செவிவழி தொடு சிகிச்சை ( Anatomic Therapy)
➢ எந்த ஒரு மருந்து, மாத்திரை இல்லாமல் நமது நோய்களை நாமே குணப்படுத்தும் முறை.
➢ உணவு, குடிநீர், மூச்சுகாற்று, தூக்கம், உழைப்பு மற்றும் மனதை ஒழுங்குபடுத்தினால் நம் உடலே அனைத்து நோய்களையும் தானே குணப்படுத்துகிறது.
➢ மருந்து, மாத்திரையை 6 மாதத்தில் நிறுத்த முடியும்.
➢ இதை சுருக்கமாக கூற 1 மணிநேரம் முதல் விரிவாக 10 மணிநேரம் வரை தேவைப்படும்.
 
சுவை மருத்துவம் ( Taste Therapy)
➢ உப்பு, புளி, காரம், இனிப்பு, கசப்பு மற்றும் துவர்ப்பு என ஆறு சுவைகளை எப்படி எவ்வளவு சாப்பிட வேண்டும் என்ற வித்தையை கற்றுக்கொண்டு சுவைகள் மூலமாக நம் வியாதிகளை குணப்படுத்தமுடியும். இதற்கு பெயர் சுவை மருத்துவம்.
➢ இதைப்பற்றி பேச மொத்தமாக 1 மணிநேரம் தேவைப்படும்.
 
மனதின் மணம் (Smell of the Mind)
➢ மனதை நிம்மதியாக,அமைதியாக,சந்தோஷமாக வைத்துகொள்வது எப்படி?
➢ புத்திக்கும் மனதிற்கும் என்ன வித்தியாசம்?
➢ குழப்பம், டென்ஷன், பயம், கவலை, கோபம் மனதில் எந்த இடத்திலிருந்து வருகிறது? அதை முற்றிலும் அகற்றுவது எப்படி?
➢ கான்சியஸ் மைண்டு, சப்கான்சியஸ் மைண்டு மற்றும் சூப்பர் கான்சியஸ் மைண்டு என்றல் என்ன? அதை கட்டுபடுத்தும் புதிய வழிமுறைகள் என்ன?
➢ இதை சுருக்கமாக கூற 1 மணி நேரம் முதல் விரிவாக 6 மணி நேரம் வரை தேவைப்படும்.
 
முக்திக்கு நான்கு வழிகள் (Enlightment)
➢ முக்தி அடைய வேண்டுமென்றால் வாழ்கையில் 100 மார்க் எடுக்க வேண்டும்.
➢ கர்ம யோகம், கிரியா யோகம், பக்தி யோகம் மற்றும் ஞான யோகம் ஆகிய நான்கு யோகத்திற்கு தலா 25 மார்க். ஆக மொத்தம் 100 மார்க்
➢ இந்த நான்கு யோகத்தைக் கற்றுக் கொண்டு 100 மார்க் எடுத்து முக்தி அடைய கற்றுகொடுக்க சுருக்கமாக 1 மணிநேரம் முதல் விரிவாக 2 மணிநேரம் தேவைப்படும்.
 
காதல் கலை( The Art of Loving)
➢ கணவன்,மனைவி உறவுகளில் அன்பாக, பாசமாக, நிம்மதியாக, அன்னியோன்யமாக வாழ வழிகள் கற்றுகொடுக்கப்படும்.
➢ உலகில் உள்ள எல்லா நாட்டு கணவன், மனைவிக்கும் மொத்தம் 50 விசயங்களில் மட்டுமே சண்டைகள் வரும்.
➢ இந்த 50 முரண்பட்ட கருத்துக்களை முதலிலேயே தெரிந்துகொண்டால் சண்டை வராது. அல்லது வந்த சண்டையை சுலபமாக சமாதனப்படுத் தமுடியும்.
➢ இதைக்கற்றுக்கொடுக்க சுருக்கமாக 1 மணிநேரம் அல்லது விரிவாக 2 மணிநேரம் தேவைப்படும்.
 
