள், அமினோஅமிலங்கள் நிறைந்தது என்பதால் உடலுக்கும், மனதிற்கும் புத்துணர்வு அளிக்கிறது, இதயத்துடிப்பை சீராக்குவதற்கும், காய்ச்சல், வயிற்றுப்புண் ஆகியவற்றை குணப்படுத்தவும் வல்லது.

சிறுபீளை ஜூஸ்

தேவையானபொருட்கள்:

  • வேருடன்கூடிய சிறுபீளை   செடி- 100 கிராம் 
  • தண்ணீர்- 3 டம்ளர் 

 செய்முறை:

        சிறுபீளை செடியை வேருடன் பிடுங்கி மண் போக அலசவேண்டும். முந்தைய நாள் இரவே வேருடன்கூடிய செடியில்  3 டம்ளர்தண்ணீர் விட்டு 2 டம்ளராக மாறும் வரை நன்கு கொதிக்கவிடவும் .காலையில் எழுந்து இந்த நீரை மட்டும்வடிகட்டி குடிக்கவும்.

பலன்கள்:

       இது சிறுநீர் மற்றும் பித்தப்பை கற்களை போக்கி உடலுக்கு ஆரோக்கியமும் புத்துணர்ச்சியும் தருகிறது. ஆன்டி ஆக்ஸிடன்ட்கள்  நிறைந்தது என்பதால் நோய் எதிர்ப்பை அதிகரிக்கும். வயிற்றுப்புண், சிறுநீர் பாதை புண், எரிச்சல் ஆகியன குணமாகும்.

 

அகத்தி ஜூஸ்

தேவையான பொருட்கள்:

  • தண்டுநீக்கி சுத்தம் செய்த அகத்தி இலை- 200 கிராம் 
  • தண்ணீர்- 4 டம்ளர்
  •  உப்பு தேவையான அளவு
  •  பூண்டு -2 பல் 
  •  தக்காளி -1
  •  சீரகம் -1/4 டீஸ்பூன்
  •  சின்ன வெங்காயம்- 4

 செய்முறை:

        சின்ன வெங்காயத்தையும் பூண்டையும் பொடியாக தட்டிக் கொள்ளவும். தக்காளியையும் பொடியாக நறுக்கவும் .தட்டிய சின்ன வெங்காயம் பூண்டு நறுக்கிய தக்காளி அகத்தி இலை சீரகம் இவை அனைத்தும் 4 டம்ளர் தண்ணீர் சேர்த்து முந்தைய நாள் இரவே கொதிக்கவிடவும். தண்ணீர் இரண்டு டம்ளராக சுண்டியவுடன் அடுப்பை அணைத்துவிட்டு இரவு முழுவதும் ஊறவிடவும். மறுநாள் எழுந்து இந்த தண்ணீரை வடித்துதேவையான அளவு உப்பு கலந்துபருகவும்.

 பலன்கள்:

       இந்த ஜூஸ் வயிற்றில் உள்ள புண்களை நீக்கி உடலுக்கு ஆரோக்கியத்தையும் சுறுசுறுப்பையும் தருகிறது.வைட்டமின் ஏ. சி, கால்சியம்,தயமின்,ரிபோஃப்ளேவின் ஆகியவை இதில் உள்ளன.உடலில் உள்ள அதிக பித்தத்தைதணிக்கும்.

 

நெருஞ்சி முள் ஜூஸ்

தேவையானபொருட்கள்:

  • நெருஞ்சிமுள் செடி வேருடன் -100 கிராம்
  •  சீரகம் -1/2 டீஸ்பூன்
  •  தண்ணீர் 3 டம்ளர் 

 செய்முறை:

        நெருஞ்சி முள் செடியை வேருடன்தண்ணீரில் சுத்தம் செய்யவும். அச்செடியையும் சீரகத்தினையும் 3 டம்ளர் தண்ணீர் விட்டு முந்தைய நாள் இரவே கொதிக்கவிடவும். தண்ணீர் இரண்டு டம்ளராக சுண்டியவுடன் அடுப்பை அணைத்துவிட்டு மறுநாள் காலை அந்த தண்ணீரைவடித்துக் குடிக்கவும்.

