பஞ்ச" என்றால் 'ஐந்து" என்று பொருள். 'பட்சி" என்றால் 'பறவை" என்று பொருள். 'சாஸ்திரம்" என்றால் 'எழுதப்பட்டவைகளை செயல்படுத்தி பார்த்தால் உண்மை விளங்கும்" என்று பொருள். பஞ்சபட்சி சாஸ்திரம் என்பது மனிதனின் குணநலன்களை ஐந்து பறவைகளின் குணநலன்களோடு ஒப்பிட்டு பார்க்கும் வழக்கம் உடையது. 27 நட்சத்திரங்களும் ஐந்து பறவைகளுக்குள் அடக்கப்படுகின்றது. இம்முறையில் ஒருவர் பிறக்கும் நட்சத்திரத்தின் அடிப்படையில் அவருக்கான பறவை தீர்மானிக்கப்படுகிறது. பஞ்சபட்சி சாஸ்திரம் என்பது குருவழியாக சீடர்கள் அறிந்து கொள்ளும் வகையில் கூறப்பட்டது ஆகும். பஞ்சபட்சி சாஸ்திர குறியீடு ஐந்து பறவைகளை (வல்லூறு, ஆந்தை, காகம், கோழி, மயில்) வைத்து உருவாக்கப்பட்டது.