எண்ணம்போல் வாழ்க்கை ( Thoughts Moulds Life)
➢ நாம் எதை நினைத்தாலும் அது நடக்கும் ஆனால் எப்படி நினைக்கவேண்டும்?
➢ தட்டுங்கள் திறக்கப்படும்- எதை தட்டுவது? எப்படி தட்டுவது?
➢ கேளுங்கள் தரப்படும்-யாரைக் கேட்பது? எப்படி கேட்பது?
➢ நமது வாழ்கையில் நடத்த.நடக்கும்,நடக்கபோகும்,எல்லா நல்ல மற்றும் கெட்ட காரியத்திற்கும் நாம் தான் பொறுப்பு ஏன்? அதை ஒழுங்குபடுத்துவது எப்படி?
➢ இதைப்பற்றி பேச சுருக்கமாக ½ மணிநேரமும் விரிவாக 1 மணிநேரமும் தேவைப்படும் மேலும், The Sectet ரகசியம் என்ற தமிழ் படம் 1 ½ மணிநேரம் உள்ளது தேவைப்பட்டால் ப்ரொஜக்டரில் காண்பிக்கலாம்.
 
கேள்விகளாக வாழுங்கள்
➢ நம் வாழ்கையில் உள்ள குடும்ப பிரச்சனைகள்,வியாபார சிக்கல்கள், உறவில்விரிசல், கடன்தொல்லை, நோய், வருத்தம், கவலை,கோபம், வழக்கு மற்றும் ஏமாற்றம் ஆகிய அனைத்து சிக்கல்களையும் தீர்க்க அற்புதமான அருமையான சுலபமாக செலவே இல்லாத முறைதான் கேள்விகளாக வாழ்வது.
➢ இதை பற்றி பேச மொத்தம் ½ மணி நேரம் தேவைப்படும்.
 
முத்ரா தெரப்பி ( Mudhra Therapy)
➢ கை விரல்களில் ஒவ்வொரு விரலும் ஒரு பஞ்ச பூதம் சம்பந்தப்பட்டது. விரல்களை பல கோணங்களில் பிடிப்பதன் மூலம் நமது உடலில் பஞ்ச பூதங்களை மாற்றியமைத்து நோய்களை நீக்கி ஆரோக்கியமாக வாழமுடியும்.
➢ இதை கற்றுக் கொடுக்க மொத்தமாக ½ மணி நேரம் தேவை.
 
21 வர்மா புள்ளிகள் ( Varma Therapy)
➢ உடலில் பல நூறு வர்மா புள்ளிகள் உள்ளது. அதிலிருந்து முக்கியமானது மோட்டார் புள்ளி எனப்படும். இது மண்டலங்களை வேலை செய்ய வைக்கும், முக்கியமான 21 புள்ளிகளை தினமும் இயக்குவதன் மூலம் அனைத்து நோய்களையும் குணப்படுத்தி ஆரோக்கியமாக வாழலாம்.
➢ இதை கற்றுக்கொள்ள மொத்தம் ½ மணி நேரம் தேவை.
 
இயற்கை வைத்தியம் ( Nature Therapy)
➢ சளி, தும்மல், இருமல், மூக்கு ஒழுகுதல், வாந்தி, வயிற்றுபோக்கு, காய்ச்சல், தோல் நோய்கள் மற்றும் கேன்சர் எயிட்ஸ் போன்ற தொல்லைகள் ஏன் வருகிறது? அது வரும்போது மருந்தில்லாமல் மாத்திரையில்லாமல் எப்படி இயற்கை முறையில் குணப்படுத்துவது என்ற வித்தைக்கு பெயர் இயற்கை வைத்தியம்.
➢ இந்த இயற்கை வைத்தியத்தில் மூக்கு கழுவுதல், கண் கழுவுதல், இனிமா எடுத்தல், வாயில் எண்ணெய் கொப்பளித்தல், சூரியனை பார்த்தல், வாழை இலை குளியல், மண் குளியல் மற்றும் பேதி சாப்பிடும் முறை ஆகியவை கற்றுகொடுக்கப்படும்.
➢ இதை கற்றுகொடுக்க மொத்தமாக 3 மணிநேரம் தேவைப்படும்.
 