     இது பித்தப்பை மற்றும்சிறுநீரக கற்களை போக்கும்.

 பலன்கள்:

     இரத்தப்போக்கை நிறுத்தும். கண் எரிச்சல், கண்ணில்நீர் வடிதல், சிறுநீர் தாரை எரிச்சல் ஆகியவைகுணமாகும்.

வேர்க்கடலை

தேவையான பொருட்கள்:

  • வேர்கடலை- 50 கிராம்
  •  தண்ணீர்-2 டம்ளர்

செய்முறை:

       முந்தையநாள் காலையிலேயே வேர்க்கடலையை சுத்தம் செய்து இரண்டு டம்ளர் தண்ணீர் சேர்த்து ஊற விடவும். மாலையில்தண்ணீரை வடித்து சுத்தமான பருத்தி துணியில் கட்டி வைக்கவும். 16 மணி நேரம் கழித்துசிறுசிறு முளைக்கள் விட்டிருக்கும். இதனை காலை இயற்கைஉணவுடன் சேர்த்து உண்ணலாம்.

 பலன்கள்:

       வேர்கடலையில் பொட்டாசியம், நார்ச்சத்து அதிக அளவில் உள்ளன.நல்ல கொழுப்பு என்னும் HDL நிறைவாக உள்ளதால் உடல் ஊட்டம் பெரும். புரத சத்து குறைபாடு உள்ளவர்களுக்கு விரைவில் நிவாரணம் பெற உதவுகிறது.

கம்பு

தேவையான பொருட்கள்:

  •  கம்பு -50 கிராம்
  •  தண்ணீர் -2 டம்ளர்

செய்முறை:

       முந்தையநாள் காலையிலேயே கம்பினை கல் நீக்கி சுத்தம்செய்து ஊற வைக்கவும்.மாலையில் ஊறியவுடன் தண்ணீரைசுத்தமாக வடித்து விட்டு சுத்தமான பருத்தி துணியில் கட்டிவைத்தால்.அடுத்த நாள் முளைவிட்டிருக்கும்.இதனை உண்பதால் உடல்இரும்பு போல் வலுவுடன் இருக்கும்.குழந்தைகளுக்கு உடலைத் தேற்றும் மருந்தாகவும் பயன்படுகிறது.

 பயன்கள்:

       கம்புஉடலைக் குழுமையாக்கும். அஜீரணக் கோளாறு இருப்பவர்கள் கம்பு கஞ்சி குடித்து வரலாம். கம்பு பசியை தூண்டும். இரும்புச்சத்து நிறைந்திருப்பதால் ரத்த சோகையைக் குணப்படுத்தும் ஆற்றல் கொண்டது.

எள்ளு

தேவையான பொருட்கள்:

  •  எள்ளு- 50 கிராம்
  •  தண்ணீர் ஊற வைக்க தேவையானஅளவு

செய்முறை:

        எள்ளினைசுத்தம் செய்து கழுவி காலையிலேயே ஊற வைக்கவும். நன்குசுத்தமான பருத்தி துணியில் கட்டி வைக்க அடுத்த நாள் காலையில் முளைவிட்டிருக்கும்.இதனை காலை இயற்கை உணவாகஉண்ணலாம்.

பலன்கள்:

        இதுபெண்களின் கருப்பையில் தங்கும் அழுக்குகளை நீக்கி நல்ல ஆரோக்கியத்தை தருகிறது.பைட்டோஸ்டீரால்   எனும் அறிய சத்து இதில் இருக்கிறது.இது கெட்ட கொலஸ்ட்ராலைக் குறைக்கும்.உடல் எடையை கூட்ட விரும்புவோருக்கு ஏற்ற உணவு.மெக்னீசியம்  அதிகஅளவில் இருப்பதால் சர்க்கரை,இரத்த அழுத்தம் போன்றவை உள்ளவர்களுக்கு ஏற்ற உணவு.