விபாசன தியானம் (Vipassana Meditation)
➢ நம் ஆழ்மனதில் உள்ள கோபம், பயம், தாழ்வு மனப்பான்மை, குற்ற உணர்ச்சி, கவலை, ஏமாற்றம், மற்றும்வருத்தம் ஆகியவற்றை எந்த ஒரு பயிற்சியும் இல்லாமல் பதே நாட்களில் நம் ஆழ்மனதிலிருந்து வெளியேற்றி நம் மனதை காலியாக வைத்து நிம்மதியாக வாழ ஒரு எளிய முறை தியானம் தான் விபாசனா தியானம்.
➢ இதைப்பற்றி பேச மொத்தமாக 1 மணி நேரம் தேவை.
 
வாசி யோகம் ( Vasi Yogam)
➢ உலகில் உள்ள எல்லா மூச்சுபயிற்சிகளைவிடவும் வசியோகமே சிறந்தது.
➢ புகழ்பெற்ற அனைத்து சித்தர்களும்,முனிவர்களும்,ஞானிகளும் இந்த வாசி யோகத்தை கற்று பயிற்சி செய்து பல வருடங்கள் ஆரோக்கியமாக வாழ்ந்து வந்தார்கள்.
➢ பல வருடங்களுக்கு முன் இந்த கலையை கற்றுக்கொள்ள 12 வருடங்கள் குருவிற்கு பணிவிடை செய்யவேண்டி இருந்தது.
➢ இந்த கலையை நான் 10 வருடங்களாக பயிற்சி செய்து வருகிறேன் ஆனால் இதை மற்றவர்களுக்கு கற்றுகொடுக்கப்டும் அளவிற்கு நான் இன்னும் தேர்ச்சி பெறவில்லை.
➢ ஆனால் வாசியோகத்தின் பயன்,இதை எந்த நாட்டில் யாரிடம் முறையாக கற்றுகொள்ளலாம் என்பதை விளக்கமாக புரியவைக்க முடியும்.
➢ இதைப்பற்றி பேச மொத்தமாக ½ மணிநேரம் தேவை.
 
பத்து மூட்டு உடற்பயிற்சி ( 10 Joint Exercise)
➢ மூட்டுவலி, முழங்கால் வலி, இடுப்பு வலி, முதுகு வலி, கழுத்து வலி, கெண்டைக்கால் வலி, தோள்வலி, மணிக்கட்டு வலி, மற்றும் சர்வைக்கள் பிரச்சனை என அனைத்திற்கும் காரணம் என்ன தெரியுமா? அந்த இடங்களுக்கு வேலை கொடுக்காததுதான்
➢ மேலே கூறப்பட்டுள்ள எந்த வியாதிக்கும் மருந்து, மாத்திரை ஒன்றும் கிடையாது. உடற்பயிற்சிதான் மருந்து.
➢ நம் உடலில் உள்ள முக்கியமான 10 இணைப்புகளுக்கும் தினமும் 10 நிமிடங்கள் பயிற்சி கொடுத்தால் வாழ்நாள் முழுவதும் ஆரோக்கியமாக வாழலாம்.
➢ இதைக் கற்றுக் கொடுக்க ½ மணி நேரம் தேவை.
➢ மேலும் போதுமான இடவசதி வேண்டும்.
 
சூரிய நமஸ்காரம் ( Suriya Namaskaram)
➢ சூரிய நமஸ்காரத்தில் மொத்தம் 24 நிலைகள் உள்ளது.
➢ சூரிய நமஸ்காரத்தை தினமும் 13 சுற்று செய்து வந்தால் ஆரோக்கியமாக வாழலாம்.
➢ இதை கற்றுகொடுக்க ½ மணிநேரம் தேவை.
➢ மேலும் போதுமான இடவசதி வேண்டும்.
 
5 வகை ஆசனங்கள் ( Savasanam)
➢ சவாசனம் என்பது சவத்தைபோல் உடலில் எந்த அசைவும் இல்லாமல் 20 நிமிடங்கள் தரையில் படுத்துக் கொண்டு உடலில் உள்ள அனைத்து உறுப்புகளையும் நினைத்து ஓய்வு எடுக்க அனுமதிக்கும் அருமையான பயிற்சி.
➢ இந்த பயிற்சி செய்தால் உடல், மனம், மற்றும் புத்தி ஆகிய மூன்றும் அமைதியடையும்.
➢ இதற்கு படுக்கும் அளவிற்கு போதுமான இட வசதி வேண்டும்.
➢ இதை செய்வதற்கு முன்னால் குறைந்தது ½ மணி நேரமாவது உடலை சூடாக்கும் பயிற்சி செய்திருக்க வேண்டும்.
➢ இந்த பயிற்சி செய்ய 20 நிமிடங்கள் தேவை.
 
மூச்சுப்பயிற்சி ( Breathing Exercise)
➢ வயிற்று மூச்சு, நெஞ்சு மூச்சு, மற்றும் மேல் மூச்சு ஆகிய மூன்று பயிற்சிகள் கற்றுத் தரப்படும்.
➢ பஸ்திரிகா, கபாலபதி, பிராணாயாமம், சுதர்சன் கிரியா, மற்றும் அக்னிசார் ஆகிய பயிற்சிகள் செய்யும் போது உடலில் உஷ்ணம் அதிகரிக்கும்.
➢ ஆனால் நாடி சுத்தி என்ற பயிற்சி மட்டுமே அதிக வெப்பமுள்ள உடலை குளிர்ச்சியாக்கும் மற்றும் அதிக குளிச்சியான உடலை உஷ்ணம் ஆக்கும்.
➢ வயிற்று மூச்சு, நெஞ்சு மூச்சு, மேல் மூச்சு, மற்றும் நாடி சுத்தி, என்ற நான்கு மூச்சுப்பயிற்சிகள் கற்றுக் கொடுக்க ½ மணி நேரம் தேவை,
➢ இதைக் கற்றுக் கொடுக்க அமருவதற்கு இடம் இருந்தால் போதும்.
 
கவச தியானம் ( Kavasa Dhyanam)
➢ கவச தியானம் செய்தால் எதிர்மறை எண்ணங்களை (Negative Thoughts) நேர்மறை எண்ணங்களாக ( Positive Thoughts) மாற்ற முடியும்.
➢ கவச தியானம் செய்தால் மற்றவர்களின் எண்ணங்கள் மற்றும் சிந்தனைகள் நம்மை நெருங்காது.
➢ கவச தியானம் செய்தால் பில்லி, சூன்யம், ஏவல், செய்வினை, போன்ற எந்த தீய சக்திகளும், நம்மை நெருங்காது.
➢ இதை கற்றுக் கொடுக்க ½ மணி நேரம் தேவை.
➢ இதற்கு அமர்வதற்கு இடமிருந்தால் போதும்.
 
சக்ரா தியானம் ( Chakra Dhyanam)
➢ நம் உடலில் மொத்தம் 10 சக்கரங்கள் உள்ளது.
1.மூலாதாரம் - மண்
2. சுவாதிஸ்டானம் - நீர்
3. மணிப்பூரகம் – நெருப்பு
4. அனாகதம் – காற்று
5. விசுத்தி – ஆகாயம்
6. புருவமத்தி – கிரியாசக்தி
7. உச்சந்தலை – கர்ம சக்தி
8. ஞான சக்ரம்
9. பக்தி சக்ரம்
10. தியான சக்கரம் என 10 சக்கரங்கள் உள்ளது.
➢ தினமும் இந்த 10 சக்கரத்தை இயக்கினால் பஞ்ச பூதங்களும், 4 யோகங்களும், தியானமும் கைகூடும்.
➢ அனைத்து சுரப்பிக்களும் ஒழுங்காக வேலை செய்து ஆரோக்கியமாக வாழலாம்.
➢ இதை கற்றுக்கொடுக்க ½ மணி நேரம் தேவைப்படும்.
➢ இதற்கு அமருவதற்கு இடமிருந்தால் போதும்.
 