கருப்பு உளுந்து

 தேவையான பொருட்கள்:

  • கருப்புஉளுந்து-50 கிராம் 
  • தண்ணீர்தேவையான அளவு 

செய்முறை:

        கருப்பு உளுந்தினை சுத்தம் செய்து காலையிலேயே தண்ணீரில் ஊற விடவும்.நன்கு ஊறியதும்மாலையில் தண்ணீரை வடித்து விட்டு ஒரு பருத்தி காட்டன்துணியில் கட்டி வைத்தால் அடுத்த நாள் காலையில் சிறுசிறு முளைகள் விட்டிருக்கும். இதனை காலை உணவாகஉட்கொள்ளலாம்.

பலன்கள்:

       இது எலும்புகளுக்கு பலம்தரும். கால்சியம் சத்து நிறைந்தது. உடல் எடையை கூட்டவிரும்புவோருக்கு ஏற்ற உணவு.உடனடி ஆற்றல்மற்றும் ஊட்டச்சத்துக்கள் நிறைந்தது. பெண்களின் மாதவிடாய் பிரச்சனையை தடுக்கிறது. மலச்சிக்கல், வயிறு உப்பசம் போன்றவை சரி செய்யவும் இது உதவுகிறது.

கொள்ளு

தேவையான பொருட்கள்:

  • கொள்ளு-50 கிராம்
  • தண்ணீர்தேவையான அளவு 

செய்முறை:

        கொள்ளை கல் நீக்கி சுத்தம் செய்து முதல் நாள் காலையிலேயே தண்ணீரில் ஊற வைக்கவும். மாலையில் தண்ணீரை வடித்து பருத்தி துணியில் கட்டி வைத்தால் அடுத்த நாள் காலையில் முளைத்திருக்கும்.இதனை காலை இயற்கை உணவோடுஉட்கொள்ளலாம்.

பலன்கள்:

      இதுஉடலில் தேங்கியிருக்கும் தேவை இல்லா கொழுப்புகளைகரைத்து சரியான தோற்றத்தை தருகிறது.குறைந்த அளவு மாவுச்சத்தும் அதிகஅளவு புரத சத்தும் கொண்டது.நார்ச்சத்து மிகுதியாக இருப்பதால் மலச்சிக்கலை நீக்கும்.இருமல்,சளி ஆகியவை விரைவில் குணமாகும்.

கொத்தமல்லிகீரை

தேவையான பொருட்கள்:

  • கொத்தமல்லி- 40 கிராம் 
  • தேங்காய்துருவல்- 50 கிராம்
  • நாட்டுசர்க்கரை தேவைக்கேற்ப 
  • ஏலக்காய்தூள் ¼ டீஸ்பூன்
  • தண்ணீர் 5 டம்ளர் 

செய்முறை:

         கொத்தமல்லிதலை, தேங்காய் துருவல், நாட்டு சர்க்கரை,ஏலக்காய் தூள் ஆகியவற்றை அரை டம்ளர் தண்ணீர் விட்டு மிக்சியில் போட்டு அரைக்கவும்.இதனுடன் 4 ½  டம்ளர்தண்ணீர் சேர்த்து வழிகாட்டவும். இது மிகவும் சத்தானகொத்தமல்லி கீர் ஆகும்.

பலன்கள்:

       இரத்தசோகை குணப்படுத்தும் தன்மை உடையது.மகனீசியம், இரும்பு, வைட்டமின் சி, கே ஆகியனநிறைந்திருக்கிறது. ஜீரண மண்டலத்தை வலுப்படுத்தும்.கண் பார்வை திறனை மேம்படுத்தும் ஆற்றல் உள்ளது. பித்தவாத நோயை குணப்படுத்தும். ஊளைச்சதையை குறைக்கும்.