குரு தர்ஷன் தியானம் ( Guru Dharsan Dhyanam)
➢ குரு தர்ஷன் தியானம் என்பது ½ மணி நேரம் கண்களை மூடி,அமைதியாக அமர்ந்து நான் பேசுவதை மட்டுமே காதில் கேட்டு கற்பனை செய்ய வேண்டும்.
➢ இந்த தியானத்தில் வானத்தில் பறக்கும் அனுபவம் கிடைக்கும்.
➢ மனதை அமைதிப்படுத்தும் அற்புத தியானம் இது.
➢ இதற்கு அமர இடமிருந்தால் போதும்.
➢ இதை கற்றுக்கொள்ள ½ மணி நேரம் தேவை.
 
யோக நித்ரா (Nithra)
➢ யோக நித்ரா பயிற்சி செய்ய படுக்க இடம் தேவை.
➢ ½ மணி நேரம் படுத்த நிலையில் கண்களை மூடி தூங்காமல் விழித்திருக்க வேண்டும். உடலில் ½ மணி நேரத்திற்கு எந்த அசைவும் இருக்கக் கூடாது .
➢ படுத்த நிலையில் கண்களை மூடி ½ மணி நேரம் நான் பேசுவதை மட்டுமே கேட்க வேண்டும்.
➢ இந்த பயிற்சியில் எப்பேற்பட்டவரையும் 20 நிமிடங்களில் ஆழ்மனதிற்குள் அழைத்துச்செல்லமுடியும்.
➢ யோக நித்ரா – நமதுவாழ்க்கை லட்சியங்களை ஆழ்மனதில் பதிவு செய்து விரைவில் சாதிப்பதருக்கு சிறந்த பயிற்சி.
➢ இதற்கு ½ மணி நேரம் தேவை.
➢ யோகா நித்ரா செய்வதற்கு முன்னால் குறைந்தது ½ மணி நேரம் உடலை சூடாக்கும் ஏதாவது ஒரு பயிற்சி செய்திருக்கவேண்டும்.
 
அக ஒளி தியானம் (Aga Oli Dhyanam)
➢ அக ஒளி தியானம் கற்றுக்கொள்ள 30 நிமிடங்கள் தேவை.
➢ ஆனால் பயிற்சி செய்ய தினமும் 5 நிமிடங்களே போதும்.
➢ ஒரு மணி நேரம் யோகா செய்து கிடைக்கும் ஆற்றலை, சக்தியை, 5 நிமிடத்தில் எடுக்கலாம்,
➢ இது டாய்சி வகையை சேர்ந்தது.
➢ இந்த தியானம் காரில், பஸ்ஸில், விமானத்தில், அலுவலகத்தில், மற்றும், எல்லா இடங்களிலும் செய்யலாம்
➢ யோகா செய்ய எனக்கு நேரம் இல்லைங்க. என்று கூறுபவர்களுக்கு இது மிகவும் சிறந்த பயிற்சி.
➢ இதை கற்றுக்கொள்ள ½ மணி நேரம் தேவை.
➢ இதற்கு அமருவதிற்கு இடமிருந்தால் போதும்.
 
ஜோதி திரட்டகம் (Jothi Thratagam)
➢ இதை இருண்ட அறையில் செய்ய வேண்டும்.
➢ ஜோதி திரட்டகம் செய்தால் புத்தி சிறப்பாக வேலை செய்யும். புத்திக்கு வேலை கொடுக்கும்,கம்ப்யூட்டர் இன்ஜினியர்கள், வியாபாரிகள் ஆகியோருக்கு மிகவும் சிறந்த பயிற்சி.
➢ இதை கற்றுகொடுக்க 15 நிமிடங்கள் தேவை.
 
உலக அரசியல் (World Politics)
➢ இதுவரை உலகத்தில் யாருக்கும் தெரியாத,யாரும் பேசாத நம்ப முடியாத, உண்மையான உலக அரசியலைப் பற்றி தெளிவுபடுத்துகிறோம்.
➢ உலகில் உள்ள எல்லா வியாதிகளுக்கும், கெட்ட விசயங்களுக்கும், போர்களுக்கும்,மதச்சண்டைகளுக்கும், பொருளாதார வீழ்ச்சிகளுக்கும், சாதிச்சண்டைகளுக்கும் 13 பேர் தான் காரணம்.
➢ இந்த 13 பேர்களுக்கும் இலுமிநாட்டி என்று பெயர் மற்றும் சீக்ரெட் சொசைட்டி என்று பெயர்.
➢ காந்தி, ராஜீவ்காந்தி, இந்திரா காந்தி, சஞ்சய் காந்தி, பாகிஸ்தானின் பூட்டோ குடும்பத்தினர், விடுதலைப் புலி தலைவர் பிரபாகரன், பிரேமதாசா, சதாம் உசேன், பின் லேடன், டயானா, அமெரிக்க ஜனாதிபதி ஆப்ரகாம்லிங்கன், ஜான் கென்னடி, ஹிட்லர், நெப்போலியன், சுபாஷ் போஸ், வீரசேவார்க்கர் மற்றும் பல லட்சம் பேரையும் கொன்றது இந்த இலுமினாட்டிகள்தான்.
➢ உலகில் உள்ள எல்லா வங்கிகள், அரசியல் கட்சிகள், சோப்பு, பற்பொடி போன்ற நுகர்வோர் பொருட்கள் கம்பெனிகள், TV கள் , பத்திரிக்கைகள், இணைய தளங்கள், மீடியாக்கள், பெட்ரோல் கம்பெனிகள், பணம் அச்சடிக்கும் கம்பெனிகள், பங்குச்சந்தை, போக்குவரத்து துறை, கம்பெனிகள், மாபியா கேங் எனப்படும். தீவிரவாத இயக்கங்கள், மருந்து, மாத்திரை கம்பெனிகள், உணவு மற்றும், குடிக்கும் பானங்கள் என உலகில் உள்ள எல்லா வியாபார நிறுவனங்களுக்கு இவர்கள் தான் முதலாளிகள்.
➢ இவர்கள் அனுமதி இல்லாமல், பூமியில் ஒரு அணுவும் அசையாது.
➢ இவர்கள் கும்பிடும் கடவுளின் பெயர் லூசிப்பர்..
➢ பைபிளில் சொல்லப்பட்ட 666 என்ற என்னை சார்ந்த சாத்தான்கள் இவர்கள்தான்.
➢ குரானில் சொல்லப்பட்ட டெஜ்ஜால் என்ற ஒற்றைக்கண்ணன் இவர்கள்தான்.
➢ அமெரிக்க டாலரில் ஒற்றைக்கண், 13 நட்சத்திரங்கள் மற்றும் 13 அடுக்கு பிரமீடு இருக்கும். இது தான் அவர்கள் குறியீடு.
➢ இவர்களின் திட்டம் உலகில் உள்ள 750 கோடி மக்களில் 140 கோடி மக்களை நோய்கள், போர் போன்ற செயல்கள் மூலம் கொலை செய்துவிட்டு 12 கோடி முட்டாள் மக்களை மட்டும் வைத்து ஒரே மதம், ஒரே பணம், ஒரே நாடு, ஒரே ராணுவம், ஒரே மொழி என்று ஆட்சி செய்வது.
➢ இவர்கள் திட்டத்திற்கு பெயர் "THE WORLD NEW ORDER" “ உலகின் புதிய திட்டம் “.
➢ இவர்கள் யார். எங்கே இருக்கிறார்கள், பொது மக்களாகிய நாம் இவர்கள் திட்டத்தை எப்படி முறியடித்து நாம் நிம்மதியாக வாழ்வது என்பதை கற்றுக்கொடுக்கப்படும்.
➢ உலகம் அமைதியாக இருக்க வேண்டும் என்றல் பொது மக்களாகிய நாம் நமக்குள் ஒற்றுமையாக இருக்க வேண்டும்.
➢ இதைப்பற்றி சுருக்கமாக பேச 1 மணி நேரமும் விரிவாக பேச 10 மணி நேரமும் தேவைப்படும்
 
பங்குச் சந்தை ( Share market)
➢ பங்குச் சந்தை ( Share market) என்றல் என்ன? இதை இயக்குபவர்கள் யார்? இதில் பணத்தை முதலீடு செய்யலாமா? லாபம் கிடைக்குமா? பங்குகள் ஏன் விலை குறைகிறது? விலை உயர்கிறது? மியூச்சுவல் பண்டு என்றால் என்ன? வருங்காலத்தில் பங்கு சந்தை என்ன ஆகும்? என்பன போன்ற பல கேள்விகளுக்கும் சரியான பதிலை கூற முடியும்.
➢ பங்குச் சந்தை என்பது பேராசை பிடித்த முட்டாள் மக்களின் பணத்தை திருடுவதற்காக இலுமினாட்டிகளால் நடத்தப்படும் ஒரு நூதன, hi –tech, திருட்டு.
➢ இதுவரை பங்குச் சந்தையில் முதலீடு செய்த 1000 பேரில் ஒருவருக்கு மட்டுமே லாபம் கிடைத்துள்ளது. மீதமுள்ள 999 பேரின் பணத்திற்கு அல்வா கொடுக்கப்பட்டுள்ளது.
➢ பங்குச் சந்தையின் உண்மையான ரகசியத்தை நீங்கள் தெரிந்து, புரிந்து கொள்வதற்கு முன்னரே சொத்துகளை இழந்து ஆண்டியாக, போண்டியாக ஆகிவிடுவீர்கள்.
➢ பங்குச் சந்தை என்பது உடல் உழைப்பு இல்லாமல் பணம் சம்பாதிக்க நினைக்கும் சோம்பேறிகளுக்கும் தரும் தண்டனை
➢ தயவுசெய்து நான் கூறும் அறிவுரைகளை கேட்காமல் பங்குச் சந்தையில் முதலீடு செய்யாதீர்கள்.
➢ இதைப்பற்றி பேச மொத்தமாக 1 மணி நேரம் தேவை.
 
நியூரோதெரப்பி பயிற்சி ( Neuro Therapy Training )
➢ நியூரோதெரப்பியில் எந்த ஒரு மருந்து மற்றும் மாத்திரை கிடையாது. .
➢ இந்தியாவில், மும்பையில் உள்ள Dr. லெஜ்பதிராய் மெஹ்ரா என்பவரால் கண்டுபிடிக்கப்பட்ட புதிய பயிற்சி.
➢ மூளை வளர்ச்சி குறைவு, ஆட்டிசம், டவுன் சிண்ட்ரோம், மன நோய்கள், தூக்கமின்மை, முதுகு, மூட்டு, இடுப்பு, கழுத்து வலிகள், மஸ்குலர் டிஸ்ட்ரோப்பி போன்றவற்றை மருத்துவம் செய்து குணப்படுத்த முடியாது என்று படித்த மேதவிகள் சொல்லும்நோய்களை நியூரோதெரப்பி மூலம் குணப்படுத்த முடியும்
➢ இதை கற்றுக் கொள்ள படிப்பு தேவையில்லை ஆர்வம் மட்டுமே போதும்.
➢ எங்களை அழைத்தால் உங்கள் நாட்டிற்கே, உங்கள் ஊருக்கே வந்து கற்றுக்கொடுக்க முடியும்.
➢ இதற்கு தினமும் 3 மணி நேரமாக 10 நாட்கள் தேவைப்படும்.
 
அமைதியும் ஆரோக்கியமும் – மாத இதழ் பத்திரிக்கை
➢ இது நமது சொந்த பத்திரிக்கை.
➢ மாதம் ஒருமுறை வெளியிட்டுவருகிறோம்.
➢ ஒவ்வொரு மாதமும் நாம் புதிதாக கற்றுக்கொள்ளும் அமைதி மற்றும் ஆரோக்கியம் சம்மந்தமான விஷயங்களை எழுதி அனுப்புகிறோம்.
➢ ஆகஸ்டு 2013 முதல் வெளியீட்டு வருகிறோம்.
➢ இந்த பத்திரிக்கைதான் உங்களையும் எங்களையும் இணைக்கும் பாலம்.
➢ இணையதளத்தில் இலவசமாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
➢ ஒவ்வொரு மாதமும் வித்தியாசமான பல தலைப்புகளில் கட்டுரைகள் வெளியாகும்.
➢ உங்கள் கட்டுரைகளை புகைப்படத்துடன் எங்களுக்கு எழுதி அனுப்புங்கள். நல்ல விசயமாக இருந்தால் புத்தகத்தில் வெளியிடப்படும்.
➢ வருட சந்தவை செலுத்தி இணைந்து கொள்ளுங்கள்.
 
முக்கிய குறிப்புகள்
➢ “ யான் பெற்ற இன்பம் பெருக வையகம் “ என நாம் எப்படி உலகப்பொது மக்களுக்கு பிரச்சாரம் செய்கிறேனோ. அதை போல் உங்கள் ஊரில் நம் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்யுங்கள். புத்தகம், DVD, CD- ஐ காப்பி செய்து இலவசமாக மற்றவர்களுக்கு கொடுங்கள். எனது புத்தகம் DVD, CD எதற்கும் காப்பி ரைட் கிடையாது பென்டிரைவ், பிளாஸ் மற்றும் ஹார்டு டிஸ்கில் இலவசமாக காப்பி செய்து கொடுக்கலாம்.
➢ நாம் கூறும் விசயங்களை யார் வேண்டுமானாலும், எங்கு வேண்டுமானாலும் என் அனுமதி இல்லாமல் பேசலாம், எழுதலாம்.
➢ கேபிள் டிவி, சேட்டிலைட் டிவி, ரேடியோ, FM போன்ற மீடியாக்களில் ½ மணி நேரம் அல்லது 1 மணி நேரத்தை புக்செய்து என்னை அழைத்தால் நான் நேரில் வந்து லைவ்வாக (live) பேசுவேன். இதற்கு உதவி செய்பவர்களுக்கு மீடியாவில் நன்றி சொல்ல கடமைபட்டுள்ளேன்.
➢ நமது வீடியோவை என் அனுமதி பெற்று TV-ல் இலவசமாக ஒளிபரப்பு செய்யலாம்.
➢ போன்ற இடங்களுக்கு வந்து நேரில் நிகழ்ச்சி நடத்த முடியும். பள்ளி, கல்லூரி, அசோசியேசன்
➢ நமது நிகழ்ச்சியை 1 மணி நேரம் முதல் 5 நாள்கள்வரை நடத்த முடியும் எனவே உங்கள் ஊரில் உங்களுக்கு எவ்வளவு நேரம் ஒதுக்க முடியுமோ அதற்கு ஏற்றாற்போல் சுருக்கமாகவும் விரிவாகவும் பேச முடியும்.
➢ உலக மக்களுக்கு நல்ல விசயத்தை, அமைதியை, ஆரோக்கியத்தை கொடுக்க 30 ஊழியர்களுக்கு சம்பளம், அலுவலக வாடகை, இணைதள கட்டணம், போக்குவரத்து செலவு, போன் பில் என 2014 ஆகஸ்டு மாதம் கணக்குப்படி மாதம் 6 லட்சம் இந்திய ரூபாய் தேவைப்படுகிறது. எனவே மன முள்ளவர்கள் பொருளாதார உதவி செய்யலாம்.
➢ நமது புத்தகம், ஆடியோ, மற்றும் வீடியோவை அரபிக், சைனீஸ், போன்ற அனைத்து உலக மொழிகளிலும் மொழி மாற்றம் செய்ய வேண்டியது உள்ளது. எனவே ஒவ்வொரு மொழிக்கும் யாரேனும் பொறுப்பேற்றால் நன்றாக இருக்கும்.
➢ நாம் பிறந்தோம், சாப்பிட்டோம், வளர்ந்தோம், சம்பாதித்தோம், கல்யாணம் செய்தோம், பிள்ளைகளை பெற்றோம், வேலைக்கு சென்றோம், சுய நலமாக வாழ்ந்தோம், இருந்தோம் என சாதரணமாக வாழாமல் அனைவரும் ஒருநாளில் ஒரு மணி நேரமாவது சமுதாய சேவை செய்தால்......
அமைதியான உலகம், ஆரோக்கியமான மனிதர்கள்.
அன்பு, கருணை, உலக அமைதி எல்லாம் நம் கையில் – வாழ்க வையகம் எண்ணம்போல் வாழ்க்கை.